இது வேறு ஓர் ஊரில் நடந்த கூத்து. நெருங்கிய உறவினரின் மகள் நாட்டிய அரங்கேற்றம். அவரை நம்ம X என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாதம் முன்பாகவே தொடங்கியது X குடும்பத்துக்கு சோதனை காலம். சில பத்து வருடங்களுக்கு முன்னர் கல்யாண வீடுகளில் போட்ட சம்பந்தி சண்டைகளை நினைவு படுத்தினார் நாட்டிய குரு.
குருதட்சிணையாக பெரிய ஆயிரங்களில் ஒரு தொகை, சில பவுன்களில் நகை, பட்டு புடவை என்று ஒரு லிஸ்ட், பக்க வாத்தியம் வாசித்த அனைவருக்கும் உடைகள் தனி list
சென்னையில் உள்ள ஒரு tailor பெயரை சொல்லி அவரிடம்தான் உடை தைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் குரு. அதற்காக சிங்கார சென்னைக்கு பலமுறை பயணப்பட்டார் நம்ம X
சென்னையில் உள்ள ஒரு tailor பெயரை சொல்லி அவரிடம்தான் உடை தைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் குரு. அதற்காக சிங்கார சென்னைக்கு பலமுறை பயணப்பட்டார் நம்ம X
அடுத்து வந்த நாட்களில் AC உள்ள அரங்கம் book செய்ய வேண்டும் என்றார் குரு. நகரின் ஒரு பெரும் புள்ளியை கைகாட்டி முதன்மை விருந்தினராக அழைக்க வேண்டும்
தான் சொல்லும் இடத்தில்தான் பத்திரிகை அடிக்க வேண்டும் என்றார். ( ஆயிரம் பத்திரிக்கை அடித்தார் நம்ம X. அதில் இன்னமும் கொஞ்சம் அவர் வீட்டு பரணில் கிடக்கிறது ). தன்னிடம் நடனம் கற்கும் பெண்கள் (நூற்று சொச்சம்) அனைவரையும் அழைக்க வேண்டும் என்றார் குரு. (மற்ற மாணவிகளுக்கு மறைமுகமான அறிவிப்பு. "நாளை உன் அரங்கேற்றத்துக்கும் இது போன்ற செலவுகள் செய்தாக வேண்டும். )
நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் இருக்கும்போது, "ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு வாரம் மொத்த ட்ரூப்புக்கும் உணவு சமைத்து அனுப்புங்கள்" என்றார் குரு. வேற வழி? புலி வாலை பிடித்தாகி விட்டதே. (ஊர் முழுவதும் பத்திரிகை விநியோகம் நடத்தியாகி விட்டது) செய்து தொலைப்போம் என்று ஒரு சமையல்காரரை நியமித்து, தினம் மூன்று வேளை உணவு அனுப்பினார் நம்ம X.
மறுநாள் மாலையில் நிகழ்ச்சி. முதல் நாள் காலை முதலே கார் வேண்டும் என்றார் குரு. எதற்கு என்று பார்த்தால் Beauty parlour போக வேண்டும் என்றார். தன பெண்ணைத்தான் அழைத்து போகப்போகிறார் என்று X நினைத்தால், குரு parlour சென்று காலோடு தலை தன்னை சிங்காரித்து கொண்டு அந்த பில்லையும் நம்ம Xன் தலையில் கட்டினார்.
உள்ளூரின் காலை நாள்ளித்ழ்கள் எல்லாவற்றிலும் கால் பக்கம் விளம்பரம். (நல்லவேளை அப்போது flex கலாச்சாரம் இல்லை) அத்தனை பேப்பரிலும் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் செய்தி வரவழைக்க வேண்டும் என்றும் கூறி விட்டார் குரு. செய்தியும் வந்தது.
மறுநாள் மாலை நிகழ்ச்சி இனிதே(?) தொடங்கியது. மண்டபம் கொள்ளாத கூட்டம். பாதிநிகழ்ச்சி நடக்கும் போதே பந்தி ஹால் திறந்து விடப்பட, கொஞ்சம் கூட்டம் அங்கே சென்று விட்டது. இதை ஓரக்கண்ணில் பார்த்ததும் வந்ததே பார்க்கணும் குருவுக்கு கோபம். இடைவேளையின் போது மேடைக்கு பின்புறம் சென்றார். மல்லாந்து படுத்து விட்டார் மாசாணி அம்மன் கணக்காய் காலை நீட்டி போட்டு.
மேடையில் நாற்காலிகளை போட்டு குருவை அழைக்கிறார்கள். கண் திறக்காமல் படுத்து கிடக்கிறார் குரு. "அக்கா ரொம்ப excite ஆகிவிட்டார்" என்றது கூட இருக்கும் ஒரு அல்லக்கை. இப்போதுதான் நம்ம Xக்கு வந்தது ஒரு வேகம். குருவின் காது படச் சொன்னார் ஒற்றை வாக்கியம். "இடைவேளையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது" என்று மைக்கில் அறிவிக்க போகிறேன் " என்றார். நிமிடத்தில் தெளிந்தது குருவின் மயக்கம்.
நிகழ்ச்சி ஒருவாறு முடிய, சாப்பிட்டு எல்லோரும் கிளம்பினார்கள், குரு நம்ம Xன் சின்ன மகளை பார்த்து சொன்னார் நீ கூட நடனம் கற்று கொள்ளலாமே என்று. நம்ம X "மறுபடியும் மொதல்லேருந்தா?" என்று நினைத்து மயங்காத குறை .
இதோடு விட்டதா?
மறுநாள் லோக்கல் சானல்கள் அனைத்திலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய செய்தி வரவழைக்கும் எக்ஸ்ட்ரா வேலை நம்ம Xக்கு. ஒரு சானலில் அரை மணி நேரம் தொகுத்து போட சொல்லிவிட்டார் குரு. அந்த சானலில் பணிபுரியும் நிர்வாகி ஒருத்தருக்கு பேங்க் லோன் ஒன்று arrange செய்து தருவதாக வாக்களித்து அரைமணி நேரம் slot பணம் கட்டி மேற்படி நிகழ்ச்சியை ஒளிபரப்ப வைத்தார் நம்ம X (ஹாங் சொல்ல மறந்துட்டேனே. ஒரு வங்கியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் நம்ம X).
பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நம்ம X இந்த அரங்கேற்றத்துக்கு செஞ்ச செலவு ஜஸ்ட் 5 லட்சம்தான். (இன்றைய மதிப்புக்கு எத்தனை லட்சம் என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள் )
பின்குறிப்பு:
X ன் மகள் தற்போது ஒரு Software கம்பெனியில் இஞ்சினியராக பணி புரிகிறார். நடனம் எல்லாம் ஈரோட்டுக்கு அடுத்த தூத்துக்குடி பக்கத்தில் இருக்கிறது என்கிறாள்.
Readers, Pl. share your comments