எப்படி செய்வது?
புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும். வாழைத் தண்டை நார் நீக்கி சிறிது நீள வாக்கில் நறுக்கவும். கத்தரிக்காயை பொடிப் பொடியாக நறுக்கவும். வெண்டைக் காய்களை நீள வாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக கீறி வைக்கவும். (சாப்பிடும்போது கடிபடாமல் தூக்கி போட வசதியாக இருக்கும்). கொத்தவரங்காயை இரண்டு, மூன்றாக கிள்ளிப் போடலாம்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கரைத்து வைத்த புளி தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய பொடி போட்டு கொதிக்க விடவும்.
கொதித்த பின், நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும். வெண்டைக்காய் வெந்து, குழைந்து, கொழ கொழ என ஆகி, கூட்டு கெட்டிப் படும். இந்த பதம் வந்ததும், அடுப்பை அணைத்து, பாத்திரத்தை கீழே இறக்கி, வாணலியை அடுப்பில் வைத்து, சூடானவுடன்....
நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 8-10 வர மிளகாய்களை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி, கடுகுடன் சேர்த்து .....தாளித்துக் கொட்டவும்.
கூட்டை நன்கு கலந்து விட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
சாதத்தில் இந்த தளர கூட்டை போட்டு பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டுப் பாருங்கள். " பேஷ்....பேஷ்...ரொம்ப நன்னாருக்கு" என்பீர்கள்.
பின் கதை சுருக்கம் by ஸ்ரீவித்யா ராமன் :
தளர கூட்டு...தோசையுடன் |
என் பாட்டி திருமதி. சத்யாபாமா அடிக்கடி செய்யும் receipe இது. அவரது கை மணத்தில் ஓஹோ வென்று இருக்கும். அவரது அன்பு கலந்து பரிமாறுவார். அதை உங்களுக்கும் பறிமாறுகிறேன் . அந்த காலத்தில் வீட்டு மருமகள்கள் தீட்டானால் தனியாக இருந்து விடுவார்கள். மாமியார்தான் சமைக்க வேண்டும். பெரிய குடும்பங்களாக இருக்கும். நிறைய குழம்பு, பொரியல், கூட்டு என்று வகை வகையாக செய்து கொண்டிருக்க முடியாது. அதற்காக புளியும் சேர்த்து, காயும் சேர்த்து all in one ஆக செய்து விடுவார்கள். புளி இருப்பதினால் அதுவே குழம்பு. காய் இருப்பதால் அதுவே கூட்டு. காய்களை தவிர்த்து gravy ஐ போட்டு சாதத்தில் பிசைந்தால் ரசம் போலும் இருக்கும். அதுதான் தளர கூட்டு.
மோர் சாதத்திற்க்கு குழம்பு போல் தொட்டுக் கொள்ளலாம்.
தோசை, இட்லிக்கும், தளர கூட்டு நன்றாக இருக்கும். நொய் உப்புமாவிற்கு தளர கூட்டு மிகச் சிறந்த காம்பினேஷன்.
No comments:
Post a Comment