சிறுபருப்பு பாயசம் |
இன்று (09-11-2013), முருக பெருமான் திருக் கல்யாண நாள். இந்த நாளில் வீட்டில் பாயசம் செய்வது விசேஷம். பல வகை பதார்த்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் பண்டிகை நாட்களில், எளிதாக செய்யக் கூடிய சுவையான பாயசம், சிறுபருப்பு பாயசம்.
பாசி பருப்பு |
பாசி பருப்பு
பால்
வெல்லம்
ஏலக்காய்
முந்திரி
உலர் திராட்சை
பாசி பருப்பு மூழ்கும் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி, வேக வைக்கவும். பாசி பருப்பு வெந்த பிறகு, வெல்லத்தை தூள் செய்து போடவும். வெல்லம் கரைந்த உடன், முந்திரி (சிறு துண்டுகளாக உடைத்து), உலர் திராட்சை இரண்டையும் நெய்யில் பொறித்து போடவும். அடுப்பில் இருந்து இறக்கி, அரை டம்ப்ளர் காய்ச்சிய பாலை சேர்க்கவும்.
சிறுபருப்பு பாயசம் தயார்.
பாசி பருப்பு வெந்த பிறகுதான் வெல்லம் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் பாசி பருப்பு விறைத்து போகும். குழைவாக வராது.
வெல்லம் போட்ட பிறகு ரொம்ப கொதிக்க விடக் கூடாது. வெல்லம் கரைந்த உடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இல்லை என்றால் நீர்த்து போய் விடும்.
No comments:
Post a Comment