சாட் மசாலா |
இதுவரை தென்னிந்திய, பாரம்பரிய உணவுகள் பற்றி தான் எழுதி வந்தேன். குறிப்பாக Organic உணவுகள், உடல் நலத்துக்கு உகந்த உணவுகள் பற்றி எழுதுவதே என் நோக்கம். வட இந்திய உணவுகள் பற்றி யோசித்த போது ஓர் எண்ணம் தோன்றியது. வட இந்திய உணவோ, தென்னிந்திய உணவோ, உணவு தயாரிப்பின் அடிப்படை அம்சம் ஒன்றுதான். கோதுமையில் தயாரிக்கப் படும் வட இந்திய பராத்தா, மைதாவில் செய்யப் படும் பரோட்டாவாக மாறுவதுதான் ஆபத்து. பாரம்பரிய முறையில் தயாரிக்கப் படும் வட இந்திய உணவுகளும் உடல் நலத்திற்கு உகந்தவையே. அந்த வகையில், சாட் மசாலா, பலவித நறுமண பொருள்கள் கலந்த, உணவு பொருள். செரிமானத்திற்கு உகந்தது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாம்பார் பொடி, ரச பொடி - இவற்றின் சாயல் சாட் மசாலாவில் தெரிகிறது. பயன் படுத்தும் முறையில் தான் வேறுபாடு.
தலை வாழை விருந்தில் விரைவில் வரப் போகும், நவராத்திரி சிறப்பு உணவுகள் சிலவற்றில் இந்த சாட் மசாலா பொடி பயன்படும் என்பதால், சாட் மசாலா செய்முறை முதலில் தரப் படுகிறது.
தேவையான பொருள்கள்
காஷ்மீர் மிளகாய் - 10
வர மிளகாய் - 5
வர மிளகாய் |
காஷ்மீர் மிளகாய் |
தனியா - 7 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டிதூள் பெருங்காயம் - சிறிதளவு
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
காய்ந்த புதினா இலை - 2 தேக்கரண்டி
மாங்காய் தூள் (Amchur) - 4 தேக்கரண்டி
ராக் சால்ட் (இந்துப்பு) - தேவைக்கேற்ப
காஷ்மீர் மிளகாயில் காரம் இருக்காது. ஆனால் நல்ல சிவப்பு நிறம் தரும். காஷ்மீர் மிளகாய் ஓர் இயற்கை நிறமூட்டி. காஷ்மீர் மிளகாயின் நன்கு சிவந்த நிறம், அதிக காரம் இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். அந்த உணர்வே, வயிற்றுக்கு கெடுதல் இல்லாமல் ஒரு நிறைவான சுவையை தரும். அதற்காக தான் காஷ்மீர் மிளகாயை பயன் படுத்துகிறோம்.
பெருங்காயம், மாங்காய் பொடி, ராக் சால்ட் - இவற்றிலிருந்து கிடைக்கும் லேசான புளிப்பு சுவையும், அதற்கு நேர் எதிரான (மற்ற பொருள்களிலிருந்து கிடைக்கும்) காரமும் தான் சாட் மசாலாவின் தனி சிறப்பே.
ராக் சால்ட் அளவு, அதிகமாக தேவைப் படும். அதில் அதிக உப்பு சுவை இருக்காது.
ராக் சால்ட் அளவு, அதிகமாக தேவைப் படும். அதில் அதிக உப்பு சுவை இருக்காது.
காய்ந்த புதினா இலை |
மாங்காய் தூள் சுக்கு பொடி |
எப்படி செய்வது?
மேலே குறிப்பிட்ட பொருள்களில் பொடிகள், உப்பு தவிர, மீதமுள்ள பொருள்களை, வாணலியில் லேசாக சூடு காட்டவும். மிளகு, தனியா உள்ளிட்ட பொருள்களில் இருந்து ஒருவித வாசனை வரத் துவங்கும். உடனே வறுப்பதை நிறுத்தி விடலாம். பின் மிக்சியில் அரைக்கவும். தூள் பெருங்காயம், மாங்காய் தூள், காய்ந்த புதினா இலை, உப்பு இவற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும். அரைத்த பொடியை சலிக்கவும். சலித்த பொடியை, காற்று புகாத டப்பாவில் வைத்து பயன் படுத்தவும்.
பச்சடி வகைகளில் தூவ சாட் மசாலா பொடி பயன்படும். நாம் வழக்கமாக செய்யும் காய்கறி பொறியல் மீது தூவலாம். நல்ல வாசனையும், காரமும், கூடுதல் சுவையும் தரும். பக்கோடா, பஜ்ஜி போன்ற நொறுக்கு தீனிகள் மீதும் சாட் மசாலா தூவி சாப்பிடலாம். சூப் வகைகள், dahi-vada இவற்றின் மீதும் சாட் மசாலா தூவலாம்.
No comments:
Post a Comment