Thursday 27 June 2013

சிக்கரி-சில உண்மைகள்

காபி ப்ளஸ்



சிக்கரி செடி 
ரவலாக காபியுடன் சேர்க்கப் படும் பொருள்களை பற்றி பார்க்கலாம். முதலில் வருவது காபியே. அதாவது பிளான்டேஷன் 'A' காபியுடன், பீ - பெர்ரி அல்லது ரோபஸ்டா சேர்ப்பது இந்த வகையில் வரும். இதில் தவறில்லை. 

டுத்து, cocoa எனப் படும் சாக்லேட். Cold Coffee ல் துவங்கி பல விதமான காபி+ cocoa  பானங்கள் தயாரிக்கப் படுகின்றன. 
சிக்கரி வேர்

மூன்றாவதாக  நாம் குறிப்பிடப் போவது the Great Chicory பற்றி. Chicory செடியின் வேர்ப் பாகத்தை வறுத்து, பொடித்து தயாரிக்கப் படுவது தான் Chicory. காபி போன்ற நிறம் இருப்பதால் காபியுடன் Chicory சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. காபி கிடைக்காத இக்கட்டான கால கட்டத்தில், வேறு வழியே இல்லாமல் காபிக்கு மாற்றாக பயன் படுத்தப் பட்ட பொருள் Chicory. அமெரிக்காவின் லூசியான மாகாணத்தில் உள்ள New Orleans பகுதியில் காபி பெருவாரியாக உபயோகப் படுத்தப் பட்டு வந்தது. 1840ல் உள்நாட்டு போர் காரணமாக,  New Orleans துறைமுகத்தில் காபி இறக்குமதி செய்ய முடியாத சூழல். இந்த  தருணத்தில், வேறு வழியில்லாத மக்கள் காபிக்கு  பதில் Chicoryயை பயன் படுத்த துவங்கினர். Chicory அதிகம் கலந்த காபி 'New Orleans Coffee' என்றே அழைக்கப் படுகிறது. 
சிக்கரி பொடி 

17 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், காபி பற்றி அறியாத சில ஐரோப்பிய பகுதிகளில் Chicory பயன் பாட்டில் இருந்திருக்கிறது. பின்னர், காபி பற்றி அறிந்தவுடன்,  காபி  யுடன் Chicoryலந்து பயன்படுத்தினர்.

னவே, காபியின் அறிமுகம் கிடைக்காத கால கட்டத்திலும், காபி கிடைக்காத இக்கட்டான சூழலிலும், காபி கிடைத்த போதிலும் சிக்கரி  விலை குறைவு என்பதாலும், மக்களால்  Chicory பயன் படுத்தப் படுகிறது.  Chicory காபி போல தான். காபி அல்ல. காபியில் கசப்பு சுவை மிதமாக இருக்கும். ஆனால் சிக்கரியில் கசப்பு சுவை அதிகமாக இருக்கும். காபி சுவைக்கும், சிக்கரி சுவைக்கும் வேறுபாடு காண்பது எளிது.  சிக்கரி வாசனையும் காபி வாசனையிலிருந்து வேறுபட்டது. எந்த கலப்படமும் இல்லாத pure filter coffee குடிக்கும் வழக்கம் உள்ளவர்களின் கண்ணை கட்டி விட்டு சிக்கரி கலந்த காபியை கொடுத்தால் கூட, குடித்து பார்க்காமலே, வாசத்தை வைத்தே, சிக்கரி கலந்த காபியை அடையாளம் காட்டி விடுவார்கள்.

நிறத்தை தவிர சிக்கரிக்கும்,  காபிக்கும் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. ஹீரோவுக்கு  பதில் களத்தில் நிறுத்தப் படும் டூப் போன்றவர்தான் நமது சிக்கரியாரும். Chicoryயை காபியுடன் சேர்க்கப் படும் கலப்படப் பொருள் என்றுகூட கூறலாம். இங்கிலாந்தில், காபியுடன் chicoryயை கலப்படம் செய்வது, 1832ல் தடை செய்யப் பட்டது. பின், 1840ல், chicory கலப்பு குறித்து காபி வாங்குவோருக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.


