Showing posts with label சுண்டல். Show all posts
Showing posts with label சுண்டல். Show all posts

Friday, 10 January 2014

வேர் கடலை சுண்டல்

வேர் கடலை சுண்டல் 

தேவையான பொருள்கள் 


வேர் கடலை - 200 கிராம்.
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப் பட்டால்.
தேங்காய் - விருப்பப் பட்டால்.


செய்வது எப்படி?


வேர் கடலையை, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து, ஊறிய வேர்கடலையை (தண்ணீருடன் ) உப்பு போட்டு, அடுப்பில் வைத்து வேக விடவும். வேர்கடலை நன்கு பதமாகும் வரை வேக வைக்கவும். வேர்கடலை வெந்ததும், தண்ணீரை வடித்து, ஒரு வாணலியில்  கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வர மிளகாய் தாளித்து,பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு, தண்ணீர் வடித்த வேர் கடலையும் போட்டு, நன்கு கிளறி இறக்கவும்.

துருவிய தேங்காய் தூவி, பரிமாறவும்.

Thursday, 17 October 2013

கடலை பருப்பு சுண்டல்



தேவையான பொருள்கள் 


கடலை பருப்பு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 1.
வர மிளகாய் - 2.
கருவேப்பிலை 
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்



கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.  பின்னர் நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை வேக விடவும்.   உப்பு சேர்த்து  ஒரு கொதி விட்டு, நீரை வடித்து வைக்கவும்.  வாணலியை  அடுப்பில் வைத்து  சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் தாளித்து,  கருவேப்பிலை, பச்சை  மிளகாயுடன் கடலை பருபையும்  சேர்த்து கிளறவும். இறக்கி வைத்து தேங்காய் துருவலை கலக்கவும்.   புரதச் சத்து நிறைந்த கடலை பருப்பு சுண்டல் தயார்.

" அதிகம் உண்பதும் தவறு.....அதிக நேர இடைவெளி விட்டு உண்பதும் தவறு "    என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் பார்த்தால், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையில், மாலை நேர சிறு உணவாக உட்கொள்ள, சுண்டல் வகைகள் சிறந்தவை. 

Wednesday, 16 October 2013

பாசி பருப்பு சுண்டல்

பாசி பருப்பு சுண்டல் 

 தேவையான பொருள்கள் 


பாசி பருப்பு - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்




250 மி.லி. அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும். பிறகு, தேவையான அளவு உப்பை போட்டு, பாசி பருப்பையும் போடவும். உப்பு போட்டு வேக வைத்தால் தான், பாசி பருப்பு குழையாமல், உதிர், உதிராக இருக்கும். 

ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும். 20 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய்  போட்டு தாளிக்கவும். பச்சை  மிளகாய் கருவேப்பிலை இரண்டையும் போட்டு, ஒரு பெரட்டு பெரட்டி, நீர் வடித்த பாசி பருப்பையும்போட்டு கிளறவும்.


அடுப்பை அணைத்து,   பின் துருவிய தேங்காயை தூவவும். நவராத்திரி மட்டுமன்றி எல்லா நாட்களிலும் எளிதாக செய்யக் கூடிய , பாசி பருப்பு சுண்டல் ரெடி.




பாசி பருப்பு சுண்டல் 

Tuesday, 15 October 2013

சிறு (சிவப்பு) காராமணி சுண்டல்-வட இந்திய பாணி

சிவப்பு சிறு காராமணி சுண்டல்-வட இந்திய பாணி 
சிறு (சிவப்பு)காராமணி 
காராமணியில் மூன்று வகை உண்டு. பெரிய சிவப்பு காராமணி, சிறு காராமணி (சிவப்பு) மற்றும் வெள்ளை காராமணி. சிறு காராமணி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.  Morarka Organic ல் சிறு காராமணி கிடைக்கிறது. 

நவராத்திரி சீசன் என்பதற்கு பதிலாக சுண்டல் சீசன் என்று சொல்லி விடலாம். குறைந்தது ஒரு டஜன் சுண்டல் வகைகள் செய்கிறார்கள். அடிப்படையில் இனிப்பு சுண்டல், கார சுண்டல், மசாலா சுண்டல், பீச் சுண்டல் (தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்), ஒன்றுக்கு மேற்பட்ட பருப்பு வகைகளை கலந்து செய்யும் கதம்ப சுண்டல் என்று சுண்டலை வகைப் படுத்தலாம். 

வழக்கமான சுவையிலிருந்து சற்றே மாறுபட்ட சுண்டலை செய்யலாமே என்று தோன்றியது. அதுதான் வட இந்திய பாணி சுண்டல். Morarka Organic products பெரும்பாலானவை ராஜஸ்தானில் பயிரிடப் படுபவை. அதை வட இந்திய பாணியிலேயே செய்து பார்க்க நினைத்தேன்.

மாறுதலான, நல்ல சுவை கிடைத்தது. இதோ....வட இந்திய பாணி சிறு காராமணி சுண்டல்.

