கடலை மிட்டாய் |
வேர்கடலை - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
வேர்கடலையை வாணலியில் போட்டு வறுக்கவும். 20 நிமிடங்களாவது வறுக்க வேண்டியிருக்கும். வேர்கடலையில் சூடேறிய பின், கடலையில் உள்ள எண்ணெய் வெளிவரும். கடலை பார்க்க பளபளக்கும். சிறிது நேரம் கழித்து கடலை லேசாக வெடிக்கும். சில கடலைகள் இரண்டாகும். கடலை நிறம் மாற துவங்கும். வாயில் போட்டு பார்த்தால், ஈரப் பதம் இல்லாமல், மொறு மொறுப்பாக இருக்கும். இதுதான் சரியான பதம். வறுப்பதை நிறுத்தி, கடலையை ஆற விட வேண்டும்.
கடலை ஆறிய பின், தோல் நீக்கி, இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும். இப்போது, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கொதிக்க விட வேண்டும். கால் டம்ப்ளர் தண்ணீர் போதும். வெல்லத்திலிருந்தும் நீர் கசியும். கம்பி பாகு பதம் வந்ததும், ஏலக்காய், வேர்கடலை சேர்த்து ஒரு கிளறு, கிளறி, அகலமான தாம்பாளத்தில் கொட்டி, அப்பள குழவியால் தேய்த்து, உடனே கத்தியால் துண்டு போட்டு ஆற விட வேண்டும்.
சமமான துண்டுகளாக போட வேண்டுமென்ற அவசியமில்லை. அப்பள குழவியால் தேய்த்து, ஒரே பாலமாக கடலை மிட்டாய் செய்து விட்டால் போதும். ஆறிய பின் பல வித shapeகளில் உடைத்து வைத்தும் சாப்பிடலாம். Peanut Sticks என்று பெயர் சூட்டி மகிழலாம். பிரபல sweet shopsகளில் இப்படித்தான் புது புது பெயர்களில் தின்பண்டங்கள் பிறக்கின்றன.
சிலர், கடலை மிட்டாயில் தேங்காய் பூ சேர்ப்பார்கள். கடைகளில் விற்கப் படும், பிரபல brand கடலை மிட்டாய்களில் glucose சேர்க்கிறார்கள். Chocolate சேர்த்தும் செய்கிறார்கள். இவ்வித சேர்க்கைகள் கடலை மிட்டாயின் உண்மையான சுவையை மறைக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
தமிழகத்தில், கோவில்பட்டி பகுதியில் தயாரிக்கப் படும் கடலை மிட்டாய் வகைகள் ரொம்ப popular. திருச்சி பகுதியில், L.R. கடலை மிட்டாய் அற்புதமாக இருக்கும். Super market வணிகத்தை மனதில் வைத்து தயாரிக்கப் படும் Rajaram போன்ற brands தயாரிக்கும் கடலை மிட்டாய்கள் சுகாதாரமாக தயாரிக்கப் படுகின்றன. Adyar Ananda Bhavan போன்ற பெரிய நிறுவனங்கள் கூட இப்போது கடலை மிட்டாய் தயாரிப்பில் இறங்கி உள்ளன.
வேர்கடலை (நிலக் கடலை - groundnut or peanut) தவிர எள், முந்திரி, பாதாம், வால்நட் மிட்டாய்களும் செய்யலாம்.
வேர்கடலையை வறுத்து, அரைத்தும் கடலை மிட்டாய் செய்வார்கள் (crushed peanut bars). ஒரு fine textureல் கடிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
மகாராஷ்ட்ராவில் புனே அருகில் உள்ள லோனவாலாவில் தயாரிக்கப் படும், chikki என்று அழைக்கப் படும், கடலை மற்றும் மற்ற nuts மிட்டாய்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை lonavala chikki என்றே அழைக்கப் படுகின்றன.
பெரிய பெரிய super market துவங்கி, மிகச் சிறிய பெட்டிக் கடை வரை விற்கப் படும் பொருள் கடலை மிட்டாய். இதனால் தானோ என்னவோ, நம் வீட்டில் கடலை மிட்டாய் செய்ய நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கடையில் விற்கப் படும் கடலை மிட்டாய்க்கும், வீட்டில் செய்யப் படும் கடலை மிட்டாய்க்கும் நிறைய வேறுபாடு உண்டு. கடலை மிட்டாயின் நிஜமான சுவையை நாம், நம் வீட்டு மிட்டாயில்தான் உணர முடியும்.
கடையில் விற்கும் மிட்டாய்களில், வெல்லத்தை, கோந்து போன்ற ஒரு binding material ஆகத் தான் பயன் படுத்துகிறார்கள். அவர்களை பொறுத்த வரை, வெல்லம், கடலை காய்களை இணைக்கும் ஒரு பசை. அவ்வளவுதான். வீட்டில் செய்யப் படுவதில், வெல்லப் பாகு கசிந்து, கடலை மிட்டாயின் அடிப் பகுதியில் பூச்சு போன்று ஒட்டி கொண்டிருக்கும் பாருங்கள். அதை பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும்.
பிராமணர் வீட்டு திருமணம் மற்றும் கிரஹ பிரவேசங்களில் பணியார க்காய் என்ற பெயரில், வேர் கடலை, முந்திரி மற்றும் கடலை பருப்பில் செய்யப் பட்ட, பெரிய கூம்பு வடிவ மிட்டாய்களை சீர்வரிசை தட்டில் வைப்பார்கள்.
நீங்கள் கடையில் விற்கும் கடலை மிட்டாயை சாப்பிடுவதாக இருந்தால், கல்யாண கான்ட்ராக்டர்களிடம் கேட்டு வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். அதன் உண்மையான சுவையை உணரலாம்.
அவிசல் இல்லாத கடலை, தரமான பாகு வெல்லம், பாகு வைக்க பயன்படுத்தும் தண்ணீரின் தரம், பாகு பதம் - இவற்றில் அடங்கி இருக்கிறது கடலை மிட்டாய் சுவை ரகசியம்.
கடலையில் பாகு ஊற்றி கடலை மிட்டாய் ஆக்கிய பிறகு, கடலை சவ சவ என்று போகாமல், 'நறுக்' என்று கடிபட வேண்டும். பாகு பசை போல் வாயில் ஒட்டி இழுபடக் கூடாது. கல்லு போல் இல்லாமல், கடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
Peanut Sticks |

கடலை மிட்டாய் தயாராகிறது |

1 comment:
Very nice .looks great
Post a Comment