தேவையான பொருள்கள்
உதிர் உதிராக வேக வைத்த சாதம் -உத்தேசமாக 750 கிராம்.சுமார் 300 கிராம் எடையுள்ள மாங்காய் -1
நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி
மிளகாய் பொடி -25 கிராம். மஞ்சள் பொடி சிறிது.
தாளிக்க - கடுகு, கட்டி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய்-4
உப்பு-தேவையான அளவு.
செய்முறை
மாங்காயை தோல் நீக்கி, நன்கு பொடிப் பொடியாக சீவிக் கொள்ளவும். வாணலியில் தாளித பொருள்களை போட்டு, இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். தாளித்த பொருள்கள் மீது மாங்காய், மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி போட்டு நன்கு வதக்கவும். ஓரிரு நிமிடங்கள்மூடி வேக வைத்துவிட்டு சாதத்தை நன்கு உதிர்த்து சேர்க்கவும். சாதம் உடைபடாமல் நன்கு கிளறவும்.
இ றக்கி வைத்து சற்றே சூடு ஆறியதும் வாழை இலையில் பரிமாறவு
ம். மேலே குறிப்பிட்டுள்ள அளவு மூன்று பேருக்கானது. வாழைக்காய் அல்லது நேந்திரம் சிப்ஸ் தொட்டுக் கொள்ளலாம்.
சீ ரக சம்பா அரிசி, மாங்காய் சாதத்திற்கு சுவையும், மணமும் சேர்க்கும். Organic மாங்காய் உபயோகிக்கவும். நல்ல புளிப்பு சுவையுள்ள மாங்காயாக பார்த்து வாங்கவும். விரலால் லேசான அழுத்தம் கொடுக்கும் போது, அழுந்தாமல், கெட்டியாக இருக்க வேண்டும்.
மு டிந்தால் மிளகாய் பொடியை fresh ஆக அரைத்துப் போடலாம்.
மாங்காய் - சில குறிப்புகள்
மாங்காய் முழு அளவு வளர்ச்சி அடைவதற்கு முன் மரத்திலிருந்து பறிக்கப் படும் காய்கள் ஊறுகாய் மற்றும் தொக்கு செய்ய உபயோகப் படுகின்றன. இவை எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் பழுக்காது. இந்த வகை காய்கள் தான் இனிப்பு சுவை இல்லாமல், நல்ல புளிப்பாக இருக்கும்.
கிளி மூக்கு மாங்காய் தொக்கு மற்றும் மாங்காய் சாதம் செய்ய ஏற்றது. படத்தில் உள்ள மாங்காய் சேலத்திலிருந்து வரவழைக்கப் பட்டது.
ப ழத்தை விட, மாங்காயில் விட்டமின் 'சி' சத்து அதிகம். 35 ஆப்பிள் அல்லது 9 எலுமிச்சை பழத்தில் உள்ள விட்டமின் 'சி' சத்து 300 கிராம் மாங்காயில் உள்ளது.
மா ங்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து உள்ளது. விட்டமின் 'பி' மற்றும் நம் உடலின் வளர்சிதை மாற்றங்களை தடுக்கும் anti-oxidants அதிகம் கொண்டது மாங்காய்.
நம் ஜீரண உறுப்புகளுக்கு மாங்காய் மிகவும் நல்லது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இரும்பு சத்து குறைபாட்டினை குறைக்கும் தன்மை உள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுவாக்கி, நரம்பு தளர்ச்சி, அதிகமான இதய துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை சரி செய்யக் கூடியது. நினைவு திறனையும் அதிகரிக்கும்.
மாங்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், Cholesterol அளவை குறைக்கும்.
ஒரு நாளைக்கு, ஒரு மாங்காய்க்கு மேல் சாப்பிடக் கூடாது. அதே போல், மாங்காய் சாப்பிட்டவுடன் குளிர்ந்த தண்ணீர் பருகக் கூடாது.
மா ங்காய் துண்டுகளை உப்பில் தோய்த்து சாப்பிடுவது, sun strokeலிருந்து நம்மை காக்கும்.
1 comment:
உயர்த்திரு ராமன் அவர்களுக்கு , மாங்காய் சாதம் மிக அருமை .சுந்தர்
Post a Comment