அவல்பொரி உருண்டை |
திருக் கார்த்திகை தீபத் திருநாள் அன்று அவல்பொரி உருண்டை செய்வார்கள். இந்த இனிப்பு உருண்டையை கார்த்திகை அன்று மட்டும் தான் செய்வார்கள். மற்ற நாட்களில், வீடுகளில் அவல்பொரி உருண்டை செய்ய மாட்டார்கள். வருடத்திற்கு ஒருமுறைதான் செய்யப் படுகிறபோது அதற்கென ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். அவல் , வெல்லம் சேர்ந்த எளிமையான, ஆரோக்கியமான இனிப்பு அவல்பொரி உருண்டை.
அவல்பொரி+வெல்லம் |
அவல்பொரி - 1 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் -சிறிது
தேங்காய் அல்லது பொட்டுக் கடலை - சிறிது
அவல் பொரியை சுத்தம் செய்யவும். உலர்ந்த பாத்திரத்தில் போடவும். வெல்லத்தை பாகு வைக்கவும்.
தேங்காயை பல்லு, பல்லாக கீறி போடவும். அல்லது அதற்கு பதில் சிறிது பொட்டுக் கடலை போடவும். தேங்காய், பொட்டுக் கடலை எதுவாக இருந்தாலும், பாகு கொதிக்குமுன் சேர்க்கவும்.
பாகு கம்பி பத பத்திற்கும் அதிகமாக முறுக வேண்டும்.
பாகு ரெடியானதும், அவல்பொரியில் கொட்டி, நன்கு கிளறவும்.பாகை கொட்டிய உடனே கிளறி பொரியில் கலக்க செய்ய வேண்டும். தாமதமானால் பாகு இறுகி விடும். பாகு பொரியில் நன்கு கலந்ததும் உருண்டையாக பிடிக்கவும்.
சூட்டோடு பிடித்தால்தான் உருண்டையாக பிடிக்க முடியும். கையில் ஒட்டாமல் இருக்க சிறிது அரிசி மாவை தொட்டு உருண்டை பிடிக்க வேண்டும்.
அவல்பொரி உருண்டை |
அவல்பொரி உருண்டை |
No comments:
Post a Comment