சிறு (சிவப்பு) காராமணி-100 கிராம்

சாட் மசாலா  - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு (விருப்பப் பட்டால்)
வர மிளகாய் -2
கடுகு 
உளுத்தம் பருப்பு 
மஞ்சள் தூள் 


காராமணி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வைக்கவும். 4 மணி நேரம் ஊறிய பிறகு, அடுப்பில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்த பிறகு, உப்பு போட்டு தொடர்ந்து வேக வைக்கவும். 

காராமணியை தண்ணீர் வடித்து, எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடுகு சேர்த்து  தாளித்து சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் கருவேப்பிலை மற்றும்   காராமணியை  சேர்த்து கிளறவும். ஒரு பாத்திரத்துக்கு சுண்டலை மாற்றி சூடு ஆறுவதற்குள் chat  மசாலாவை கலந்து பரிமாறவும். விருப்பப்படுவர்கள்  சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.


கொலு கொண்டாட்டம் - சென்னை முப்பாத்தம்மன் கோவில் கொலு
                                                                                  PHOTO: Srividya Raman

Monday, 14 October 2013

சிறு (வெள்ளை) மூக்கு கடலை சுண்டல்

மூக்கு கடலை சுண்டல் 


சிறு (வெள்ளை) மூக்கு கடலை - 150 கிராம்
(White Channa-Small)

தேங்காய்

கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
வர மிளகாய் - 3
கருவேப்பிலை
பச்சை மிளகாய் - 2

உப்பு



எல்லா கடலைகளையும் போல இதற்கும்  மூழ்கும் அளவு நீர் விட்டு, ஒரு கொதி விட்டு அடுப்பை அணைத்து், மூடி வைக்கவும்.

முக்கால் பதம் வெந்தபிறகு தேவையான உப்பு சேர்த்து, நசுக்கினால் மாவாகும்  வரை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் இவற்றை சிவக்க வறுத்து, ஆறியவுடன் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து  வைத்து கொள்ளவும்.

 பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, ஒட்ட நீர் வடித்த கடலையை சேர்க்கவும். 

சிறிது பிரட்டி, அரைத்து வைத்த பொடியை தூவி,  நன்கு கலந்து இறக்கவும்.

சிறு (வெள்ளை) மூக்கு கடலை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. பெரிய வெள்ளை கடலை (காபுலி சன்னா) தான் எல்லா கடைகளிலும்கிடைக்கிறது. சிறு வெள்ளை கடலை Organic கடைகளில் கிடைக்கிறது. 


கொலு கொண்டாட்டம் - சென்னை முப்பாத்தம்மன் கோயில் கொலுவில் கல்யாணமும் சாப்பாட்டு பந்தியும்                        PHOTO: Srividya Raman

Friday, 11 October 2013

பாசி பயறு சுண்டல்

பாசி பயறு சுண்டல் 

தேவையான பொருள்கள் 


பாசி பயறு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 1.
வர மிளகாய் - 2.
கருவேப்பிலை - சிறிது.
தேங்காய் 
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்




பாசி பயறை வாணலியில் வறுத்து, பின் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். முக்கால்  பதம் வெந்ததும் உப்பு போட்டு, தொடர்ந்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும், தண்ணீரை வடித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.



ஒரு வாணலியில் வர மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு, நீர் வடித்த பயறையும் போட்டு நன்கு கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, துருவிய தேங்காய் தூவவும். இப்போது பாசி பயறு சுண்டல் சுடச் சுட தயார்.



பாசி பயறு , உடைக்காமல், முழு பயறாக (Green Moong Dal-Whole) பயன் படுத்தப் படுவதால், இதில் நார் சத்து அதிகம். நவராத்திரி தினங்களில் மட்டும் அல்லாமல், மற்ற நாட்களிலும் இந்த சுண்டலை சாப்பிடுவது நல்லது. பொதுவாக, உடல் எடை குறைக்க விரும்புவோரும், சர்க்கரை நோய் (Diabetes) உள்ளோரும் மாலை வேளையில் பாசி பயறு சுண்டல் சாப்பிடலாம்.
கொலு கொண்டாட்டம்-மரப்பாச்சி 

Tuesday, 8 October 2013

காபுலி சன்னா மசாலா சுண்டல்

வெள்ளை கொண்டை கடலை மசாலா சுண்டல்
(காபுலி சன்னா சுண்டல்)
வெள்ளை கொண்டை கடலை (காபுலி சன்னா) - 150 கிராம் 

தேங்காய்                -சிறிது
சீரகம்                         - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய்   - 1
வர மிளகாய்          - 3.
கடுகு                          - சிறிது
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
                                                       கடலை பருப்பு     - 1 ஸ்பூன்.
                                                      பெருங்காயம்       - சிறிது 
                                                      கருவேப்பிலை     -சிறிது
                                                      உப்பு                            -தேவைக்கு 






வெள்ளை கொண்டை கடலையை, மூழ்குமளவு தண்ணீரில் போட்டு, ஒரு கொதி விட்டு, மூடி வைத்து விடவும். 6-7 மணி நேரம் கழித்து, ஊறிய வெள்ளை கொண்டை கடலையை வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்த பிறகு, உப்பு சேர்த்து, திரும்பவும் வேக வைக்கவும். நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை வேக வைக்க வேண்டும். வெந்த பின், நீரை ஓட்ட வடித்து வைத்து விடவும்.


உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய் மூன்றையும் சிவக்க வறுக்கவும். ஆறிய பிறகு, தேங்காய் துருவல், சீரகம் 
பச்சை மிளகாய்  சேர்த்து கொர, கொரப்பாக அரைக்கவும்.


வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தாளிக்கவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டவும்.



நீர் வடித்த வெள்ளை கொண்டை கடலையை , வாணலியில் போட்டு, அரைத்த பொடியும் சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டி, அடுப்பை அனைத்து விடவும். 

சுவையான வெள்ளை கொண்டை கடலை சுண்டல் தயார்.



கொலு கொண்டாட்டம் 




Monday, 7 October 2013

கருப்பு கொண்டை கடலை சுண்டல்

கொண்டை கடலை சுண்டல் 
(மூக்கு கடலை சுண்டல்)



கொண்டை கடலை - 150 கிராம்.
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு 
பெருங்காயம் 
உப்பு 
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்




கொண்டை கடலையை , மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும். பிறகு, 6-7 மணி நேரம் வரை  ஊற வைக்கவும். ஊறிய பிறகு, வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்த பிறகு, உப்பை போட்டு தொடர்ந்து வேக விடவும். ஆரம்பத்திலேயே உப்பை போட்டால் கொண்டை கடலை நன்கு வேகாது.

நன்கு வெந்ததும், தண்ணீரை வடிக்கவும். ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வர மிளகாய் போட்டு தாளித்து கொட்டவும். பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு, நன்கு கிளறவும். 

அடுப்பிலிருந்து இறக்கி, துருவிய தேங்காய் தூவி பரிமாறவும். தேங்காயை பல்லு, பல்லாக நறுக்கியும் போடலாம்.

கொண்டை கடலையை மூக்கு கடலை என்றும் சொல்வார்கள்.

சரஸ்வதி பூஜையன்று செய்யப் படும் சுண்டல்  இது.


கொலு கொண்டாட்டம் 

Saturday, 5 October 2013

காராமணி இனிப்பு சுண்டல் - நவராத்திரி சிறப்பு உணவு

காராமணி இனிப்பு சுண்டல் 
            இன்று (அக்டோபர் 5, 2013) நவராத்திரி விழா துவங்குகிறது. அக்டோபர் 14ம் தேதி விஜயதசமி பண்டிகையோடு நிறைவு பெறுகிறது. துர்க்கை வழிபாடு, லக்ஷ்மி வழிபாடு, சரஸ்வதி வழிபாடு - இவை  ஒன்பது இரவுகளின் (நவராத்திரி) முக்கிய அம்சமாகும். பத்தாம் நாள் இரவன்று, அசுரர்களை வதம் செய்த முப்பெரும் தெய்வங்களின் வெற்றியை கொண்டாடுவது  விஜயதசமி. இந்த  தினங்களில் விரதம் இருப்பது வட மாநில மக்களின் வழக்கம். தமிழ்நாட்டை பொறுத்த வரை....கொலு, பல்வேறு உணவுகள், ஆடை அணிகலன்கள் என்று, பெண்கள் கோலாகலமாக கொண்டாடுவதுதான் நம்ம ஊர் நவராத்திரி. இதை நம் பெண்களின் சமூக திருவிழா என்றும்  கூறலாம்.

                  தலைவாழை விருந்தில் இந்த பத்து நாட்களும் சிறப்பு நவராத்திரி விருந்து வழங்க இருக்கிறோம்.

                              நவராத்திரி முழுவதும் தலைவாழை விருந்தில் வெளிவரும் உணவு குறிப்புகள் குறித்து உங்கள் comments ஆவலோடு எதிர்பார்க்கப் படுகிறது.


காராமணி -150gms
தேங்காய்- சிறிது
வெல்லம்- தேவைக்கு 
ஏலக்காய் -சிறிது



காராமணியை  வாணலியில் லேசாக வறுத்து,   நீர் விட்டு வேகவைக்கவும்.  நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை  வேக வைத்து,  நீரை வடித்து விடவும்.  வாணலியை அடுப்பில் வைத்து,  சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு  தாளித்துக்கொள்ளவும். பின்னர்,  ஒட்ட நீர் வடித்த காரமணியை போட்டு கிளறவும்.  துருவிய வெல்லத்தையும் போட்டு, மெல்ல கிளறி, பல்லு பல்லாக  நறுக்கிய தேங்காயை சேர்த்து இறக்கவும். ஏலப்பொடியை லேசாக தூவி கடவுளுக்கு படைக்கவும். 


Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...