தமிழ்நாட்டில் , சில கடைகளில் நீங்கள் filter coffee powder வாங்கினால் chicoryயை தனியாக தான் தருவார்கள். காபி பொடியுடன் கலந்து, ஒரே பாக்கெட்டில் தர மாட்டார்கள். அதே போல், instant coffee பயன்படுத்துவோர் தான் அதிக அளவில் chicory கலந்த காபியை பயன்படுத்துகிறார்கள். Chicory கலக்காத instant coffee varietyயை காணவே முடியாது. Filter Coffee பிரியர்கள் எப்போதுமே pure coffee ஆதரவாளர்கள் தான்.

ஆங்கில இலக்கியத்தில் blue flower என்பது காதலை குறிக்கும் காவிய வார்த்தை. படத்தில் உள்ள chicory செடியின் பூக்களை பாருங்கள். என்ன அழகான நீல நிறம்! ஆங்கில இலக்கியமே chicory யின் நீல நிற பூக்களால் கவரப் பட்டிருக்கிறது. Chicory யின் பூக்களை  மட்டும் ரசிப்போம்.


சிக்கரி பயன் படுத்தும் பலரும் கேட்கும் ஒரு கேள்வி, சிக்கரி இல்லாமல் திக்கான காபி போடுவது எப்படி? பிளான்டேஷன் 'A', பீ-பெர்ரி, ரொபஸ்டா இந்த வகைகளின் கலப்பு (blend), திக்கான காபி தரும். உங்களுக்கு தேவையான சுவையும், போதுமான அளவு திக்கான காபியும் கிடைக்கும் வரை வெவ்வேறு அளவுகளில் இந்த காபி வகைகளை blend செய்து பார்க்க வேண்டும். எந்த blend உங்களுக்கு பிடித்த சுவை மற்றும் கெட்டியான காபியை தருகிறதோ, அதுதான் உங்களுக்கான blend.

கடைசியாக சில விஷயங்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் chicory யை உட்கொள்ளக் கூடாது. Chicory நாடித் துடிப்பை குறைத்து விடும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய தன்மை கொண்டது chicory. எனவே மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படும் beta-blocker என்ற வகை மருந்தை உட்கொள்வோர் chicory சாப்பிடக் கூடாது. Beta-blocker வகை மருந்தின் வீரியத்தை chicory குறைத்து விடும்.

காபியில் உள்ள caffeine நம்மை சுறு சுறுப்பாக வைத்திருக்கும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் காபி குடிப்பது நம்மை நாள் முழுவதும் alert ஆக வைத்திருக்கும்.  ஞாபக மறதி நோய் அண்டாது. 

சென்னையில் chicory கலப்படம் இல்லாத filter coffee கிடைக்கும் சில இடங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் (Terminus) எதிரில் உள்ள India Coffee House. இங்கு காபி விலையும் குறைவு. ஒரு கப் காபி 15 ரூபாய். (Hotel Saravana Bhavan ல் 30 ரூபாய்). இங்கு Plantation 'A' வகையுடன் Robusta வை blend செய்த காபி கிடைக்கிறது. நல்ல சுவை. Hotel Saravana Bhavan காபி கூட chicory இல்லாத காபிதான். அடுத்து சங்கீதா ஹோட்டல் மற்றும் Okadey's ஹோட்டல் கிளைகள். அப்புறம்  Triplicane Ratna Cafe. ஸ்ட்ராங்கான காபி. சர்க்கரை போடாமல் தருவார்கள். வேண்டிய அளவு சர்க்கரை நாம் போட்டுக் கொள்ளலாம். எக்ஸ்ட்ரா டிகாக்க்ஷன்  தருவார்கள். ஏறக்குறைய நமக்காக நம் வீட்டில் நாமே காபி போட்டுக் குடித்த அனுபவம் இங்கே  கிடைக்கும். Pure Filter Coffeeக்கு ஒரு 'like' போடுவோம்.

