(Consultant: Hortitech Services)
|
மொட்டை மாடியில் முருங்கை மரம். பக்கத்தில் வாழை மரம். அடுத்து, பச்சை பசேல் கீரைப் பாத்தி. இவை எல்லாம் நெரிசல் மிகு சென்னை பட்டணத்தில், இன்று காணக் கிடைக்கும் காட்சிகள். Zero Budget ல் சமையலறை தோட்டம் அமைக்கலாம் என்று எழுதி இருந்தேன். சற்று செலவு ஆனாலும் பரவாயில்லை...இன்றே....ஊஹூம்....இப்போதே, வேண்டும் சமையலறை தோட்டம் என்று ஆசை படுவோருக்கு இந்த பக்கம் உதவும்.
நகரில் பல Nursery கள் இருக்கின்றன்றன. அவற்றில், மலர் செடிகளும், அழகு செடிகளும் கிடைக்கும். புல்தரை அமைக்க உதவியும் கிடைக்கும். ஆனால், சமையலறை தோட்டம் அமைப்பதில் சில nursery கள் தான் ஆர்வம் காட்டுகின்றன.
நகரில் பல Nursery கள் இருக்கின்றன்றன. அவற்றில், மலர் செடிகளும், அழகு செடிகளும் கிடைக்கும். புல்தரை அமைக்க உதவியும் கிடைக்கும். ஆனால், சமையலறை தோட்டம் அமைப்பதில் சில nursery கள் தான் ஆர்வம் காட்டுகின்றன.
Photo: Sundarramg
Hortitech Services, Manapakkam
|
Photo: Sundarramg இயற்கையோடு இணைந்து......(Hortitech services Office)
மணப்பாக்கத்தில், ராமாவரம் signal அருகில், இயங்கி வரும் Hortitech Services, (3/233A, மணப்பாக்கம் மெயின் ரோடு, மணப்பாக்கம், சென்னை -600 125.) சென்றால், சமையலறை தோட்டம் அமைப்பதில் உங்களுக்கு உதவுவார்கள். தமிழக அரசின் தோட்டக் கலை துறையில், உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற திரு. தங்கவேலு (9442532215) அவர்களால், , " சென்னை நகரை மாடி தோட்ட நகராக மாற்ற வேண்டும் " என்ற நோக்கில் துவங்கப்பட்டது தான் Hortitech Services.
Coco peat எனப் படும் தேங்காய் நாரின் மக்கிய துகள்கள், தோட்டத்திற்கான மண்ணாக பயன்படுத்தப் படுகிறது. எடை குறைவு. எனவே மாடியில் தோட்டம் அமைக்கும் பொது இந்த coco peat பயன் படுத்தினால் கட்டடத்திற்கு பாரம் இருக்காது. நீர் உறிஞ்சும், மற்றும் நீர் தேக்கும் தன்மை அதிகம். ஆகவே அடிக்கடி தண்ணீர் விட தேவையில்லை. Grow bag என்றழைக்கப் படும் 'வளர் பை'களில் கூட செடி வளர்க்கலாம். செலவு குறையும். தொட்டி அல்லது grow bag இன்னொரு விதத்திலும் நல்லது. இவற்றில் செடி வளர்ப்பது கட்டடத்திற்கு பாதுகாப்பானது. நீர் கசிவு இருக்காது.
இந்த coco peat மற்றும் செம்மண் 60 க்கு 40 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். தொட்டியில் இந்த கலவை நிரப்பி, ஒரு மாதம் வளர்ந்த செடியோடு தருவார்கள். கத்தரி, வெண்டை, தக்காளி, பாகற்காய், கொத்தவரை, புடலங்காய், அவரை, பீன்ஸ், மிளகாய் - இப்படி எந்த காய்கறி செடி விருப்பமோ அது கிடைக்கும்.
சற்றே உயரமான தொட்டியில் வாழை மரம். முருங்கை மரம். செடி முருங்கையாம். வழக்கமான முருங்கை மரத்தை விட குறைவான உயரமே வளரும். வாழையும் அப்படிதான். செடி முருங்கை ஆறு மாதத்திற்கு இலை தரும். ஆறு மாதத்திற்கு காய் தரும். ஒரு மரத்திலிருந்து ஒரு ஆறு
மாத சீசனுக்கு, 250 முருங்கை காய் கிடைக்குமாம். பப்பாளி கூட தொட்டியில் வளர்க்கலாம்.
உடனே வீடு கட்ட pre - fabrication technology உதவுகிறது. வசதியான சமயலறைக்கு modular kitchen உதவுகிறது. சமையலறையின் பல பாகங்களையும் தனி தனியாக எடுத்து வந்து, உங்கள் வசதி படி, ஒருங்கிணைத்து வடிவமைப்பது தான் modular kitchen. மேலே சொன்ன உடனடி தோட்டத்தை, modular garden என்று கூட அழைக்கலாம். (Modular Garden சொல்லாக்கம்......... Sundarramg).
நீங்கள் நினைத்தவுடன் உங்கள் வீட்டில் தோட்டம் பூத்து குலுங்கும்.
கீரை வளர்க்க வட்ட வடிவில் தொட்டி தயாரித்திருக்கிறார்கள். தொட்டியை வீட்டு மாடியில் வைத்து, மண் நிரப்பி கீரை பயிரிடலாம்.
இரண்டு அளவுகளில் இந்த தொட்டி கிடைக்கிறது. ஒரு குடும்பத்திற்கு தேவையான கீரையை இந்த தொட்டியில் பயிர் செய்து விடலாம்.
|
4 comments:
"Modular Garden" the title is really an apt one for this modern world. The exhibition of Kitchen Garden through your blogspot would certainly be a model and inspire each and every reader to create their own garden. Nice job!
Eventhough, I am seeing your article on Modular Garden, it is very interesting and useful for those who want to have garden in their house for growing vegetables also.
Dear SIr,
I have seen your blog and I am interested for Terrace garden.
Can you please update the price of following items to my mail id so that I can come directly to purchase the items.
1. Red soil with manure
2. Coco peat
3. Vermicompost
4. Grow bag
5. Shade net
6. Pro Tray
7. Organic Manure
My email id : aanishever@gmail.com
For price and other details, you can contact Mr.Thangavelu (9442532215) of Hortitech services,3/233A, Manapakkam Main Road,Manapakkam, Chennai-600 125. If you mention your address or locality I can try to give you the details of the nearest nursery.
Post a Comment