காபி ப்ளஸ் |
சிக்கரி செடி |
அடுத்து, cocoa எனப் படும் சாக்லேட். Cold Coffee ல் துவங்கி பல விதமான காபி+ cocoa பானங்கள் தயாரிக்கப் படுகின்றன.
மூன்றாவதாக நாம் குறிப்பிடப் போவது the Great Chicory பற்றி. Chicory செடியின் வேர்ப் பாகத்தை வறுத்து, பொடித்து தயாரிக்கப் படுவது தான் Chicory. காபி போன்ற நிறம் இருப்பதால் காபியுடன் Chicory சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. காபி கிடைக்காத இக்கட்டான கால கட்டத்தில், வேறு வழியே இல்லாமல் காபிக்கு மாற்றாக பயன் படுத்தப் பட்ட பொருள் Chicory. அமெரிக்காவின் லூசியான மாகாணத்தில் உள்ள New Orleans பகுதியில் காபி பெருவாரியாக உபயோகப் படுத்தப் பட்டு வந்தது. 1840ல் உள்நாட்டு போர் காரணமாக, New Orleans துறைமுகத்தில் காபி இறக்குமதி செய்ய முடியாத சூழல். இந்த தருணத்தில், வேறு வழியில்லாத மக்கள் காபிக்கு பதில் Chicoryயை பயன் படுத்த துவங்கினர். Chicory அதிகம் கலந்த காபி 'New Orleans Coffee' என்றே அழைக்கப் படுகிறது.
சிக்கரி பொடி |
17 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், காபி பற்றி அறியாத சில ஐரோப்பிய பகுதிகளில் Chicory பயன் பாட்டில் இருந்திருக்கிறது. பின்னர், காபி பற்றி அறிந்தவுடன், காபி யுடன் Chicory கலந்து பயன்படுத்தினர்.
எனவே, காபியின் அறிமுகம் கிடைக்காத கால கட்டத்திலும், காபி கிடைக்காத இக்கட்டான சூழலிலும், காபி கிடைத்த போதிலும் சிக்கரி விலை குறைவு என்பதாலும், மக்களால் Chicory பயன் படுத்தப் படுகிறது. Chicory காபி போல தான். காபி அல்ல. காபியில் கசப்பு சுவை மிதமாக இருக்கும். ஆனால் சிக்கரியில் கசப்பு சுவை அதிகமாக இருக்கும். காபி சுவைக்கும், சிக்கரி சுவைக்கும் வேறுபாடு காண்பது எளிது. சிக்கரி வாசனையும் காபி வாசனையிலிருந்து வேறுபட்டது. எந்த கலப்படமும் இல்லாத pure filter coffee குடிக்கும் வழக்கம் உள்ளவர்களின் கண்ணை கட்டி விட்டு சிக்கரி கலந்த காபியை கொடுத்தால் கூட, குடித்து பார்க்காமலே, வாசத்தை வைத்தே, சிக்கரி கலந்த காபியை அடையாளம் காட்டி விடுவார்கள்.
நிறத்தை தவிர சிக்கரிக்கும், காபிக்கும் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. ஹீரோவுக்கு பதில் களத்தில் நிறுத்தப் படும் டூப் போன்றவர்தான் நமது சிக்கரியாரும். Chicoryயை காபியுடன் சேர்க்கப் படும் கலப்படப் பொருள் என்றுகூட கூறலாம். இங்கிலாந்தில், காபியுடன் chicoryயை கலப்படம் செய்வது, 1832ல் தடை செய்யப் பட்டது. பின், 1840ல், chicory கலப்பு குறித்து காபி வாங்குவோருக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.
தமிழ்நாட்டில் , சில கடைகளில் நீங்கள் filter coffee powder வாங்கினால் chicoryயை தனியாக தான் தருவார்கள். காபி பொடியுடன் கலந்து, ஒரே பாக்கெட்டில் தர மாட்டார்கள். அதே போல், instant coffee பயன்படுத்துவோர் தான் அதிக அளவில் chicory கலந்த காபியை பயன்படுத்துகிறார்கள். Chicory கலக்காத instant coffee varietyயை காணவே முடியாது. Filter Coffee பிரியர்கள் எப்போதுமே pure coffee ஆதரவாளர்கள் தான்.
ஆங்கில இலக்கியத்தில் blue flower என்பது காதலை குறிக்கும் காவிய வார்த்தை. படத்தில் உள்ள chicory செடியின் பூக்களை பாருங்கள். என்ன அழகான நீல நிறம்! ஆங்கில இலக்கியமே chicory யின் நீல நிற பூக்களால் கவரப் பட்டிருக்கிறது. Chicory யின் பூக்களை மட்டும் ரசிப்போம்.

சிக்கரி பயன் படுத்தும் பலரும் கேட்கும் ஒரு கேள்வி, சிக்கரி இல்லாமல் திக்கான காபி போடுவது எப்படி? பிளான்டேஷன் 'A', பீ-பெர்ரி, ரொபஸ்டா இந்த வகைகளின் கலப்பு (blend), திக்கான காபி தரும். உங்களுக்கு தேவையான சுவையும், போதுமான அளவு திக்கான காபியும் கிடைக்கும் வரை வெவ்வேறு அளவுகளில் இந்த காபி வகைகளை blend செய்து பார்க்க வேண்டும். எந்த blend உங்களுக்கு பிடித்த சுவை மற்றும் கெட்டியான காபியை தருகிறதோ, அதுதான் உங்களுக்கான blend.
கடைசியாக சில விஷயங்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் chicory யை உட்கொள்ளக் கூடாது. Chicory நாடித் துடிப்பை குறைத்து விடும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய தன்மை கொண்டது chicory. எனவே மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படும் beta-blocker என்ற வகை மருந்தை உட்கொள்வோர் chicory சாப்பிடக் கூடாது. Beta-blocker வகை மருந்தின் வீரியத்தை chicory குறைத்து விடும்.
காபியில் உள்ள caffeine நம்மை சுறு சுறுப்பாக வைத்திருக்கும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் காபி குடிப்பது நம்மை நாள் முழுவதும் alert ஆக வைத்திருக்கும். ஞாபக மறதி நோய் அண்டாது.
சென்னையில் chicory கலப்படம் இல்லாத filter coffee கிடைக்கும் சில இடங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் (Terminus) எதிரில் உள்ள India Coffee House. இங்கு காபி விலையும் குறைவு. ஒரு கப் காபி 15 ரூபாய். (Hotel Saravana Bhavan ல் 30 ரூபாய்). இங்கு Plantation 'A' வகையுடன் Robusta வை blend செய்த காபி கிடைக்கிறது. நல்ல சுவை. Hotel Saravana Bhavan காபி கூட chicory இல்லாத காபிதான். அடுத்து சங்கீதா ஹோட்டல் மற்றும் Okadey's ஹோட்டல் கிளைகள். அப்புறம் Triplicane Ratna Cafe. ஸ்ட்ராங்கான காபி. சர்க்கரை போடாமல் தருவார்கள். வேண்டிய அளவு சர்க்கரை நாம் போட்டுக் கொள்ளலாம். எக்ஸ்ட்ரா டிகாக்க்ஷன் தருவார்கள். ஏறக்குறைய நமக்காக நம் வீட்டில் நாமே காபி போட்டுக் குடித்த அனுபவம் இங்கே கிடைக்கும். Pure Filter Coffeeக்கு ஒரு 'like' போடுவோம்.

No comments:
Post a Comment