நஞ்சு கொண்டான் கீரை கூட்டு |
இந்த கீரையில் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம். கீரை மசியல் (கடைசல்) செய்யலாம். நச்சு கொட்டை கீரையில் உப்பு, புளி, மிளகாய் , துவரம் பருப்பு சேர்த்து துவையல் செய்யலாம். சுருக்கமாக சொன்னால் நாம் மற்ற கீரைகளை பயன்படுத்தி என்ன சமையல் செய்வோமோ அத்தனையும் நச்சு கொட்டை கீரையில் செய்யலாம்.
பொதுவாக கிராமத்தில் வசிப்பவர்களை கேட்டால் இந்த கீரை பற்றி நிறைய சொல்கிறார்கள்.
இது மரமாக வளர்ந்தாலும், பலம் இல்லாதது. எளிதில் உடைபடக் கூடியது. கனம் இல்லாதது. நிறைய இடம் தேவைப் படாது. எனவே வீட்டிற்கு ஒரு நச்சு கொட்டை மரம் எளிதில் வளர்க்கலாம். இதன் கிளையை உடைத்து நட்டாலே வளர்ந்து விடும்.
தவசிக் கீரை, நஞ்சு கொண்டான் கீரை போன்று பல கீரைகள் இன்றைய சமையலில் இடம் பெறுவதில்லை. இத்தகைய கீரைகளை ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் சுவையும், மருத்துவ குணமும் உங்களை மீண்டும் மீண்டும் அவற்றை பயன் படுத்த தூண்டும்.
கைப்பிடி அளவு பாசி பருப்பை ஊற வைக்கவும்.
நஞ்சு கொண்டான் கீரைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்யவும்.
வெற்றிலையில் நரம்பை கிள்ளி எறிவது போல், இந்த கீரையிலும் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட வேண்டும். கத்தியால் கீறி விட்டு நரம்பை எடுத்து விடலாம்.
நரம்பு நீக்கிய கீரையை, பொடிப் பொடியாக நறுக்கவும்.
பாசி பருப்பு, நறுக்கிய நச்சு கொண்டான் கீரை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கீரை நன்கு மசிந்ததும்...........
மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு போட்டு................
சாம்பார் பொடி வாசனை மாறும்வரை கொதிக்க விடவும்.
சாம்பார் பொடியின் பச்சை வாசனை மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும்.
நஞ்சு கொண்டான் கீரை கூட்டு ரெடி.
3 comments:
நன்றி...
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மிகவும் பயனுள்ள தகவல்...மிகவும் நன்றி...
Thank you for your useful information
Post a Comment