13-04-2014 அன்று குரோம்பேட்டையில் ஒருநாள் பயிற்சி |
வீட்டு தோட்டம், ஆர்கானிக் உணவு, நலமான வாழ்வு....இந்த சிந்தனை இன்றைய தலைமுறையினர் மனதில் வளர்ந்து வருவது கண்கூடாக தெரிகிறது. சில நிகழ்வுகள் இதை உறுதி
படுத்துகின்றன.
நிகழ்வு 1. சென்னை ராஜா அண்ணாமலை புரம் குடியிருப்போர் நல
சங்கம், " Garden Group Gathering " என்ற விவாத குழுவை துவங்கியிருக்கின்றனர். ராஜா அண்ணாமலை புரம் பகுதியில் குடியிருப்போர் வீட்டு தோட்டம் பற்றிய தகவல்கள், சந்தேகங்களை பற்றி பேசவும், உதவிகரமான கருத்து பரிமாற்றம் செய்யவும் இந்த குழு பயன்படும்.
நிகழ்வு 2. கடந்த சனிக் கிழமை எனது நெருங்கிய நண்பரின் மாடி தோட்டத்திற்கு தேவையானவற்றை வாங்க மணப்பாக்கம் Hortitech Nursery சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் திரு. தங்கவேலு முன் அமர்ந்திருந்தனர் மிக இளம் வயது தம்பதியினர். வீட்டுத் தோட்டம் அமைப்பது, பயிர்களில் பூச்சி வராமல் காப்பது, Plant Grow Bagல் நிரப்ப வேண்டிய செம்மண், இயற்கை உரம், cocopeat கலவையின் சரியான விகிதம், எந்த செடிக்கு எவ்வளவு கொள்ளளவு உள்ள grow bag தேவைப்படும், சென்னை climateல் விளைய கூடிய பயிர் வகைகள், hydrophonics என்று ஏறக்குறைய ஒரு வகுப்பறை பாடமே நடத்திக் கொண்டிருந்தார், தமிழக அரசின் தோட்டக் கலைத் துறையில் உதவி இயக்குனராக இருந்து ஒய்வு பெற்ற, திரு.தங்கவேலு. இளம் வயதில், வாழ்வின் முதல் கட்டத்திலேயே வீட்டுத் தோட்டம் பற்றிய ஆர்வத்தோடு வாழ்வை துவங்குவது மன திருப்தியை தந்தது.
நிகழ்வு 3 குரோம்பேட்டையில் உள்ள பயோ ஆர்கானிக் (Bio Organic) இயற்கை உணவு பொருள்கள் விற்பனை கடை சார்பில் "வீட்டுத் தோட்டம் மற்றும் ஆரோக்கியம்" பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப் படுகிறது. பயோ ஆர்கானிக் (Bio Organic) இயற்கை அங்காடி, ஐந்திணை ஆர்கானிக், காஞ்சிபுரம் மாவட்டம் பாலூரில் இயங்கி வரும் சோலார் அறப்பேரவை ஆகியோர் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறார்கள்.
இடம்: ஸ்ரீமதி லக்ஷ்மி அம்மாள் நினைவு மெட்ரிகுலேஷன் பள்ளி, குரோம்பேட்டை. R.V. மருத்துவ மனை அருகில். (Srimathi Lakshmi Ammal Memorial Matriculation Higher Secondary School, 2, 7th Main road, New Colony, Chrompet, Chennai-600 044.)
நாள்: 13/04/2014 ஞாயிறு
நேரம்: 10 A.M. - 8 P.M.
மிக நீ.....ண்ட பயிற்சி இது. பயப்பட வேண்டாம். வீட்டுத் தோட்டம், உடல் நலம் இவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நேரம் போவதே தெரியாது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுத் தோட்டம் பற்றி விளக்கமளிப்பார் திரு. ஷ்யாம் சுந்தர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், பாலூரில் சோலார் அறப் பேரவை நடத்தி வருகிறார்.
இதற்கு நடுவில் மதிய உணவு உண்டு. திணை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்த உணவு வழங்கப் படும்.
புதிதாக வீட்டுத் தோட்டம் துவங்குவோர், மண்ணுக்கு மாற்று (cocopeat), இயற்கை உரம், நாட்டு காய்கறி விதைகள், home composting, hydrophonics என்று பல விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு இந்த பயிலரங்கு பயன் தரும்.
"பயிற்சி கட்டணம் கிடையாது. உணவுக்கு மட்டும் சிறுதொகை வசூலிக்கப் படும்" என்கிறார் Bio Organic இயற்கை அங்காடி நடத்தி வரும் திரு. வினோத்.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை " உடல் நலப் பராமரிப்பு " குறித்து பல விஷயங்களை விவாதிப்பார் மருத்துவர் காசி பிச்சை. இவர் திருமானூரில் இயங்கி வரும் இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் தலைவர்.
பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் திரு. வினோத் அவர்களை 7812099366 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment