|
Photo: Srividya Raman |
பீடத்தில் ஏற்றி வழிபட்ட விநாயகரை வழியனுப்பும் நாள் -நேற்றும் இன்றும். பட்டிணப் பாக்கம் கடற்கரை பக்கம் சென்றிருந்தோம். பக்தர்கள் கூட்டத்தில், க்யூவில் காத்திருந்தார்கள், ஆயிரக் கணக்கான பிள்ளையார்கள். இருட்டும் வரை பார்த்திருந்தோம். கண்ணுக்கெட்டா தொலைவு வரை கணபதி ஊர்வலம்தான். திரும்பி வந்த வழியெங்கும் வந்து கொண்டிருந்தார்கள் வகை வகையான விநாயகர்கள்.
மாலை நேர வானத்தில் நம் தலைக்கு மேல் வட்டமிட்டு பறந்த விநாயகர் தரிசனம் கண் கொள்ளா காட்சி.(Video by Srividya Raman) |
வெங்கட் நாராயணா ரோட்டின் V.I.P. பிள்ளையாரும், வழிகிடைக்காதா கடற்கரைக்கு என்று வண்டியை நிறுத்தி காத்திருந்தார்.
|
Photo: Srividya Raman தேங்காய் கொப்பரையில் செய்யப் பட்ட media darling பிள்ளையார்
Eco-friendly எள்ளு பிள்ளையாரும் அடுத்த வரிசையில் நின்றிருந்தார்.
மண்ணால் செய்யப் பட்ட பிள்ளையார்களை மட்டும் ஏனோ மண்ணிலேயே போட்டு விட்டிருந்தார்கள்.
நாங்கள் பீச்சில் இருந்த இரண்டு மணி நேரத்தில், கடலில் கரைக்கப் பட்ட ராட்சச பிள்ளையார்களில் இருவர்தான் பசுமை பிள்ளையார்கள். மற்ற வேழ முகத்தொரெல்லாம் plaster of paris ல் தான் காட்சி தந்தார்கள். அடுத்த வருடமாவது இந்த நிலை மாற அந்த மூஞ்சுறு வாகனர்தான் அருள்புரிய வேண்டும்.
Photo: Srividya Raman
மூஞ்சுறுக்கும் மோட்சம் உண்டு
|
Photo: Srividya Raman
க்யூவில் பிள்ளையார்கள்
|
Photo: Srividya Raman |
|
Photo: Srividya Raman |
|
Photo: Srividya Raman |
|
Photo: Srividya Raman |
|
Photo: Srividya Raman
Photo: Srividya Raman
Elephant Gate பகுதியிலிருந்து வந்த படகு விநாயகர்
|
|
Photo: Srividya Raman நீயும் நானும்......friends |
|
Photo: Srividya Raman |
|
Photo: Srividya Raman |
|
Photo: Srividya Raman |
பிள்ளையாரை ஏற்றி வந்த வாகனங்கள், மணலில் சிக்கி, திரும்பி செல்ல முடியாமல் தவித்தன. அந்த வண்டிகளை மீட்டு, அனுப்பவும் ராட்சத Crane பயன்படுத்தப் பட்டது. வண்டிகள் வந்து திரும்ப தகர sheet செய்யப் பட்ட ஒரு தற்காலிக பாதை அமைத்தால் விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்படும் தாமதம் குறையும்.
Bye... bye Ganesa. Meet you next year.
No comments:
Post a Comment