Sunday 23 June 2013

மாங்காய் தொக்கு


தேவையான பொருள்கள் 


தொ  க்கு மாங்காய்,மிளகாய் பொடி, நல்லெண்ணெய், கடுகு, பெருங்காய தூள், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, உப்பு.


செய்முறை 


அ  ரை ஸ்பூன் வெந்தயத்தை இலுப்ப சட்டியில் போட்டு, சிவக்கும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் பொடிக்க வேண்டும். பொடித்த வெந்தயத்தை தனியாக வைத்துக் கொள்ளவும்.

  த்து வர மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, சூடு ஆறியவுடன், நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.


தொ  க்கு மாங்காயை தோல் சீவி, பொடிப் பொடியாக நறுக்கவும். பீலர் உபயோகித்தும் சீவலாம். இலுப்ப சட்டியில் 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி,  எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் போட்டு, பெருங்காயம் பொரிந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்த உடன், சீவின மாங்காயை போட்டு கிளறவும். 

ஒ   ரு நிமிடம் மூடி வைத்து விட்டு, பிறகு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு மூன்றையும் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து விடவும். மூன்று நிமிடம் கழித்து, மூடியை திறந்து, நன்கு கிளற வேண்டும். 









வெ   ந்த மாங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும். அவ்வாறு எண்ணெய் பிரியும் வரை கிளற வேண்டும். பின், பொடித்த வெந்தயத்தை தூவி, நன்கு கிளறி, இறக்க வேண்டும்.

சா  தத்துடன் சேர்த்து, தொக்கு சாதமாக சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு அவசர side dish ஆக உபயோகிக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட best choice மாங்காய் தொக்கு.

Saturday 22 June 2013

என்று குறையும் இந்த வெப்பத்தின் தாக்கம்?


கோடை காலம் முடியாதா என்று வெப்ப பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த சில தினங்களாக சென்னையில் வெய்யிலின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் ஒரு சூடான தகவல் தருகிறேன். மன்னிக்கவும்.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கில்(Northern Hemisphere) உள்ளன. இந்த பகுதிகள் பூமியின் சுழற்சியில், சூரியனுக்கு மிக அருகில் வரும் நாள் ஜூன் 21. நேற்று. இந்த நிகழ்வு Summer Solstice என்று அழைக்க படுகிறது. வட மொழியில் உத்தராயணம். சூரியன் தனது சுற்று பாதையில் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கில் அதிக தொலைவில் வரும் நாள். பூமத்திய ரேகையின் வடக்கு திசையில் இருக்கும் நாடுகள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நாள். பகல் நேரத்தின் கால அளவு அதிகம்.

பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள பகுதிகளுக்கு நேற்று தான் கோடை காலத்தின் துவக்கம் என்கிறார்கள். (பள்ளிகள் திறந்து விட்டதால் கோடை முடிந்து விட்டது என்றல்லவா  நினைத்தோம்!).

சென்னையில் பகல் நேரம் அதிக அளவு இருந்தது கடந்த (ஜூன் 20) வியாழன் அன்று. இனி டிசம்பர் 21 வரை பகல் நேர அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும்.

ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட Southern Hemisphere ல் உள்ள நாடுகளுக்கு, நேற்று தான் குளிர் கால துவக்கம். நமக்கு தான் கோடை காலம் கண்ணை கட்டுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கோடை துவக்கத்தை கொண்டாடுகிறார்கள். உறையும் குளிரில் வீட்டில் அடைந்து கிடந்தவர்களுக்கு வரப் பிரசாதம் கோடை. இனி வீட்டை விட்டு வெளியே வரலாம். "ஊர் சுற்று. கொண்டாடு" என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

நமக்கு எல்லா நாளும் ஒன்றுதான். வருடம் முழுதும் வெயில்தான். இருக்கிற மரங்களையும் வெட்டித் தள்ளுவோம். ஏ.சி. க்கு கரண்ட் பில் கட்டுவோம்.

