உக்காரை
இந்த தீபாவளிக்கு, வெள்ளை சீனி தவிர்த்து, வெல்லத்தில் செய்யப் படும், புராதன இனிப்பான உக்காரை செய்து மகிழ்வோம்.
|
பச்சரிசி - 1/2 கப்
பாசி பருப்பு - 1 கப்
வெல்லம் - 1.25 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - சிறிதளவு
பாசி பருப்பையும், பச்சை அரிசியையும் வாணலியில் போட்டு லேசாக சூடு காட்டவும். சிவக்க வறுக்க வேண்டியதில்லை. சூடு ஏறினால் போதும். சூடு காட்டிய பருப்பு + அரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் கொட்டி ஊற வைக்கவும். 3 மணி நேரம் ஊறியதும், நீரை நன்கு வடித்து, மிக்சியில் போட்டு அறைக்கவும். அறைக்க தண்ணீர் தேவையில்லை. ஊறிய அரிசி, பருப்பிலேயே ஈரப் பதம் இருக்கும்.
நைசாக அறைக்க வேண்டியதில்லை. சிறிது கொர கொரப்பாகக் கூட அறைக்கலாம்.
அறைத்த மாவு, வடை மாவை விடவும் இறுகலாக இருக்கும். இந்த மாவை 20 நிமிட நேரம் ஆவியில் வேக விடவும். ஆவியில் வெந்த மாவை நன்கு உதிர்த்து விட வேண்டும். கட்டி கட்டியாக இருந்தால், மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் பூப் போல உதிர்ந்து விடும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தையும் போட்டு கொதிக்க விடவும். கம்பி பாகு பதம் வந்ததும், உதிர்த்து வைத்த மாவை போட்டு நன்கு கிளற வேண்டும். இப்போது நசுக்கிய ஏலக்காயும் சேர்த்து திரும்ப கிளற வேண்டும். நெய் சேர்த்து, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அனைத்து விட வேண்டும்.
அவ்வளவுதான். உக்காரை ரெடி.
Fridgeல் வைக்காமல், மூன்று நாள் வரை தாங்கும். Fridgeல் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாது.
No comments:
Post a Comment