Guest Post by Srividya Raman:
நேற்று (14-05-2014) சித்ரா பௌர்ணமி. அதாவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி. தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு பௌர்ணமி முழு நிலவு நாளுக்கும் ஒரு விசேஷம் உண்டு. சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி. வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், தை பூசம், பங்குனி உத்திரம் என்று முழு நிலவு நாளில் இறைவன் சம்பந்தமாக ஏதாவது செய்வார்கள். அதன்படி இன்று சித்ரா பௌர்ணமி. ஆற்றங்கரையோர கிராமம் மற்றும் நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டில் சிற்றன்னங்களை தயாரிப்பார்கள். மாலை வேளையில் நண்பர்கள் உறவினர்கள் எல்லோருமாக ஆற்றங்கரைக்கு சென்று உண்டு மகிழ்வார்கள்.
நகரத்தில் வசிக்கும் நாம் என்ன செய்யலாம்?
மனமிருந்தால் மார்க்கமுண்டு. எங்கள் அடுக்ககத்தில் நேற்று MOONLIGHT DINNER.
பொங்கல் - சட்னி, எலுமிச்சை சேவை, ரவை கேசரி, சேமியா கேசரி, சப்பாத்தி - குருமா, இட்லி - சாம்பார் என எல்லாவற்றையும்
தயார் செய்து மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்து உண்டோம். என்ன ஒன்று..... ஆற்றின் மணல்வெளிக்கு பதிலாக மொட்டை மாடியின் தண்ணீர் தொட்டி. அவ்வளவுதான். முடிந்தவரை பழைய சம்பிரதாயங்களை கடை பிடிக்க முயற்சி செய்யலாமே.
தயார் செய்து மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்து உண்டோம். என்ன ஒன்று..... ஆற்றின் மணல்வெளிக்கு பதிலாக மொட்டை மாடியின் தண்ணீர் தொட்டி. அவ்வளவுதான். முடிந்தவரை பழைய சம்பிரதாயங்களை கடை பிடிக்க முயற்சி செய்யலாமே.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எங்கள் தெருவில் இரவு பதினொன்றரை மணிக்கு வந்த மதுரை வீரன் தரிசனம் இதோ உங்களுக்காக. நல்ல உடல் நிலையில் இருப்பவர்கள் இறைவனை தேடி கோயில்களுக்கு செல்லலாம். மாற்று திறனாளிகளுக்கும் ,வயசாளிகளுக்கும் இறைவனே தேடி வந்து தரிசனம் தருவதுதான் சுவாமி வீதி உலாவின் தாத்பர்யம்.
1 comment:
It is really nice to bring the atmosphere, of being in the bank of a river, to your terrace sharing the homely food with near and dear and the neibourhood. The visit of the Almighty might have been promoted by the smell and lipsmacking food prepared in your household. Please continue to celebrate every occasion.
Post a Comment