Tuesday 18 June 2013

கம்பு லட்டு அல்லது கம்பு இனிப்பு உருண்டை

கம்பு லட்டு  



  கம்பு, திணை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி, நாட்டு சோளம் -இவை millets எனப் படும் சிறு தான்ய பயிர் வகைகள். கோதுமை மற்றும் தீட்டப் பட்ட அரிசியோடு ஒப்பிடுகையில், சிறுதான்யங்களில் இரும்பு, மக்னீசியம், நார்ச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம். சிறு தான்யங்களின் சர்க்கரை குறியீட்டு எண் ( Glycemic Index)   மிகவும் குறைவு. எனவே சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் வல்லமை  படைத்தவை. இவை வறண்ட பகுதிகளிலும் நல்ல விளைச்சல் தரக் கூடியவை. எனவேதான், ஒருகாலத்தில் நமது கிராம மக்களின் ஆஸ்தான உணவாக, சிறுதான்யங்கள் இருந்தன. 



  அத்தகைய உணவு வகைகளில் ஒன்றுதான், கம்பு லட்டு. இது பற்றி அறிய வேண்டும் என்றால் கால சக்கரத்தை சற்றே பின்னோக்கி சுழல விட வேண்டும்.


கம்பு தான்யம் --200  கிராம்  எடுத்துக் கொள்ளவும் 

  இப்போது நாம் இருப்பது 1960 களில். இடம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சுந்தன் வயல் கிராமம். நிரம்பி வழியும் கண்மாய் காத்து நம் உடலை ஊடுருவுகிறது. மேய்ந்து களைத்த மாடுகளும், இறை தேடும் கோழிகளும் துணை வர, மெல்ல நடக்கிறோம். இதோ...நாட்டு ஓடு வேயப் பட்ட சதுரக் கட்டு வீடு தெரிகிறது. உள்ளே செல்கிறோம். விஸ்தாரமான திண்ணைகளை தாண்டி சென்றால், பெரிய ஹால் தெரிகிறது. அதன் நடுவில் சதுர வடிவில் ஒரு திறந்த வெளி முற்றம். தொட்டிக் கட்டு வீடு. வேறு அறைகளே கண்ணில் படவில்லை. சமையல் கூட ஹாலின் ஓரத்தில் தான் போல. விறகு அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.  ஏதோ பலகாரம் செய்து கொண்டிருக்கிறாள் ஒரு பெண். 

கம்பு வறுத்தது  

  அருகில் கம்பு தான்யம். அதை தண்ணீரில் கொட்டி, உமி நீங்க பல முறை அலசுகிறாள். நன்கு அலசிய தான்யத்தை ஒரு தட்டில் கொட்டி ஈரம் வடிய விட்டு, வேறு வேலை பார்க்கிறாள். கொஞ்ச நேரம் ஆகிறது. சற்றே உலர்ந்த தான்யத்தை வாணலியில் கொட்டி, அடுப்பை தணித்து, கை விடாது வறுக்கிறாள். சில நிமிடங்கள்....ஆஹா ...அற்புத வாசனை. லேசாக பசியை கிளருகிறது. இதோ...கம்பு சிவக்க துவங்குகிறது. அட.. சோளம் போல பொரிகிறதே! அவசரமாக அடுப்பில் இருந்து வாணலியை இறக்குகிறாள் அந்த பெண். சற்று தாமதித்தாலும் கருகி விடும். 
சுக்கு --சிறிதளவு 



ஏலக்காய்--5 
வறுத்து, அரைத்த  கம்பு மாவு --
அரைத்த பிறகு  200  கிராம்  கம்பு,  175 கிராம்  மாவு கொடுக்கும் 
  வாசனை  மூக்கை துளைக்கிறது. இது  போன்ற வாசனை தான் நமது ஜீரண உறுப்புகளை தூண்டி, நம்மை சாப்பாட்டிற்கு தயார் செய்யும். சூடான கம்பை மீண்டும் ஒரு தட்டில் கொட்டி ஆர்வாட விடுகிறாள். வறுத்த கம்பின் சூடு ஆறும் வேளையில்,  திருகை ( மாவு அரைக்க கிராமப் பகுதிகளில் பயன் படுத்தப் பட்ட கை அரவை எந்திரம்-manual grinding machine) சுத்தப் படுத்தப் படுகிறது. இதோ, சூடு ஆறிய கம்புடன் சிறிது ஏலக்காயும், சுக்கும் சேர்த்து,  திருகையில் கொட்டி திரிக்கப் படுகிறது. (திரித்தல்-அரைத்தல்). 

