" ஒரு வட்டாரத்தில் (limited geographical area),ஏற்படும் வியாதிக்கான மருந்து அதே இடத்திலேயே விளையும்."
" மருந்துக்கான மூலிகை செடிகளை தேடி வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை " என்பது ஆயுர்வேதத்தின் பால பாடம். குப்பை மேனி, கீழாநெல்லி போன்ற அரிய மூலிகைகள் எல்லாம் தானாக விளைபவை. எந்த விஞ்ஞானியும் கலப்பின மூலிகை செடி (Hybrid Herbal Plant) உருவாக்க வேண்டியதில்லை.
அதே போலதான், நமக்கு உணவாகும் காய்கறி, பழ செடிகளும். சேலம் என்றதும் மாம்பழம் நினைவுக்கு வரும். திருச்சிக்கு அருகாமை பகுதிகளில் விளையும் சிறிய வகை கொய்யா நல்ல சுவை தரும். மதுரை என்றால் மல்லி. கும்பகோணத்தில் விளையும் குண்டு கத்தரிக்காய்...கொழுந்து வெற்றிலை...ஒட்டன்சத்திரம் கத்தரிக்காய்......பண்ருட்டி பலா....திண்டுக்கல் சிறுமலைப் பழம்....
இவையெல்லாம், நாட்டு செடிகள் (Native Plants, Indigenous Plants or Heirloom Plants) என்று அழைக்கப் படுகின்றன. அதாவது இவையெல்லாம் கலப்பின செடிகள் (Hybrid Plants) அல்ல.
இத்தகைய நாட்டு செடிகள் தந்த உணவு மருந்தாகவும் வேலை செய்தது. கலப்பின செடி தந்த உணவு வியாதி தந்தது.
நாட்டு செடிகள் மகரந்த சேர்க்கையால் இனப் பெருக்கம் (Pollination) செய்கின்றன. இதற்கு உறுதுணையாக வண்டுகள் தேனீக்கள் , வண்ணத்துப் பூச்சிகள் செயல்படுகின்றன. நாட்டு செடி விளையும் தோட்டத்தில் புழுக்களுக்கும் பொன் வண்டுகளுக்கும் கூட வாழும் சூழல் இருந்தது. புழுக்களை உணவாக்கும் பறவைகள் வாழ்ந்தன. பறவைகளின் எச்சத்தில் இருந்து கூட சில செடிகள் முளைத்தன.மொத்தத்தில் நாட்டு செடிகள் ஒரு வாழ்வியல் சூழலை ஏற்ப்படுத்தி இருந்தன.
கலப்பின செடிகளுக்கும், மகரந்த சேர்க்கைக்கும் ஸ்நான ப்ராப்தி கூட கிடையாது. பல செடிகளின் குணங்களை இணைத்து, சோதனை கூடத்தில் உருவாக்கம் பெறுகின்றன, கலப்பின விதைகள் (Hybrid seeds). அவற்றிலிருந்து விளையும் உணவை உண்ணும் நாமும் ஒரு விதத்தில் சோதனைக் கூட எலிகள் தான் (laboratory rats).
பல்வேறு இடங்களிலிருந்து, நாடுகளில் இருந்து காய்கறி, பழங்களை இறக்குமதி செய்கிறோம். வேறுபட்ட சீதோஷ்ண நிலையில் விளைந்த உணவுகளை நம் உடல் ஒப்புக் கொளவதில்லை. அதே போலதான் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து வளர்க்கப் படும் செடிகளும், கலப்பின செடிகளும்.
கலப்பின செடிகள் வியாபாரிகளுக்குத்தான் நன்மை பயக்கும். நமக்கு நன்மை தருபவை நாட்டு செடிகள்தான்.
