Wednesday 14 December 2022

கூடிழந்த பறவகள்

10/12/2022 அன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்து கொண்டிருந்த பொழுது திடீரென ஏதோ விழுவது போல் சப்தம். எழுந்து போய் பால்கனி கதவை திறந்து பார்த்தால் எதிரே உள்ள கட்டிடத்தின் விளக்குகள் பளீரென தெரிந்தது. பின்னர்தான் உறைத்தது இத்தனை நாட்களாக விளக்கின் வெளிச்சத்தை மறைத்து கொண்டிருந்த வேப்பமரத்தை காணவில்லை என்பதே. எட்டிபார்த்தேன். சாலையை அடைத்து கொண்டு கிடந்தது அந்த வேப்ப மரம். எத்தனை பறவைகள் அதிலும் குறிப்பாக காகங்கள் கூடு கட்டி குடுத்தனம் நடத்தி கொண்டு இருந்தன தெரியுமா? ஒரு காகம் முட்டையிட்டு குஞ்சு பொரித்து தனது குழந்தைக்கு கரைய கற்று கொடுத்தது வரை பல நாட்கள் கண்டு ரசித்து இருக்கிறேன். என்னை பார்த்து பயந்ததேயில்லை அந்த பறவைகள். அதிலும் ஒரு காகம் நான் சாதம் வைக்க தாமதம் ஆனால் சமையலறை ஜன்னலில் வந்து அமர்ந்து கத்தும். வந்துட்டியா மாமியாரே! என்று சொல்லி விட்டுதான் சாதத்தை பால்கனிக்கு எடுத்து செல்வேன். அடுத்த நொடி பறந்து வந்து பால்கனியில் அமர்ந்து கொள்ளும். கோடை காலங்களில் தண்ணீர் வேண்டும் என்றால் தண்ணீர் வைக்கும் டப்பாவை கொத்தி கொத்தி காட்டும். இன்று மரம் மிகப்பெரிய அளவு சரிந்து விட்டது. எங்கே சென்றிருக்கும் கூடு இழந்த பறவைகள். நாடிழந்த அகதிகள் போல் ஆகி விட்டன கூடிழந்த பறவைகளின் நிலை. அடுத்தநாள் பொழுது விடிந்ததும், ஆட்கள் வந்து மரத்தை வெட்டிய பொழுது அடுத்து இருக்கும் கட்டிடங்களில் அமர்ந்து பார்த்து கொண்டே இருந்தன அந்த பறவைகள். ஏற்கனவே நகரங்களில் தனி வீடுகள் அடுக்குமாடியாக மாறும்போது பசும் மரங்களை பலி கொடுத்து தான் கான்கிரீட் காடுகளை உருவாக்குகிறாகள். இந்த நிலையில் இயற்கையும் சதி செய்தால் எங்கு செல்லும் இந்த பறவைகள்? பல பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு மரத்தின் பயணம்

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...