பச்சரிசி - ஒரு ஆழாக்கு (200 கிராம் )
புழுங்கல் அரிசி -50கிராம்
கடலை பருப்பு - 1/4 ஆழாக்கு (50 கிராம்)
துவரம் பருப்பு
கெட்டி மோர்
இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்...........
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை...............
மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம்.
தவல தோசை ........ செய்வது எப்படி?
முதலில் தவல தோசை பெயர் காரணத்தை பார்த்து விடுவோம். தவலை, உருளி என்று பலவிதமான பாத்திரங்களை புழங்கி வந்தனர் நம் முன்னோர். தவலையில் எண்ணெய் விட்டு மேலே சொன்ன தோசை மாவை வார்த்து, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தால் மூடி வேக வைத்து எடுத்ததால் தவல தோசை அல்லது தவலை தோசை என்று வழங்கப் பட்டது. தவலை நல்ல கனமாக இருக்கும். மேல் மூடியில் உள்ள தண்ணீரும் கொதித்து சூட்டை தருவதால் தோசை இருபுறமும் நன்கு வேகும். திருப்பி போட்டு வேக வைக்க தேவையில்லை. தாராளமாக எண்ணெய் விட்டு வேக வைப்பார்கள்.
வாணலி, தாவா, தோசை கல் போன்ற பாத்திரங்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன் இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
தவலைக்கு பதில் வெண்கல பானையும் பயன் படுத்துவார்கள்.
நான் இங்கே, வெண்கல பானை, வாணலி இரண்டிலும் செய்து காட்டி இருக்கிறேன்.
உப்புமா உடைசல் செய்வதுபோல், பச்சரிசி, புழுங்கல் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, இவற்றை mix செய்து உடைத்துக் கொள்ளவும்.
வெந்நீர் ஊற்றி கலக்கவும். அதிகம் வெந்நீர் ஊற்ற கூடாது. கெட்டியாக கலக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றினால் போதும்.
வெந்நீர் சூடு ஆறியதும் கெட்டி மோர் விட்டு நன்கு கலக்கவும். புளித்த தயிராய் எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கி அல்லது மிக்சியில் அடித்து கெட்டி மோர் தயார் செய்ய வேண்டும். தோசை மாவை விட சற்றே கெட்டியாக இருக்கும் அளவு மட்டும் மோர் விட வேண்டும்.
மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் இவற்றை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து லேசாக பொடி செய்து, கலக்கவும்.
இந்த கலவையை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை மிகச் சிறிய துண்டுகளாக்கி சேர்க்கவும். இஞ்சியையும் அவ்வாறே மிகச் சிறிய துண்டுகளாக்கி, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்க்கவும். கருவேப்பிலை, மல்லி தழைகளை பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். விரும்பினால் புதினாவும் சேர்க்கலாம். நன்கு கலக்கவும்.
ஒரு வாணலியை (குழி இலுப்ப சட்டி) சூடாக்கி இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவை ஊற்றவும்.
தோசை ஊற்றுவது போல் ஒரு கரண்டியால் மாவை இழுத்து விடவும்.
ஒரு புறம் வெந்ததும், திருப்பி போட்டு, மூடாமல் வேக விடவும். Crisp ஆக எடுக்கவும்.
தவல தோசை ரெடி |
இனி வெண்கல பானையில் தவல தோசை.......
வெண்கல பானையை அடுப்பில் வைத்து, சூடானதும் நிறைய நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் தவல தோசை மாவை ஊற்றவும். கரண்டியால் ஊற்றி லேசாக தேய்த்து விடலாம். வெண்கல பானையின் வாய் ஓரளவு அகலமாக இருக்கும். இருந்தாலும் கை சுட்டுக் கொள்ளாமல் ஊற்ற வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மூடவும்.
ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். மூடியில் உள்ள தண்ணீர் கொதித்து கொண்டிருக்கும். தண்ணீர் நம் மேல் கொட்டி விடாமல் கவனமாக திறக்க வேண்டும்.
இந்த முறையில் தோசையை திருப்பி போட வேண்டியதில்லை.
விரும்பினால் திருப்பி போட்டு மறுபுறமும் நன்கு வேக வைக்கலாம்.
நான் இங்கே காட்டி இருப்பது திருப்பி போட்டு வேக வைத்த தவல தோசை.
'தம்' பிரியாணி போன்ற வேக வைக்கும் முறை இது. இருபுற சூட்டில் தோசை நன்கு வேகும். சுவையும் நன்றாக இருக்கும்.
3 comments:
குறித்துக் கொண்டாயிற்று...
படங்களுடன் பகிர்வு சூப்பர்... நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
tha va la .... paattirkaana aarohanam pol ullathu. paattayum oru pidi pidikkalaam, intha dosaiyaiyum oru pidi pidikkalam. isssssss... dosai vaarkum osai en kaathil kettukonde irukkirathu. - sundaramg@gmail.com
http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html. பயன் தரும் பதிவு. Jump Break Settings தளத்தின் பார்வையாளர் வருகையை அதிகரிக்கும் என்பது எனக்கு புதிய தகவல். நன்றி.
Post a Comment