வெல்லம்--200 கிராம் 


  மண்டை  வெல்லம் பொடிக்கப் படுகிறது. அரைத்த மாவுடன், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு பிசைகிறாள் அந்த பெண். வெல்லம் நன்றாக மாவுடன் கலக்கிறது. இப்போது மாவை மூடி வைத்து விட்டு வேறு வேலை பார்க்க போய் விடுகிறாள்.



வெல்லம் சேர்த்த கம்பு மாவு 

  இருபது நிமிடங்கள் பொறுக்க வேண்டும். முடியவில்லை. வாசனை வயிற்றை கிள்ளுகிறது. பொறுத்து தான் ஆக வேண்டும். வெல்லம் நீர் விட்டு, மாவுடன் கலக்க சற்று நேரம் தேவை. 
நெய்  --விருப்பத்திற்கேற்ப 

 இதோ...ஆயிற்று இருபது நிமிடங்கள். பசு நெய் கொஞ்சம் விட்டு, மாவை நன்கு கைகளால் உருட்டி, உருண்டைகளாக பிடிக்கிறாள். கம்பு இனிப்பு லட்டு ரெடி. ஒரு கட்டு கட்ட வேண்டியதுதான் பாக்கி. 

கம்பு லட்டு 



         கம்பு        தான்யத்தில் 9-13% புரொட்டின் சத்து உள்ளது.

    தான்ய    வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான்.

      கம்பு   தான்யத்தில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம். நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். 

    நார்ச் சத்து, காப்பர், விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம்  மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். 

  கொழுப்பை  கரைக்கக் கூடியது கம்பு. கம்பில் unsaturated fat அதிகம் உள்ளது.  நமது உடலில் நல்ல கொழுப்பை (H.D.L.) அதிகரிக்க  unsaturated fat அவசியம்.




                          ரெசிபி  நன்றி  திரு. கண்ணன்,   அச்சுந்தன்வயல்.                                


க லோ ரி  க   க்  கீ  டு         

மேலே குறிப்பிட்டுள்ள அளவுகள் படி கம்பு தான்ய லட்டு செய்து, மூன்று சம பங்குகளாக பிரித்து சாப்பிட்டால், ஒருவருக்கான கலோரி கணக்கீடு --  1  2    K.cal.



ஒரு நாளில் உட்கொள்ள  வேண்டிய  கலோரி அளவு 
                                                                    
அதிகம் வேலை செய்யாதவருக்கு--ஆண்--      2320 Kcal/day
                                                                              பெண்--    1900 Kcal/day                                                                      
சாதாரண வேலை  செய்வோருக்கு-ஆண்--     2730 Kcal/day
                                                                              பெண்--   2230 Kcal/day                                                                       
அதிக வேலை செய்வோருக்கு  -------ஆண்--    3490 Kcal/day
                                                                             பெண்--   2850 Kcal/day 

ஆண்களின் எடை 60 கிலோ  எனவும், பெண்களின் எடை 55 கிலோ எனவும்  எடுத்துக் கொள்ளப்  பட்டிருக்கிறது.

 ச ர் க் க ரை  கு றி யீ ட் டு  எ ண்   Glycemic Index)  

 கம்பு தான்யத்தின் சர்க்கரை குறியீட்டு எண்--60.

தீட்டப் படாத கோதுமை (whole wheat ) யின்  சர்க்கரை குறியீட்டு எண்--65.

