Saturday, 1 June 2013

நொடியில் ரெடி !

      

  பல்வகை      

         ப                  

         ழ                 

         ப்                  

  பச்சடி                   

                

ஆப்பிள்-1 

தேவையான பொருள்கள் 

நடுத்தர அளவிலான    
         வாழைப் பழம்-2.        

            



பன்னீர் திராட்சை-1/4 கிலோ 

     

கமலா  ஆரஞ்ச்-2 

சாத்துக்குடி-2 

                          

மாதுளை-1 

அன்னாசி பழ துண்டுகள்-4  

                                                               



 


பலா சுளைகள்-4 

   

பேரீச்சம் பழம்-50 கிராம் 


                     

காய்ந்த திராட்சை-50 கிராம்  




முந்திரி, பாதாம்-50+50 கிராம் 

வெல்லம்-1/4  கிலோ 


பனம் கல்கண்டு-50 கிராம்     

  


                                          செய்முறை                                         


மே லே குறிப்பிட்டுள்ள வாழை, ஆப்பிள் மற்றும் அன்னாசி பழங்களை, தோல் உரித்து,  மிகச் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளையும்  மிகச் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். பன்னீர் திராட்சை, சாத்துக்குடி மற்றும் கமலா ஆரஞ்சு இவைகளை தோல் உரித்து, விதை நீக்கி பொடிப் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும். மாதுளை முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். பலா சுளைகளை கொட்டை நீக்கி, சுளையின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் மெல்லிய சவ்வுகளையும் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும். விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் துண்டுகளாக்கவும்.  பனம் கல்கண்டு, வெல்லம் இவற்றை பொடிக்கவும். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கலக்கவும். பழங்களை நசுக்காமல் பாத்திரத்தை குலுக்கினால் பதினைந்து நிமிடத்தில் பழப் பச்சடி ரெடி.


                                                குறிப்பு 


 ழங்கள் அனைத்தும் organic பழங்களாக இருந்தால், சுவை கூடும். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இப்போது organic ஆப்பிள் கூட கிடைக்கிறது. பனம் கல்கண்டும் வெல்லமும் கூட organic variety ஆக இருப்பது நல்லது. குறிப்பாக  organic வெல்லம் உப்பு சுவை இல்லாமல் நல்ல இனிப்பாக இருக்கும். திண்டுக்கல் சிறுமலை பழம் கிடைத்தால் அற்புத சுவை சேரும்.மேற்கண்ட அளவு மூன்று பேருக்கானது.

ச ர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர அனைவரும் சாப்பிடலாம். குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள். இளம் வயதினருக்கு அதிக சக்தி தரும், சுவையான திடீர் உணவு இது. தர்பூசணி, கிர்ணி, பப்பாளி பழம் தவிர்த்து உங்களுக்கு பிடித்த எந்த பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு அளவு உங்கள் விருப்பத்தின் படி மாற்றிக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் இரவு, முழுப் பழ உணவாக சாப்பிடுவது  நல்லது என இப்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் குறித்த பயம் உள்ளவர்கள் இனிப்புகளை மட்டும் சேர்க்காமலும் பழப் பச்சடி செய்யலாம்.
                


       





  
      



     
                                                 

                                                   



     



               

     


               
                                             

                                                         




                                                   








                                                                                                           

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...