16-06-2013-
Father's day 2013
இன்று தந்தையர் தினம். அப்பா என்று அழைத்தாலும் சரி. இல்லை daddy, dad, பிதா, தந்தை, நைனா என்று எப்படி அழைத்தாலும் அந்த சொல்லில் அன்பு ததும்பும். ஆயிரக் கணக்கான நினைவுகள் மேலெழும்பும். அந்த சொல்லின் பலம் அப்படி. நதியாவின் தந்தையாக வந்த சிவாஜி (அன்புள்ள அப்பா), சூர்யாவின் தந்தையாக வந்த சூர்யா (வாரணம் ஆயிரம்), அப்பாவின் அப்பாவாக வந்த அபிஷேக் பச்சன் (பா), திரிஷாவின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் (அபியும் நானும்) --இவர்களை பார்க்கும் போது நம் அப்பாவின் நினைவும் வரும். மூன்று மணி நேரம். அப்புறம் மறந்து விடுவோம். வருடத்திற்கு ஒரு முறையாவது, ஒரு நாள் முழுவதும் அப்பாவை நினைக்க வைக்க வேண்டும் என்றுதான் தந்தையர் தினம் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை, புது வரவு தான் தந்தையர் தினம். இது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம் என்றுதான் நினைத்திருந்தேன்.இந்த தினத்தை பற்றிய விவரங்களை அறியும் வரை. மேற்கு வர்ஜீனியாவில், பேர்மாண்டில், 1908 ஜூலை 5ல் தந்தையர் தினம் முதலில் கொண்டாடப் பட்டது. அன்னையர் தினத்திற்கு இணையாக ஒரு தினம் வேண்டும் என்ற நினைப்பில் உருவாக்கப் பட்டது தந்தையர் தினம். 361 பேர் இறந்த ஒரு விபத்தில் தந்தையை இழந்த ஒரு பெண்ணின் முயற்சியில் உருவானது இந்த தினம்.
அதற்கு அடுத்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 1910ல் தந்தையின் தனி முயற்சியில் வளர்க்கப் பட்ட (single parent), ஆறு குழந்தைகளில் ஒருவரான ஒரு பெண்ணின் முயற்சியால் இந்த தினம் கொண்டாடப் பட்டது. 1972ல் அமெரிக்காவில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப் பட்டது.
இப்போது வணிக உத்தியாக பிரபலப் படுத்தப் பட்டால் கூட, நமக்கு தேவையான தினம் தான் இது. உங்கள் அப்பா முப்பது வயது இளைஞனாக இருந்தாலும் சரி, இல்லை, 80 வயதைக் கடந்தவராக இருந்தாலும் சரி, ஒரு அன்பு முத்தத்தை இன்று அவருக்குப் பரிசாக கொடுங்கள்.
வணிக உத்திக்கு ஆட்படுபவராக இருந்தால் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சென்னையில் சமையல் நிபுணர் அனுஷா உதவியுடன், நீங்களும், உங்கள் அன்பு அப்பாவும் இணைந்து உங்களுக்குப் பிடித்த அறுசுவை உணவை நீங்களே தயாரிக்கலாம். பார்க்க father's day cookout!
வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் Onlineல் கேக், மலர்கள் மற்றும் இனிப்புகள் order கொடுக்கலாம். Love u Dad logo வுடன் t-shirt order கொடுக்கலாம். அன்பு பரிசு தந்தையை சென்று சேர்ந்து விடும். கொஞ்சம் adventurous type ஆக இருந்தால் இதை முயற்சிக்கலாம்.
நேரம் இருந்தால் அப்பாவுடன் இன்றைய நாள் முழுதும் செலவிடலாம். ஒரு நண்பனாக அளவலாவலாம். அவருக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கையால் சமைத்துக் கொடுக்கலாம்.
என் அப்பாவின் உணவு விருப்பு வெறுப்புகள் எனக்கு நன்கு தெரியும். புளி குறைவான சமையல் பிடிக்கும். அடை என்றால் உயிர். உணவு தான் என்றில்லை. என் அப்பாவின் மற்ற விருப்பு வெறுப்புகளும் எனக்கு தெரியும். உங்களில் எத்தனை பேரால் இப்படி சொல்ல முடியும்?
கடைசியாக ....... உங்கள் தந்தை முதியோர் இல்லத்தில் இருந்தால் இன்று ஒரு தினமாவது வீட்டிற்கு அழைத்து வரலாம்.
No comments:
Post a Comment