மசாலா லஸ்ஸி அல்லது மசாலா மோர் |
தயிர் - 2 கப்
சீரக தூள் (வறுத்து அரைத்தது) - சிறிது
சாட் மசாலா பொடி - சிறிது
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - சிறிய துண்டு
கருவேப்பிலை - 5 இலைகள்
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - சிறிது
வறுத்து அரைத்த சீரக தூள், இஞ்சி , பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு, சிறிது தயிர் விட்டு நன்கு அரைக்கவும். மீதமுள்ள தயிரையும் விட்டு நன்கு சுற்றவும். பிறகு சாட் மசாலா பொடி தூவி மீண்டும் சுற்றவும். மேலாக சிறிது சீரக பொடி, சாட் மசாலா பொடி, கொத்தமல்லி தழை தூவி....fridgeல் வைத்து, சிறிது நேரம் கழித்து........ கோடைக்கு இதமான மசாலா லஸ்ஸி குடிக்க வேண்டியதுதான்.
மசாலா லஸ்ஸி |
No comments:
Post a Comment