நெல் விவசாயத்திற்கும் சரி, வீட்டு தோட்டத்தில் காய்கறி பயிரிடுவதற்கும் சரி, நாட்டு விதைகளே (country seeds, indigenous seeds, native seeds) சரியான தேர்வு. பாரம்பரிய விதைகளின் மூலம் விளைந்த அரிசி மற்றும் காய்கறிகளில் அதிக சத்தும், மருத்துவ குணங்களும் உண்டு.
சரி.....நாட்டு விதைகள் (அல்லது பாரம்பரிய விதை ) எங்கே கிடைக்கும். இதோ சில விவரங்கள் ....உங்கள் பார்வைக்கு.
திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பையில் வாடி வதங்கிய இரண்டு வெற்றிலை, லெமன் சைசில் ஒரு தேங்காய், ரொம்ப வேண்டியவர்களுக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். மேலே சொன்ன அதே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு புரட்சி செய்தார். அவர் தன் மகள் திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு கொடுத்த தாம்பூல பை சற்றே கனமானது. இரண்டு கிலோ இருக்கும். அத்தனையும் விதை நெல். அதுவும் பாரம்பரிய நெல் விதிகளான, மாப்பிளை சம்பா, கவுனி வகைகள். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 2 கிலோ விதை நெல் போதுமாம். பாரம்பரிய விதைகள் மீது இந்த அளவு ஆர்வம் கொண்டவர்களும் நம்மிடையே, இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சரி.....நாட்டு விதைகள் (அல்லது பாரம்பரிய விதை ) எங்கே கிடைக்கும். இதோ சில விவரங்கள் ....உங்கள் பார்வைக்கு.
தமிழ்நாட்டில், ஆண்டிற்கு இருமுறை, பாரம்பரிய அரிசி விதை திருவிழா நடைபெறுகிறது. C.R.E.A.T.E.(Consumer Research Education Action Training Empowerment) என்ற இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்த திருவிழாவை நடத்துகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம் என்ற ஊரில் இயங்கி வருகிறது இந்த மையம். இந்த மையத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்விதைகளில் 53 வகைகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள். விதை திருவிழாக்கள் மூலம் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் வசம் உள்ள பாரம்பரிய விதைகளை மற்றவர்களுக்கு வழங்கும் விதை பரிமாற்றமும் அப்போது நடக்கும். இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெயராமன் அவர்களை தொடர்பு கொள்ள - 04369-2209954, Cell: 94433 20954, E-mail: createjaya2@gmail.com.
இவர்களிடம் பாரம்பரிய காய்கறி விதைகளும் கிடைக்கும்.
இதே திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார்
நாட்டு காய்கறி விதை விரும்புவோர், திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை அணுகலாம். தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார் இவர். தொடர்புக்கு - 94428 16863.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், காய்கறி விதை வாங்க சிறந்த இடம். பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல்,கீரை வகைகள், பீர்க்கன் காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய விதைகள் இங்கே கிடைக்கும். காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். 0414 -2212538.
பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதை சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார் . 09008167819.
பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனை பணிகளை செய்து வருகிறது.
080-26784509, 9449861043,
FAX-080-26680995.
e-mail: green@greenfoundation.org.in
gfbangalore@gmail.com
earthbuddy@gmail.com
NAVDANYA-அமைப்பு இயற்கை முறையில் விளைந்த (organic), நாட்டு காய்கறி விதைகளை விற்பனை செய்கிறது. navdanya@gmail.com ல் தொடர்பு கொண்டு விதைகள் வாங்கலாம்.
2 comments:
மிகவும் உபயோகமான பதிவு.
நல்ல செய்தி
Post a Comment