தீட்டப் பட்ட  புழுங்கல் அரிசியின் சர்க்கரை குறியீட்டு எண்--73

அரிசி  கஞ்சியின்   சர்க்கரை குறியீட்டு எண்--78

சிறு தான்ய  கஞ்சியின்   சர்க்கரை குறியீட்டு எண்--67

ஒரே அளவு கலோரி சக்தி  கொடுக்கும்  இரண்டு  உணவுப் பொருள்களில், ஒன்றின்  நார்ச்சத்து அதிகமாக இருந்தால், அந்த உணவு பொருள்  மற்றதை விட  உடல் நலத்திற்கு நல்லது. சிறுதான்யங்களில்  நார்ச்சத்து  அதிகம் என்பதை  நினைவில் கொள்ளவும்.

Sources for data on Nutritional values:--F.A.O. (Food and Agriculture Organisation of the United Nations) and National Institute of Nutrition, Hyderabad (Dietary Guidelines for Indians )
and earth 360.



Sunday 16 June 2013

மாங்காய் இனிப்பு பச்சடி

கோடை ஸ்பெஷல்--மாங்காய் இனிப்பு பச்சடி


தேவையான பொருள்கள் 

கிளி மூக்கு மாங்காய் -தோட்டாபுரி,
பேங்கலூரா என்றும் அழைக்கப் படுகிறது
 


தோ  ல் சீவி, பொடியாக நறுக்கிய மாங்காய்-
400 கிராம் 


வெ   ல்லம்- 375 கிராம்.




க        டுகு, உளுத்தம் பருப்பு-தாளிக்க.



செய்முறை 


மா  ங்காயை தோல் சீவி, பொடிப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய மாங்காயை அது மூழ்கும்
அளவிற்கு நீர் விட்டு, வேக வைக்கவும். மாங்காய் கூழ் ஆவதற்கு முந்தைய நிலையில் வேக வைப்பதை நிறுத்தவும். வேக வைத்த மாங்காயுடன் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.   கைவிடாமல் கிளறவும்.  வெல்லம் கரைந்து, சற்றே கெட்டியாகி, பச்சடி பதத்திற்கு வரும். இப்போது, தாளித்துக் கொட்டி அடுப்பிலிருந்து இறக்கவும். 

ப    ச்சடி பதம் என்பது, பாகு போல் இறுகாமலும், நீர் போல் ஓடாமலும் இருக்கும் நிலை.  சூடு சற்றே ஆறியவுடன் பரிமாறலாம். குறிப்பிட்டுள்ள அளவு மூன்று பேருக்கானது.

கி    ளிமூக்கு மாங்காய் நன்றாக இருக்கும். Organic மாங்காயாக பார்த்து வாங்கவும். Organic
மண்டை வெல்லம் உபயோகப் படுத்தவும்.

வெ    ல்லத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெல்லம் நல்லது. நரம்பு மண்டலத்திற்கு வலு தந்து, தசை இறுக்கத்தை குறைக்கக் கூடியது வெல்லம். பலமான விருந்திற்கு பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது, சாப்பிட்ட உணவை செரிக்க வைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்தும் வெல்லத்தில் அதிகம். 
இரும்பு சத்து +நார் சத்து +கால்சியம்
=சுவையோ சுவை
 


இ     ரும்பு சத்து உடம்பில் சேர விட்டமின் 'சி' அவசியம். அதனால் தான் இரும்பு சத்து  அதிகமுள்ள வெல்லத்துடன், விட்டமின் 'சி' அதிகமுள்ள மாங்காய் சேர்த்து பச்சடி செய்தனர் நம் முன்னோர். 

வெ          ல்லத்தில் நார்ச்சத்து குறைவு. ஆனால் மாங்காயில் நார்ச்சத்து அதிகம். இரண்டையும் சேர்க்கும் போது, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு பண்டமாக மாறி விடுகிறது.

நா     ம் சாப்பிடும் கால்சியம், நம் உடம்பில் சேர விட்டமின் 'D' தேவை. சூரிய ஒளி நம் மேல் பட்டால் தான் விட்டமின் 'D' உற்பத்தியாகும். பொதுவாக மாங்காய் விளைச்சல் கோடையில் தான். அப்போது கால்சியம் அதிகமுள்ள வெல்லம் சேர்த்து மாங்காய் பச்சடி செய்கிறோம். இதை சாப்பிட்டால், அதிக சூரிய ஒளியில் நம் உடம்பில் சேர்ந்திருக்கும் விட்டமின் 'D', மாங்காய் பச்சடியில்  உள்ள கால்சியம் உடலில் சேர உதவும். 