வியாபாரத்திற்காக பயிரிடும் முறை வேறு. நம் வீட்டு உபயோகத்திற்காக பயிரிடும் முறை வேறு என்பதை முதலில் நாம் உணர வேண்டும். உதாரணத்திற்கு தக்காளியை எடுத்து கொள்வோம். கலப்பின தக்காளி கெட்டியாக (fleshy) இருக்கும். சீக்கிரம் கெட்டுப் போகாது. பார்க்க அழகாக இருக்கும். பார்க்க ஒன்றுபோல் (uniform appearance) இருக்கும்.ஆனால் சுவை குறைவாக இருக்கும். Pack செய்ய எளிதாக இருக்கும் என்று, செவ்வக வடிவில் கூட கலப்பின தக்காளி உருவாக்கி இருக்கிறார்கள்.
நாட்டு தக்காளி, நீர்சத்தோடு (juicy) இருக்கும். சிறியதும், பெரியதுமாக பார்க்க அழகாயிருக்காது. ஆனால் லேசான புளிப்பு மற்றும் இனிப்போடு தூக்கலான சுவை இருக்கும்.
வியாபார நோக்கில், பெரிய பரப்பளவில் ஒரே வகை காய் அல்லது பழவகை பயிரிடப் படும். அந்த மண்ணின் தன்மை என்ன, தண்ணீரின் தன்மை என்ன, அருகில் ஏதாவது மாசு தரும் தொழில் பகுதி (pollutant industries) இருக்கிறதா என எதுவுமே நமக்கு தெரியாது.
நாட்டு செடிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் பெற்றவை. வறட்சியை தாங்கும் தன்மை நாட்டு செடிகளுக்கு உண்டு. நாட்டு செடிகளுக்கு மருத்துவ குணம் உண்டு. நிலத்தை வளப் படுத்தும்.
இவற்றையெல்லாம் உணராமல், நாமும் வியாபாரி போல், நம் வீட்டு தோட்டத்தில், கலப்பின செடிகளை பயிரிட்டு அவற்றை உரமும் போட்டு வளர்க்கிறோம்.
இவற்றையெல்லாம் உணராமல், நாமும் வியாபாரி போல், நம் வீட்டு தோட்டத்தில், கலப்பின செடிகளை பயிரிட்டு அவற்றை உரமும் போட்டு வளர்க்கிறோம்.
நாட்டு செடிகள்
குறிப்பிட்ட பகுதியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பயிரிடப் பட்டு வரும் செடிகளை தான் நாட்டு செடிகள் என்கிறோம். நம் மண் வளம், தட்ப வெப்ப நிலை, நீர்வளம் ஆகியவற்றிற்கு, நாட்டு செடிகள் தம்மை பழக்கப் படுத்தி இருக்கும். அவற்றிற்கு அதிக உரமோ, பூச்சிக் கொல்லிகளோ தேவை படாது. குறைந்த பட்சம் 40 வருடங்களாக கலப்பு செய்யாமல், இயற்கை மகரந்த சேர்க்கை மூலம் பயிர் செய்யப் பட்டு வரும் செடிகள், நாட்டு செடிகளாகும்.
நாட்டு செடிகளுக்கு மாற்றாக நாம் வெளிநாட்டு செடிகளையும், கலப்பின (Hybrid) செடிகளையும் ஆதரித்து வருகிறோம்.
செடிகளின் சமுதாய வாழ்க்கை
மனிதனை ஒரு சமுதாய விலங்கு (Man is a social animal) என்பார்கள். அக்கம் பக்கம் இருக்கும் மனிதர்களோடு ஒருவருக்கு இருக்கும் தொடர்பு, சொந்தங்கள், நண்பர்கள் இல்லாமல் ஒரு மனிதன் இல்லை.
