அப்பம் |
' தலைவாழை விருந்து ' துவங்கி, நேற்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றது. இன்று முதல் (05-05-2014) இரண்டாம் வருடம் துவங்குகிறது. ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகள். இரண்டாம் வருடத்தை இனிப்புடன் துவங்குவோமே என்ற எண்ணத்தில் அப்பம் இனிப்பு ரெசிப்பி தருகிறேன்.
அப்பம்....எளிய, பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று. பண்டிகை தினங்களில் என் அம்மா கட்டாயமாக செய்யும் இனிப்பு... அப்பம். அரிசி,கொஞ்சம் உளுந்து ....வெல்லம்...அவ்வளவுதான். ஊற வைத்து, அரைத்து... நல்லெண்ணெய்யில் பொறித்து எடுத்து விடுவார் என் அம்மா. நொடியில் ரெடி என்பார்களே. அப்படிப்பட்ட தயாரிப்பு அப்பம். பின்னாளில் தேங்காய் சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. தேங்காய் சேர்த்தால் உளுந்து தேவையில்லை.
பச்சை அரிசி -1 கப்
வெல்லம் -3/4 கப்
தேங்காய் -5கீறல்கள்
ஏலக்காய் - சிறிது
நல்லெண்ணெய் -பொரிக்க
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். mixieல் அரிசி, தேங்காய் துருவல் இரண்டையும் நன்கு அரைக்கவும். கடைசியாக வெல்லம், ஏலக்காய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி ....வேறு பாத்திரம் மாற்றிக்கொள்ளவும். உடனடியாக அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் குழி கரண்டியில் மாவை எடுத்து நடுவாக ஊற்றவும். மூழ்கிய அப்பம் மேலெழுந்து வந்ததும் ஜல்லி கரண்டியால் திருப்பி விடவும். லேசாக கரண்டியால் அழுத்திவிட்ட்டால் நன்கு வெந்துவிடும். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு ஆறியதும் சாப்பிடவும்.
அரைத்த மாவு உடனடியாக பயன்படுத்த வேண்டும். தாமதமானால் எண்ணெய் நிறைய குடிக்கும். taste வராது.
அரைத்த மாவு உடனடியாக பயன்படுத்த வேண்டும். தாமதமானால் எண்ணெய் நிறைய குடிக்கும். taste வராது.
அப்பம் மாவு |
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும் |
ஒரு கரண்டியில் அப்ப மாவு எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றவும் |
வெந்ததும் திருப்பி விட்டு வேக வைக்கவும் |
அப்பம் ரெடி |
குழிப் பணியார கல்லில் செய்தால் குறைவான எண்ணெய் போதும். எண்ணெய்க்கு பதில், நெய்யில் பொரித்தால் அது நெய் அப்பம். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் அப்படித்தான் செய்கிறார்கள். கொஞ்சம் திகட்டும். மாவில் சிறிது நெய் விட்டு பிசைந்து, எண்ணெயில் பொரித்து எடுப்பதும் உண்டு.
அரிசி மாவை கெட்டியாக அரைத்து, பருப்பு, தேங்காய் பூரணம் உள்ளே வைத்து, பொரித்து எடுத்தால் அது சுய்யம் அல்லது சிய்யம். கேரளாவின் உன்னியப்பம் ஏறக்குறைய இதே போன்ற ஓர் இனிப்புதான். அங்கே வாழைப் பழமும் சேர்த்து அரைப்பார்கள்.
இதே அப்பத்தை கடலை மாவு அல்லது கோதுமை மாவு பயன் படுத்தியும் சிலர் செய்கிறார்கள். அப்படி செய்யும்போது கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை அன்று கட்டாயம் அப்பம் செய்வார்கள். அதனால் அப்பத்தை கார்த்திகை அப்பம் என்றும் சொல்வார்கள்.
2 comments:
Congratulations on your II year.
Best wishes for continuous progress
Latha Sudhakar
Thanks for your wishes, Madam.
Post a Comment