வெள்ளரி பச்சடி
சாட் மசாலா, சீரக பொடி, கொத்தமல்லி தூவிய வெள்ளரி தயிர் பச்சடி செய்முறை முன்னரே தந்திருக்கிறேன். அந்த வெள்ளரி தயிர் பச்சடி தனி ஆகாரமாக சாப்பிடக் கூடியது. சாட் மசாலாவும், சீரக பொடியும் தரும் சுவை நம்மை அதிக அளவு பச்சடி சாப்பிட சொல்லும். உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது.
இப்போது தந்திருக்கும் வெள்ளரி பச்சடி எளிமையாக செய்யக் கூடிய பச்சடி. காரமான கலவை சாதங்களுக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
இந்த பச்சடி செய்ய தேவையான பொருள்கள் - நடுத்தர அளவில் 2 வெள்ளரி, அரை கப் கெட்டியான தயிர், 2 ஸ்பூன் பாசி பருப்பு, உப்பு மற்றும் தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம். அவ்வளவுதான்.
பயத்தம் பருப்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். வெள்ளரியை தோல் சீவி, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெள்ளரியுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். தயிர் சேர்க்கவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து ஊற்றவும். ஒரு கரண்டியால் நன்கு கிளறி விட்டால் வெள்ளரி பச்சடி ரெடி.
விருப்பப் பட்டால் வர மிளகாய் (பாதி மிளகாய்) சேர்த்து தாளிக்கலாம். அல்லது அதற்கு பதில் பச்சை மிளகாய் (பாதி மிளகாய்) பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். |
நறுக்கிய வெள்ளரி |
நறுக்கிய வெள்ளரியுடன் பாசி பருப்பு சேர்த்து......... |
வெள்ளரி, பாசி பருப்புடன் தயிர் சேர்த்து........ |
தாளித்து கொட்டி.......கலந்து விட்டால்....... |
வெள்ளரி பச்சடி ரெடி |
No comments:
Post a Comment