கோடை காலம் முடியாதா என்று வெப்ப பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த சில தினங்களாக சென்னையில் வெய்யிலின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் ஒரு சூடான தகவல் தருகிறேன். மன்னிக்கவும்.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கில்(Northern Hemisphere) உள்ளன. இந்த பகுதிகள் பூமியின் சுழற்சியில், சூரியனுக்கு மிக அருகில் வரும் நாள் ஜூன் 21. நேற்று. இந்த நிகழ்வு Summer Solstice என்று அழைக்க படுகிறது. வட மொழியில் உத்தராயணம். சூரியன் தனது சுற்று பாதையில் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கில் அதிக தொலைவில் வரும் நாள். பூமத்திய ரேகையின் வடக்கு திசையில் இருக்கும் நாடுகள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நாள். பகல் நேரத்தின் கால அளவு அதிகம்.
பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள பகுதிகளுக்கு நேற்று தான் கோடை காலத்தின் துவக்கம் என்கிறார்கள். (பள்ளிகள் திறந்து விட்டதால் கோடை முடிந்து விட்டது என்றல்லவா நினைத்தோம்!).
சென்னையில் பகல் நேரம் அதிக அளவு இருந்தது கடந்த (ஜூன் 20) வியாழன் அன்று. இனி டிசம்பர் 21 வரை பகல் நேர அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும்.
ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட Southern Hemisphere ல் உள்ள நாடுகளுக்கு, நேற்று தான் குளிர் கால துவக்கம். நமக்கு தான் கோடை காலம் கண்ணை கட்டுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கோடை துவக்கத்தை கொண்டாடுகிறார்கள். உறையும் குளிரில் வீட்டில் அடைந்து கிடந்தவர்களுக்கு வரப் பிரசாதம் கோடை. இனி வீட்டை விட்டு வெளியே வரலாம். "ஊர் சுற்று. கொண்டாடு" என்கிறார்கள் அமெரிக்கர்கள்.
நமக்கு எல்லா நாளும் ஒன்றுதான். வருடம் முழுதும் வெயில்தான். இருக்கிற மரங்களையும் வெட்டித் தள்ளுவோம். ஏ.சி. க்கு கரண்ட் பில் கட்டுவோம்.
Tags: summer solstice, உத்தராயணம்
No comments:
Post a Comment