நார்த்தங்கா சாதம் |
சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டது. எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சாதம் இரண்டும் தெருமுக்கு கடையிலிருந்து, ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளது. எலுமிச்சைக்கு அண்ணன்களான கிடாரங்கா, நார்த்தங்கா இரண்டும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றன. மாம்பலம் மார்க்கட்டில் சொல்லி வைத்து வாங்க வேண்டி உள்ளது.
நார்த்தங்காயை பொறுத்த மட்டில் நார்த்தங்கா ஊறுகாய் மட்டும் ரொம்ப பாப்புலர். இது நாரத்தை என்றும் அழைக்கப் படுகிறது.
எலுமிச்சையை விட அளவில் பெரிதாகவும், சாத்துக்குடியை விட சற்றே சிறிதாகவும் காணப் படும். அதிக புளிப்பு சுவையும், மிக லேசான கசப்பு சுவையும் உள்ளது. பித்தத்திற்கு நல்லது.
நார்த்தங்காயில் ஜாதி நார்த்தங்கா (ஜாதி நாரத்தை), கொளஞ்சிக்காய் என்று இரண்டு வகைகள் உண்டு. ஜாதி நார்த்தங்காயில் சற்று துவர்ப்பு அதிகம். அந்த துவர்ப்பு சுவையை நிறைய பேர் விரும்புவார்கள். இரண்டு வகை நார்த்தங்காயிலுமே ஊறுகாய் போடலாம். சாதம் பிசைய கொளஞ்சிக்காய்தான் நன்றாக இருக்கும்.

நார்த்தங்காயில் சாதம் பிசையலாம் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். செய்து பாருங்கள். அதன் சுவையை ரசியுங்கள்
தேவையான பொருள்கள்
நார்த்தங்கா -4
பொல பொலவென வடித்த சாதம் - 2 கப்
மஞ்சள் பொடி-சிறிது
வர மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம்-தாளிக்க
பச்சை மிளகாய், கருவேப்பிலை -சிறிது
செய்வது எப்படி?
முதலில் சாதத்தை பொல பொலவென வடித்துக் கொள்ளவும்.
நார்த்தங்கா |
ஒரு cupல் தேவையான உப்பை போட்டு அதில் நான்கு
நார்த்தங்காய்களை, இரண்டிரண்டாக வெட்டி, ஜூஸ் பிழிந்து கொள்ளவும்.
நார்த்தங்காய்களை, இரண்டிரண்டாக வெட்டி, ஜூஸ் பிழிந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் நேரடியாக citrus பழ ஜூஸ் பிழிந்தால் ஜூஸ் கசந்து விடும். உப்பை போட்டு அதில் பிழிந்தால் கசக்காது.
கடுகு, மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொட்டி, நன்கு கலக்கவும். அரைமணி நேரம் அமிழ்த்தி மூடி வைத்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment