(கெட்டி அவல்)
வெல்லம்
முந்திரி
பிஸ்தா
ஏலக்காய் உலர் திராட்சை
நெய்
ஒரு கப் சிவப்பு அவல் போட்டால், ஒன்றரை கப் வெல்லம் போட வேண்டும். நெய் அளவு விருப்பத்திற்கேற்ப. ஒரு கப் சிவப்பு அவலுக்கு, இரண்டு கப் தண்ணீர் தேவைப் படும். அவலை பொறுத்து தண்ணீர் தேவை மாறுபடும்.
அவலை வாணலியில் போட்டு, ஒரு பெரட்டு பெரட்டி எடுக்கவும். சூடேறிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை சேர்க்கவும். தொடர்ந்து கொதிக்க விடவும். அவல் ஓரளவு வெந்த உடன், பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்க்கவும். அவல் முக்கால் பதம் வெந்த பிறகு, உலர் பழங்களை சேர்க்கவும். கேசரி பதம் வந்ததும், நெய் சேர்த்து, கிளறி இறக்கவும்.
உலர் பழங்களை நெய்யில் பொறித்து போடுவதை விட, கேசரியில் பச்சையாக போட்டு வேக வைப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மாறுபட்ட சுவையும் கிடைக்கும்.
ரவா கேசரியை விட, அவல் கேசரி ஆரோக்கியமானது. சிவப்பு அவலில், இரும்பு சத்து, நார் சத்து இரண்டும் அதிகம். ரவா அப்படி அல்ல.
அவல் கேசரியில் சர்க்கரைக்கு (வெள்ளை சீனி) பதில் வெல்லம் சேர்க்கப் படுகிறது. சர்க்கரையை விட வெல்லம் பெட்டர்.
நெய் அளவு மிக குறைவாக, அல்லது நெய்யில்லாமலோ கூட அவல் கேசரி செய்யலாம்.
செய்து பாருங்கள். பிடிக்கிறதா? சொல்லுங்கள்!
1 comment:
Avanukku Yethavathu Aval kidaiththal pothum...avvalavuthan enbargal. Yetharkkaga sonnarkalo theriathu intha aval kesari appadithaan,
Ulagame maranthupogum alavukku
Post a Comment