நான்கு இறக்கை கொண்ட ஆளில்லா விமானம் (drone) |
"குறைந்த செலவில் குறுகிய காலத்தில் பொருள்களை நுகர்வோர் நுழைவாயிலில் கொண்டு செல்வது எப்படி?" என்பது Amazon.com போன்ற இணைய வணிக நிறுவனங்களின் கேள்வியாக உள்ளது. அதுவும் மும்பை, நியூயார்க் போன்ற வானுயர்ந்த கட்டடங்கள் நிறைந்த பெருநகரங்களில் இது மிகப் பெரிய சவால்தான். நுகர்வோருக்கு தேவையான பொருள்களை, Drone எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம், நுகர்வோரின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் Amazon.com இறங்கி இருக்கிறது. இத்தகைய ஆளில்லா விமானங்களின் வணிக பயன்பாடு, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னமும் சட்டரீதியாக அனுமதிக்கப் படவில்லை. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
8k.m. பறந்த பின் பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும் |
மும்பையில் இயங்கி வரும் சிறிய பீட்சா நிறுவனமான Francesco Pizzeria, சோதனை முயற்சியாக Drone மூலம் பீட்சா டெலிவரி செய்வதில் வெற்றி கண்டுள்ளது. Francesco Pizzeria வின் தலைமை செயல் அதிகாரி திரு. மைக்கேல் ரஜானி (Mikhel Rajani) யின் நெருங்கிய நண்பர் வீட்டிற்கு Drone மூலம் பீட்சா அனுப்பியுள்ளது அந்த நிறுவனம்.
8 இறக்கை கொண்ட ஆளில்லா விமானம் 8 கிலோ எடை வரை தாங்குமாம் |
மே 11 அன்று, மத்திய மும்பையின் Lower Parel பகுதியில் இருக்கும் Francesco Pizzeria நிறுவன கிளையில் இருந்து, 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வொர்லியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 21 வது மாடிக்கு, Drone மூலம் அரை கிலோ எடையுள்ள பீட்சாவை அனுப்பியுள்ளது. இதற்கு ஆன நேரம் பத்து நிமிடங்கள்தான். இந்தியாவில் முதன்முறையாக இத்தகைய முயற்சி நடைபெற்றிருக்கிறது.
இந்த ஆளில்லா விமானத்தை வடிவமைக்க 2000 அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. நம்மூர் மதிப்பில் ஏறக்குறைய ஒரு லட்சத்து பதினேழாயிரம் ரூபாய். இன்னும் ஐந்து வருடங்களில் Drone மூலம் பொருள்கள் அனுப்பும் முறை நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
21 வது மாடியில் பீட்சா இறக்கப் படுகிறது |
நம்ம ஊர் சரவண பவனும், சங்கீதாவும் இட்லி, தோசைகளை நம் வீட்டு மொட்டை மாடியில் போட்டு விட்டு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.என்ன ஒன்று....காக்கா கொத்திச் செல்லும் முன் நாம் முந்த வேண்டும். அவ்வளவுதான்.
Photos captured from you tube video
1 comment:
Very good information. sundar
Post a Comment