தேவையான பொருள்கள்
தொ க்கு மாங்காய்,மிளகாய் பொடி, நல்லெண்ணெய், கடுகு, பெருங்காய தூள், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, உப்பு.
செய்முறை
அ ரை ஸ்பூன் வெந்தயத்தை இலுப்ப சட்டியில் போட்டு, சிவக்கும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் பொடிக்க வேண்டும். பொடித்த வெந்தயத்தை தனியாக வைத்துக் கொள்ளவும்.
ப த்து வர மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, சூடு ஆறியவுடன், நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
தொ க்கு மாங்காயை தோல் சீவி, பொடிப் பொடியாக நறுக்கவும். பீலர் உபயோகித்தும் சீவலாம். இலுப்ப சட்டியில் 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் போட்டு, பெருங்காயம் பொரிந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்த உடன், சீவின மாங்காயை போட்டு கிளறவும்.
ஒ ரு நிமிடம் மூடி வைத்து விட்டு, பிறகு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு மூன்றையும் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து விடவும். மூன்று நிமிடம் கழித்து, மூடியை திறந்து, நன்கு கிளற வேண்டும்.
வெ ந்த மாங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும். அவ்வாறு எண்ணெய் பிரியும் வரை கிளற வேண்டும். பின், பொடித்த வெந்தயத்தை தூவி, நன்கு கிளறி, இறக்க வேண்டும்.
சா தத்துடன் சேர்த்து, தொக்கு சாதமாக சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு அவசர side dish ஆக உபயோகிக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட best choice மாங்காய் தொக்கு.
No comments:
Post a Comment