அதிரசம் |
கீழே உள்ள அதிரசம் recipe சொன்னதோடு மட்டும் அல்லாமல் செய்தும் காட்டியவர் திருமதி. கமலா கண்ணன் அவர்கள், பம்மல். நன்றி...நன்றி.
வெல்லத்தில் செய்யப் படும் இந்த அதிரசம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இனிப்பு.
அதிரசம் செய்ய - தேவையான பொருள்கள்
பச்சை அரிசி - 1 கிலோ.
வெல்லம் - 3/4 கிலோ.
ஏலக்காய் - சிறிது
சுக்கு பொடி - சிறிது
நல்லெண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
அதிரசம் - எப்படி செய்வது?
பச்சை அரிசியை 3 மணி நேரம் ஊற போடுங்க. ஊறின அரிசியில இருக்கிற தண்ணீரை வடிகட்டுங்க. வடிகட்டியாச்சா? இப்ப அரிசியை சுத்தமான துணியில போட்டு நல்லா கிண்டுங்க. மிச்சம் மீதி இருக்குற தண்ணியும் வெளியேறிடும். தண்ணி வெளியேறினா போதும். அரிசியை காய வைக்க வேண்டியதில்லை.
அப்புறம் அரிசியை மாவா அரைச்சுடுங்க. அரைச்ச மாவுல, ஏலக்காயை நுனிக்கி (பொடி செய்து) போடுங்க. சுக்கு பொடியையும் போட்டுக்கோங்க.
வெல்லத்தில கொஞ்சமா தண்ணி சேர்த்து பாகு காச்சுங்க. தண்ணி அதிகம் தேவையில்லை. Organic வெல்லம் பயன்படுத்தினா, வடிகட்டுற வேலையுமில்ல. சுத்தமாவும் இருக்கும். அதிரசம் செய்ய ஏற்றது organic வெல்லம். கம்பி பாகு பதம் வர்ற வரைக்கும் கொதிக்க விடுங்க. கொதிக்கிற பாகை தண்ணில ஊத்தினா கரையாம நிக்கும். அதாங்க சரியான பதம்.
கம்பி பாகு பதம் வந்ததும், அடுப்ப அணைச்சு , வெல்ல பாகை மாவில ஊத்தி, கரண்டியால நல்லா கிண்டுங்க. பாகும் மாவும் ஒண்ணா சேரணும். இப்ப கொஞ்சம் (சின்ன டம்ப்ளர்ல கால் டம்பளர் அளவு)நல்லெண்ணெய் விட்டு பிசையணும். இந்த மாவானது , பிசைந்த சப்பாத்தி மாவை விட சற்றே இளகலா இருக்கும். சற்று தளர இருந்தாலும் கவலையில்லை. கொஞ்ச நேரம் போனா இஞ்சிரும் (நீர் வற்றி விடும்).
பிசைந்த அதிரச மாவை துணி போட்டு மூடி (அல்லது மூடிய பாத்திரத்தில் )வைங்க. ஒருநாள் மூடிவைத்து, பின்னர் fridgeல வைக்கலாம். பிசைந்த அதிரச மாவு 15 நாள் வரை கெடாமல் இருக்கும்.
உடனே அதிரசம் சுடுவதை விட, அதிரச மாவை பிசைந்து வைத்து, ஒரு வாரம், பத்து நாள் கழித்து சுட்டால் சுவை நன்றாக இருக்கும். சுட்ட அதிரசம் ஒரு மாதம் வரை கூட கெடாது. Fridgeல் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாதபடி ஒரு பாத்திரத்தில் (Air-tight container) போட்டு மூடி வைத்தாலே போதும். அதைவிட, அதிரச மாவு செய்து வைத்து, தேவைப்படும்போது கொஞ்சமாக சுட்டு சாப்பிடலாம். அதிரச மாவே அதி ரசமாக இருக்கும்.

Photo: தீபக் ராஜா |
Photo: தீபக் ராஜா |
Photo: தீபக் ராஜா |
Photo: தீபக் ராஜா |
ஒரு வாணலியில நல்லெண்ணெய் ஊத்தி, அடுப்பில வச்சு, புகைய ஆரம்பிச்சதும், பிசைஞ்சு வச்ச அதிரச மாவ வட மாதிரி தட்டி போட்டு பொரிச்சு எடுங்க. தடியா இல்லாம, மெல்லிசா மாவை தட்டணும்.
பொன்னிறமா பொரிஞ்சு வரணும். நெய்யில கூட பொரிக்கலாம். வாயில போட்டு கடிக்கிற போது, மேற்புற பகுதி சற்றே முறுகலா இருக்கும். உள்ளே கடிச்சா அவ்வளவு soft ஆ இருக்கும். இந்த contrast feeling தான் அதிரசத்தின் சிறப்பு.
வெல்ல அதிரசம் ரெடி.
வெல்ல அதிரசம் ரெடி.
அவ்வளவுதாங்க. சுட சுட அதிரசத்த சாப்புடற வேலைதான் பாக்கி.
அதிரசம் |
அதிரசம் செட்டிநாடு பகுதியின் ஆஸ்தான இனிப்பு. செட்டிநாட்டு பகுதியிலிருந்து எந்த ஊரில் வந்து settle ஆனவர்களா இருந்தாலும், அவர்கள் அதிரசம் செய்யும் வழக்கத்தை மட்டும் விட மாட்டார்கள்.
அதிரசம் |
No comments:
Post a Comment