டிசம்பர் சீசன் 2016. இந்த மாதம் 14 ம் தேதிக்கு மேல் எல்லா சபாக்களும் களை கட்டி விடும். பிரபல பாடகர்கள் பாடும் மாலை நேர கச்சேரி, சென்னையின் பிரபல சமையல் கலைஞர்களின் கேண்டீன் கச்சேரி-இவற்றை தாண்டியும் பல விஷயங்கள் இந்த சங்கீத சீசனில் உண்டு. சீரியசான சங்கீதம் மட்டும் அல்ல. பல காமெடியான விஷயங்களும் அரங்கேறும். நாலைந்து பிரபல சபாக்கள் மட்டுமே நடத்துவது அல்ல இந்த சங்கீத கச்சேரி. திடீர் திடீர் என முளைக்கும் சின்ன சின்ன சபாக்கள், சீசனில் பாடுவதற்காகவே flight பிடித்து வந்து, மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, பாடி விட்டுப் போகும் N.R.I. கள், இரண்டு வருட பாட்டு கிளாஸ் முடிந்ததுமே மேடை ஏறத் துடிக்கும் வாண்டுகள் ....இன்னும் பல ரசிக்க வேண்டிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் அரங்கேறும்.
இதோ...உங்களுக்காக கலாட்டா கச்சேரி செய்ய வருகிறார் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்.
இனி.....over to.....
இதோ...உங்களுக்காக கலாட்டா கச்சேரி செய்ய வருகிறார் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்.
இனி.....over to.....
ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
கச்சேரி சீசன் ஆரம்பிக்கப் போகிறது. சபா விசிட் செய்யலாமா? காண்டீன் கச்சேரிகளை நிறையவே பார்த்தாகி விட்டது. ஒரு மாறுதலுக்கு சில கச்சேரி சங்கதிகளை பார்க்கப் போகிறோம் இந்த முறை. ஆனால் சத்தியமாக இதில் சங்கீதம் இருக்காது.
முதல் கச்சேரி:
ஒரு வெள்ளிக்கிழமை மாலை போன் கால் : உறவினர் மகள் லைனில். நான் **** சபாவில் பாடப்போகிறேன். வரும் சண்டே காலை 11.௦௦ மணி அளவில். கட்டாயம் வரவேண்டும். நானும் 'ஓகே' சொல்லிவிட்டேன். சனிக்கிழமை காலை மீண்டும் அதே போன்... அதே கோரிக்கை. ஓகே. சனிக்கிழமை மாலை மீண்டும் போன். நானும் ஓகே... இத்யாதி..இத்யாதி. இரவு பத்து மணிக்கு SMS. அட அப்படி என்ன கச்சேரி போய் பார்த்து விடலாம் என்று கிளம்பி விட்டேன்.
சபா வாசலில் முதலில் வரவேற்றது ஒரு water purifier company representative (Main Sponsor). கையில் சில notice மற்றும் கட்டாயமாக கொடுக்க பட்ட ஒரு தம்ளர் தண்ணீரை குடித்து விட்டு உள்ளே சென்றேன். மேடையில் ஒரு கும்பல் ஏறி எதையோ சரி செய்து கொண்டிருந்தது. நாங்களும் ஒரு fanக்கு கீழே இடம் பிடித்து வசதியாக உட்கார்ந்தோம். திடீரென உறவினரின் மனைவி எங்கிருந்தோ பார்த்து விட்டு வேகமாக எங்கள் அருகில் வந்தார்.
"என்ன இங்க உட்கார்ந்து விட்டீர்கள். முன் வரையில் வந்து உட்காருங்கள்."
"இல்ல இந்த இடமே சவுகரியமாக இருக்கிறது."
"இல்ல... இல்ல... நம்ம செட்டு எல்லாம் முன்னால் இருக்கிறது. இது வேற செட்டு"
(நம் mind voice) "என்ன பெரிய டபரா செட் ...ஷேவிங் செட்."
முன் வரிசைக்கு சென்றோம். சுத்தி முத்தி பார்த்தால் உறவினரின் மாமியார் மைத்துனி, அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள் etc. எனக்கு ஏதோ உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு வந்த feeling. மூன்று வரிசை முழுவதும் தெரிந்த முகங்கள். அடுத்த 6 வரிசைக்கு ஆள் கிடையாது. கடைசி 6 வரிசையில் சிதறலாக ஆட்கள்.
இரண்டே இரண்டு பாடல்களுடன் கச்சேரி இனிதே முடிந்தது.
என்ன விஷயம் என்றால்:
சபா (ஆடிட்டோரியம்) ஒருநாளைக்குதான் வாடகைக்கு எடுத்திருக்கிறார் அந்த பாட்டு டீச்சர். அவரே ஒரு சபாவும் நடத்துகிறார். தன்னிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் அத்தனை மாணவர்களையும் அடுத்து அடுத்து மேடை ஏற்றி சீசனில் பாட வைத்ததாக கணக்கு காட்டியாக வேண்டும். மொத்தமாக பக்கவாத்திய ஆர்ட்டிஸ்ட் பேசி கச்சேரி நடத்துகிறார்கள். உறவினர் மகள் மேடையை விட்டு எழுந்ததும் முன் வரிசை முழுவதும் காலி. கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்கள் எழுந்து முன் மூன்று வரிசைகளை நிரப்புகிறார்கள்.
tail piece: கச்சேரி செய்யும் பாடகர்களே audience ஐயும் அழைத்து வந்தது இங்குதான்.
கச்சேரி தொடரும்......
2 comments:
நல்ல ஹாஸ்யம்
நல்ல ஹாஸ்யம்
Post a Comment