உங்களுக்கு தெரியுமா? நாட்டு செடிகளுக்கும் ஒரு சமுதாய வாழ்க்கை உண்டு. ஒரு பகுதியில் விளையும் மற்ற பயிர் வகைகள், பூச்சிகள் ஆகியவற்றோடு ஒத்துப் போகும் தன்மை நாட்டு செடிகளுக்கு உண்டு. ஒரே பிரதேசத்தில் பல வருடங்களாக விளையும் நாட்டு செடிகளை அருகருகில் வளர்த்தாலும் ஒன்று மற்றதை அழிக்காது. தட்டான் பூச்சி, தவளைகள் என பல உயிரினங்கள் இந்த செடிகளை சார்ந்து வாழும். இந்த உயிரினங்கள் கொசுக்களை கூட கட்டுப் படுத்தும்.
ஆனால் கலப்பின செடிகளும், பிற பகுதிகளில் இருந்து இங்கு கொணர்ந்து வளர்க்கப் படும் வெளிநாட்டு செடிகளும் robot போன்றவைதான். அவற்றிற்கென பயிர் சமுதாயம் கிடையாது. அவை நம் நாட்டு செடிகளை அழித்து விடும் தன்மை கொண்டவை. உதாரணத்திற்கு யூகலிப்டஸ் மரத்தை குறிப்பிடலாம்.
அன்னிய செடிகளும் அவை தரும் allergy நோய்களும்
பயிர்களின் மகரந்த சேர்க்கை இரு விதங்களில் நடக்கிறது. தேனீ, வண்டு மூலமாக நடக்கும் மகரந்த சேர்க்கை முதல் விதம். காற்றின் மூலம் நடக்கும் மகரந்த சேர்க்கை இரண்டாவது விதம். மகரந்த தூள் (pollen) காற்றில் பரவுவது தான் பல allergy நோய்களுக்கு காரணமாகிறது. பெரும்பாலும் மலர்கள்தான் காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை செய்கின்றன. அதிலும் குறிப்பாக வெளி நாட்டு மலர் செடிகள் தான் காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை செய்கின்றன. நாட்டு செடிகள் உயிர் இனங்கள் மூலமே மகரந்த சேர்க்கை செய்வதால், அவை allergy நோய் ஏற்படுத்துவதில்லை.
வீட்டு தோட்டத்தில் நாட்டு செடிகள்
ஆரோக்கியமான வாழ்வு, சுவையான உணவு, சுற்று சூழலுக்கு உகந்த பயிர் வகைகள் - இவற்றை விரும்புவோர், வீட்டு தோட்டத்தில் நாட்டு செடிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் வண்ணத்துப் பூச்சியை பார்த்திருக்கிறீர்களா? பொன்வண்டு தெரியுமா? தட்டான் பூச்சி இருக்கிறதா? தவளை சத்தம் கேட்கிறதா? அக்கா குருவியின் ராகத்தை கேட்டிருக்கிறீர்களா? மண்புழுவை கண்டிருக்கிறீர்களா? அட...atleast மண்ணாவது இருக்கிறதா, உங்கள் வீட்டை சுற்றி?
இவை எல்லாம் கிராமத்து வாழ்வில் தான் சாத்தியம் என்று நினைப்பவரா நீங்கள்? வருந்துகிறேன் நண்பர்களே? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நகர வாழ்விலும் இவை எல்லாம் சாத்தியமே. எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும், வீட்டை சுற்றி வீட்டு தோட்டம் ஒன்று உருவாக்குங்கள். நாட்டு செடிகளை தேடி பயிர் செய்யுங்கள். பறவைகளை வரவேற்க, ஒரு சிறிய பறவை கூட்டினை வீட்டு தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வையுங்கள். அதில் கொஞ்சம் organic தானியங்களை போட்டு வையுங்கள். இருக்கும் சிறிய பொது இடத்தையும் concrete போட்டு மூடாதீர்கள்.
நாட்டு செடிகளுக்கு எங்கே போவது? நாட்டு விதைகள் எங்கே கிடைக்கும்? சொல்வேன்....அடுத்த post வரை, wait please!
2 comments:
Very Very useful information you have given. God is really great who has provided everything around us to take care of us. Nice...Very nice...
Can u translate in English, plaese.
Thanks
Post a Comment