Thursday, 10 April 2014

வேப்பம் பூ பச்சடி

வேப்பம் பூ பச்சடி 
சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பு. உணவில் அறுசுவை போலவே நம் வாழ்விலும்  அறுசுவை உண்டு என்பதை குறிப்பிடும் வகையில்,  சித்திரை முதல் நாள் அன்று நல்ல நேரம் பார்த்து செய்யப் படுவது இந்த வேப்பம்பூ இனிப்பு பச்சடி. தமிழ் வருடப் பிறப்பு நாளன்று  அன்றைய விருந்தில் முதல்  உணவாக எடுத்துக் கொள்ளப் படுவதும் வேப்பம்பூ இனிப்பு பச்சடிதான். இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை பதார்த்தமாக விளங்குகிறது இந்த வேப்பம்பூ பச்சடி.

பொதுவாக அந்த அந்த பருவ காலத்தில் என்ன பொருள் விளைகிறதோ அந்த பொருளை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானது. அந்த வகையில் கோடை காலத்தில் விளையும் மாங்காய், புளி ஆகியவற்றோடு, சித்திரையில் பூக்கும் வேப்பம்பூவையும் சேர்த்து பச்சடி செய்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்.

வேப்பம் பூ பச்சடியுடன் வரும் ஜய வருடத்தை வரவேற்போம்.

தேவையான பொருள்கள் 
புது வேப்பம்பூ 
வெல்லம்
மாங்காய்
புளி
கடுகு, வர மிளகாய்   -தாளிக்க 
உப்பு 
நெய் 




புது வேப்பம்பூவை இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ கொத்துக்களை ஒரு முறத்தில் போட்டு தேய்த்து எடுத்தால், வேப்பம்பூ இதழ்கள் மட்டும் தனியாக வந்து விடும். 

மாங்காயை தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும்.

வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.

கோலிக் குண்டு அளவு புளியை, ஒரு டம்ப்ளர் தண்ணீரில், ஊற வைத்து கரைத்து எடுக்கவும்.  

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, கடுகு, கிள்ளிய வர மிளகாய் போட்டு, கடுகு வெடித்ததும் வேப்பம்பூவையும் போட்டு பொரிக்கவும்.

கரைத்து வைத்த புளியை ஊற்றவும்.

புளி ஜலம் கொதித்தவுடன், உப்பு, மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

மாங்காய் வெந்து கரைந்த பின்......
துருவிய வெல்லத்தையும் சேர்க்கவும்.

வெல்லம்  கரைந்து, மாங்காயுடன் சேர்ந்து கெட்டியாகி, பச்சடி பதம் வந்தபின் அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது வேப்பம்பூ பச்சடி பரிமாற தயார்.
வேப்பம் பூ 
வேப்பம்பூ இதழ்கள்  
மாங்காய் துண்டுகள் 
புளிக் கரைசல்
ஆர்கானிக் வெல்லம்
வாணலியில் நெய் விட்டு, கடுகு, மிளகாய் தாளித்து, வேப்பம்பூவையும் சேர்த்து நன்கு பொரிக்கவும் 
வேப்பம்பூவை நன்கு பொரித்து, புளி ஜலம் சேர்த்து, உப்பும் சேர்க்கவும் 
புளி ஜலம் கொதித்ததும் துருவிய மாங்காய் சேர்த்து, மாங்காய் கரையும்  வரை கொதிக்க விடவும் 
மாங்காய் கரைந்ததும், துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விட்டால் ..............
வேப்பம்பூ இனிப்பு பச்சடி ரெடி 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...