கருவேப்பிலை பொடி |
கருவேப்பிலை - 2 பிடி
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு -2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 4
வெந்தயம் - 8-10
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை பொடி - செய்முறை:
உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகு, வரமிளகாய், பெருங்காயம் இவற்றை நன்கு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு சற்று முன்பாக கறிவேப்பிலை இலைகளும் சேர்த்து நன்கு வறுக்கவும்,. இறக்கி வைத்து ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்சியில், கொர கொரப்பாக அறைக்கவும்.
வறுத்த உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, மிளகு, வரமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை |
கருவேப்பிலை பொடி ரெடி |
கருவேப்பிலை பொடி - பயன்கள்:
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, கருவேப்பிலை பொடியை போட்டு சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் நீங்கும். தலை முடி உதிர்வது குறையும். முடி நன்கு நீளமாக வளரும். கண் பார்வை பலம் பெரும்.
நல்ல சுவையாக இந்த பொடியை செய்ய விரும்புபவர்கள், அடுப்பை சிம்மில் வைத்து நிதானமாக வறுக்க வேண்டும்.
இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட கருவேப்பிலை பொடி அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்தோடு கருவேப்பிலை பொடி தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு நன்றாக இருக்கும்.
ஆரோக்கியமான, அதே சமயம் சுவையான உணவு பண்டங்களில் ஒன்று கருவேப்பிலை பொடி.
No comments:
Post a Comment