கொடி எலுமிச்சை ஊறுகாய்.... |
நல்லெண்ணெய் -200 ml
வரட்டு மிளகாய் பொடி 3 spoon
மஞ்சள் பொடி -சிறிது
கடுகு - தாளிக்க
உப்பு - 2 spoonபெருங்காயம்-சிறிது
இந்த படங்களில் உள்ள மூன்று விதமான பழங்களுமே கொடி எலுமிச்சை பழங்கள்தான். இதை கொளுமிச்சை என்றும் சொல்வார்கள். ஊறுகாய் போட கொடி எலுமிச்சை சிறந்தது. ஊறுகாய் அளவு நிறைய காணும். பழத்தின் வாசனை, சுவை எல்லாம் எலுமிச்சை போலவேதான் இருக்கும். கொடி எலுமிச்சை ஊறுகாய், வழக்கமான எலுமிச்சை ஊறுகாயை விட சுவையாக இருக்கும். எலுமிச்சையை விட பல மடங்கு பெரிதாக, நீள் வட்டமாகவும், வட்ட வடிவிலும் கூட இது இருக்கும்.
நகரங்களில் கொடி எலுமிச்சை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. அதிகம் கிடைப்பதுமில்லை. என் மனைவியின் உறவு வழியில் சில வயதான பாட்டிகளிடம் கேட்டபோது..." குண்டு குண்டாக இருக்குமே. நீளமா கூட இருக்கும். சாப்பிட நன்னா இருக்கும். சாப்பிட்டப்புறம் அடிநாக்கில் கசப்பு எட்டிப் பாக்கும்" என்றார்கள்.
கொ ளுமிச்சை காய்களை அலம்பி, நன்கு துடைத்துக் கொள்ளவும். பின் பொடிப் பொடியாக நறுக்கவும். நறுக்கும் போது, பழத்தின் தோலில் கை படாமல் நறுக்க வேண்டும்.இல்லாவிட்டால் பழச் சாறு கசந்து விடும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 100 ml விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். பின் கொளுமிச்சை பழங்களை போட்டு நன்கு கிளறவும். உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும். அவ்வப்பொழுது திறந்து கிளறி விட வேண்டும். பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். மீதி உள்ள எண்ணெயும் விட்டு சிறிது நேரம் கிளறினால், ஊறுகாய் சுண்டி, எண்ணெய் பிரிந்து வரும். அடுப்பை அணைத்து, சிறிது இடைவெளி விட்டு, மூடி வைக்கவும். அப்போதுதான் சூடு வெளியேறும். ஆறிய பிறகு, fridgeல் வைத்து பயன்படுத்தினால் 15 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
விரும்பினால் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நன்கு பொடி செய்து, அடுப்பை அணைக்கும் முன் தூவி விட்டு, கிளறி விடவும்.
கொடி எலுமிச்சை ஊறுகாய் ரெடி |
No comments:
Post a Comment