Sunday, 16 June 2013

மாங்காய் இனிப்பு பச்சடி

கோடை ஸ்பெஷல்--மாங்காய் இனிப்பு பச்சடி


தேவையான பொருள்கள் 

கிளி மூக்கு மாங்காய் -தோட்டாபுரி,
பேங்கலூரா என்றும் அழைக்கப் படுகிறது
 


தோ  ல் சீவி, பொடியாக நறுக்கிய மாங்காய்-
400 கிராம் 


வெ   ல்லம்- 375 கிராம்.




க        டுகு, உளுத்தம் பருப்பு-தாளிக்க.



செய்முறை 


மா  ங்காயை தோல் சீவி, பொடிப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய மாங்காயை அது மூழ்கும்
அளவிற்கு நீர் விட்டு, வேக வைக்கவும். மாங்காய் கூழ் ஆவதற்கு முந்தைய நிலையில் வேக வைப்பதை நிறுத்தவும். வேக வைத்த மாங்காயுடன் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.   கைவிடாமல் கிளறவும்.  வெல்லம் கரைந்து, சற்றே கெட்டியாகி, பச்சடி பதத்திற்கு வரும். இப்போது, தாளித்துக் கொட்டி அடுப்பிலிருந்து இறக்கவும். 

ப    ச்சடி பதம் என்பது, பாகு போல் இறுகாமலும், நீர் போல் ஓடாமலும் இருக்கும் நிலை.  சூடு சற்றே ஆறியவுடன் பரிமாறலாம். குறிப்பிட்டுள்ள அளவு மூன்று பேருக்கானது.

கி    ளிமூக்கு மாங்காய் நன்றாக இருக்கும். Organic மாங்காயாக பார்த்து வாங்கவும். Organic
மண்டை வெல்லம் உபயோகப் படுத்தவும்.

வெ    ல்லத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெல்லம் நல்லது. நரம்பு மண்டலத்திற்கு வலு தந்து, தசை இறுக்கத்தை குறைக்கக் கூடியது வெல்லம். பலமான விருந்திற்கு பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது, சாப்பிட்ட உணவை செரிக்க வைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்தும் வெல்லத்தில் அதிகம். 
இரும்பு சத்து +நார் சத்து +கால்சியம்
=சுவையோ சுவை
 


இ     ரும்பு சத்து உடம்பில் சேர விட்டமின் 'சி' அவசியம். அதனால் தான் இரும்பு சத்து  அதிகமுள்ள வெல்லத்துடன், விட்டமின் 'சி' அதிகமுள்ள மாங்காய் சேர்த்து பச்சடி செய்தனர் நம் முன்னோர். 

வெ          ல்லத்தில் நார்ச்சத்து குறைவு. ஆனால் மாங்காயில் நார்ச்சத்து அதிகம். இரண்டையும் சேர்க்கும் போது, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு பண்டமாக மாறி விடுகிறது.

நா     ம் சாப்பிடும் கால்சியம், நம் உடம்பில் சேர விட்டமின் 'D' தேவை. சூரிய ஒளி நம் மேல் பட்டால் தான் விட்டமின் 'D' உற்பத்தியாகும். பொதுவாக மாங்காய் விளைச்சல் கோடையில் தான். அப்போது கால்சியம் அதிகமுள்ள வெல்லம் சேர்த்து மாங்காய் பச்சடி செய்கிறோம். இதை சாப்பிட்டால், அதிக சூரிய ஒளியில் நம் உடம்பில் சேர்ந்திருக்கும் விட்டமின் 'D', மாங்காய் பச்சடியில்  உள்ள கால்சியம் உடலில் சேர உதவும். 

மா      ங்காய் இனிப்பு பச்சடி நாவிற்கும் சுவை. உடல் நலத்திற்கும் துணை.


க லோ ரி   க க் கீ டு        

மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில், மூன்று பேருக்கான பச்சடி செய்து, மூன்று சம பாகங்களாக பிரித்து, மூன்று பேர் சாப்பிட்டால், ஒருவர் சாப்பிடும் அளவில் மொத்தம்   லோரிகள் உள்ளன.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...