வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று நகர் உலா செல்வது வழக்கம். பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் விநாயகர் தரிசனம், காணக் கிட்டாத காட்சி. சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் வழக்கமாக பிரதிஷ்டை செய்யப் படும் கணேசர் ரொம்ப popular. கண்டிப்பாக அந்த விநாயகர் சிலைகளுக்கு press coverage உண்டு. அத்தகைய இடங்களில் ஒன்றுதான் வெங்கட் நாராயணா ரோடில், JYM கல்யாண மண்டப வாசல். பிரமாண்டமான விநாயகர், தத்ரூபமாக காட்சி தருவார். அந்த விநாயகருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. Plaster of Paris ல் செய்யப் பட்ட விநாயகர் அல்லர் அவர். காய்கறி, பழங்கள், தானியங்கள்...இப்படி பலவித உணவு பொருள்களால் செய்யப் படும் green & eco-friendly விநாயகர். இந்த வருடம் தேங்காய் கொப்பரையால் செய்யப் பட்ட விநாயகர் தரிசனம் தந்தார்.
Photo: Srividya Raman தேங்காய் கொப்பரை விநாயகர் |
சென்ற வருடம் அதே இடத்தில் பேரிச்சம்பழ விநாயகர் அருள்பாலித்தார்.
Photo: Srividya Raman பேரிச்சம்பழ விநாயகர் |
கோடம்பாக்கம் பகுதியில் வெள்ளை எள்ளில் செய்யப் பட்டிருந்தார்.
Photo: Srividya Raman எள் விநாயகர் |
அதே கோடம்பாக்கத்தில் எள்ளில் செய்யப் பட்ட இன்னொரு விநாயகர்.
Photo: Srividya Raman இன்னொரு எள் விநாயகர் |
கோடம்பாக்கத்திலிருந்து ஆர்ய கௌடா ரோடு பக்கம் சென்று கொண்டிருந்தபோது ஓர் அருமையான தரிசனம். சிறுவர்கள் தூக்கி வந்த பல்லக்கில் ஒய்யாரமாக வீற்றிருந்தார் களிமண் பிளையார்.மூன்றடி உயர சிறுவர்கள் தோளில் ஓரடி உயர பிள்ளையார்./ சிறுவரோ, பெரியவரோ....பாகுபாடின்றி அருள் பாலிக்கும் friendly கடவுள் நம்ம Ganesh மட்டும்தான்.
Photo: Srividya Raman களிமண் வினாயகர் |
Photo: Srividya Raman சிறாரும் கணேஷ் பக்தர்களே |
Photo: Srividya Raman தீப ஒளி ஏந்திய சிறுவன் |
இனி வரும் காலங்களில் இந்தியா முழுவதும் eco - friendly விநாயகரை வைத்து வழிபாடும் நிலை வந்தால் நல்லது. அந்த நாள் விரைவில் மலர விநாயகர் அருள் புரியட்டும்.
No comments:
Post a Comment