மா      ங்காய் இனிப்பு பச்சடி நாவிற்கும் சுவை. உடல் நலத்திற்கும் துணை.


க லோ ரி   க க் கீ டு        

மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில், மூன்று பேருக்கான பச்சடி செய்து, மூன்று சம பாகங்களாக பிரித்து, மூன்று பேர் சாப்பிட்டால், ஒருவர் சாப்பிடும் அளவில் மொத்தம்   லோரிகள் உள்ளன.

அன்புள்ள அப்பா.........


16-06-2013-

Father's day 2013

      ன்று தந்தையர் தினம். அப்பா என்று அழைத்தாலும் சரி. இல்லை daddy, dad, பிதா, தந்தை, நைனா என்று எப்படி அழைத்தாலும் அந்த சொல்லில் அன்பு ததும்பும். ஆயிரக் கணக்கான நினைவுகள் மேலெழும்பும். அந்த சொல்லின் பலம் அப்படி. நதியாவின் தந்தையாக வந்த சிவாஜி (அன்புள்ள அப்பா), சூர்யாவின் தந்தையாக வந்த சூர்யா (வாரணம் ஆயிரம்),  அப்பாவின் அப்பாவாக வந்த அபிஷேக் பச்சன் (பா), திரிஷாவின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் (அபியும் நானும்) --இவர்களை பார்க்கும் போது நம் அப்பாவின் நினைவும் வரும். மூன்று மணி நேரம். அப்புறம் மறந்து விடுவோம். வருடத்திற்கு ஒரு முறையாவது, ஒரு நாள் முழுவதும் அப்பாவை நினைக்க வைக்க வேண்டும் என்றுதான்  தந்தையர் தினம் கொண்டாடுகிறார்கள்.

       ந்தியாவை பொறுத்த வரை, புது வரவு தான் தந்தையர் தினம். இது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம் என்றுதான் நினைத்திருந்தேன்.இந்த தினத்தை பற்றிய விவரங்களை அறியும் வரை. மேற்கு வர்ஜீனியாவில், பேர்மாண்டில், 1908 ஜூலை 5ல் தந்தையர் தினம் முதலில் கொண்டாடப் பட்டது. அன்னையர் தினத்திற்கு இணையாக ஒரு தினம் வேண்டும் என்ற நினைப்பில் உருவாக்கப் பட்டது தந்தையர் தினம்.  361 பேர் இறந்த ஒரு விபத்தில் தந்தையை இழந்த ஒரு பெண்ணின் முயற்சியில் உருவானது இந்த தினம்.

   தற்கு அடுத்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 1910ல் தந்தையின் தனி முயற்சியில்  வளர்க்கப் பட்ட (single parent), ஆறு குழந்தைகளில் ஒருவரான ஒரு பெண்ணின் முயற்சியால் இந்த தினம் கொண்டாடப் பட்டது. 1972ல் அமெரிக்காவில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப் பட்டது.

   ப்போது வணிக உத்தியாக பிரபலப் படுத்தப் பட்டால் கூட, நமக்கு தேவையான தினம் தான் இது. உங்கள் அப்பா முப்பது வயது இளைஞனாக இருந்தாலும் சரி, இல்லை, 80 வயதைக் கடந்தவராக இருந்தாலும் சரி, ஒரு அன்பு முத்தத்தை இன்று அவருக்குப் பரிசாக கொடுங்கள்.

  ணிக உத்திக்கு ஆட்படுபவராக இருந்தால் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சென்னையில் சமையல் நிபுணர் அனுஷா உதவியுடன், நீங்களும், உங்கள் அன்பு அப்பாவும் இணைந்து உங்களுக்குப் பிடித்த அறுசுவை உணவை நீங்களே தயாரிக்கலாம். பார்க்க father's day cookout!

     வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் Onlineல் கேக், மலர்கள் மற்றும் இனிப்புகள் order கொடுக்கலாம்.  Love u  Dad  logo வுடன் t-shirt order கொடுக்கலாம். அன்பு பரிசு தந்தையை சென்று சேர்ந்து விடும். கொஞ்சம் adventurous type ஆக இருந்தால் இதை முயற்சிக்கலாம்.

      நேரம் இருந்தால் அப்பாவுடன் இன்றைய நாள் முழுதும் செலவிடலாம். ஒரு நண்பனாக அளவலாவலாம். அவருக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கையால் சமைத்துக் கொடுக்கலாம்.

    ன் அப்பாவின் உணவு விருப்பு வெறுப்புகள் எனக்கு நன்கு தெரியும். புளி குறைவான சமையல் பிடிக்கும். அடை என்றால் உயிர். உணவு தான் என்றில்லை. என் அப்பாவின் மற்ற விருப்பு வெறுப்புகளும் எனக்கு தெரியும். உங்களில் எத்தனை பேரால் இப்படி சொல்ல முடியும்?

   டைசியாக ....... உங்கள் தந்தை முதியோர் இல்லத்தில் இருந்தால் இன்று ஒரு தினமாவது வீட்டிற்கு அழைத்து வரலாம்.

Saturday 8 June 2013

மாங்காய் சாதம்


தேவையான பொருள்கள்

உதிர் உதிராக வேக வைத்த சாதம் -உத்தேசமாக 750 கிராம்.
சுமார் 300 கிராம் எடையுள்ள மாங்காய் -1
நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி
மிளகாய் பொடி -25 கிராம். மஞ்சள் பொடி சிறிது.
தாளிக்க - கடுகு, கட்டி பெருங்காயம், உளுத்தம் பருப்பு,  கடலை பருப்பு, வற்றல் மிளகாய்-4
உப்பு-தேவையான அளவு.

செய்முறை


மாங்காயை தோல் நீக்கி, நன்கு பொடிப் பொடியாக சீவிக் கொள்ளவும். வாணலியில் தாளித பொருள்களை போட்டு, இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். தாளித்த பொருள்கள் மீது மாங்காய், மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி போட்டு நன்கு வதக்கவும். ஓரிரு நிமிடங்கள்மூடி  வேக வைத்துவிட்டு சாதத்தை நன்கு  உதிர்த்து சேர்க்கவும். சாதம் உடைபடாமல்  நன்கு கிளறவும்.



இ றக்கி வைத்து சற்றே சூடு ஆறியதும் வாழை இலையில் பரிமாறவு
ம். மேலே குறிப்பிட்டுள்ள அளவு மூன்று பேருக்கானது. வாழைக்காய் அல்லது நேந்திரம் சிப்ஸ் தொட்டுக் கொள்ளலாம்.

சீ ரக சம்பா அரிசி, மாங்காய் சாதத்திற்கு சுவையும், மணமும் சேர்க்கும். Organic மாங்காய் உபயோகிக்கவும். நல்ல புளிப்பு சுவையுள்ள மாங்காயாக பார்த்து வாங்கவும். விரலால் லேசான அழுத்தம் கொடுக்கும் போது, அழுந்தாமல், கெட்டியாக இருக்க வேண்டும்.

மு டிந்தால் மிளகாய் பொடியை fresh ஆக அரைத்துப் போடலாம்.


மாங்காய் - சில குறிப்புகள்


மாங்காய் முழு அளவு வளர்ச்சி அடைவதற்கு  முன் மரத்திலிருந்து பறிக்கப் படும் காய்கள் ஊறுகாய் மற்றும் தொக்கு செய்ய உபயோகப் படுகின்றன. இவை எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் பழுக்காது. இந்த வகை காய்கள் தான் இனிப்பு சுவை இல்லாமல், நல்ல புளிப்பாக இருக்கும். 

கிளி மூக்கு மாங்காய் தொக்கு மற்றும் மாங்காய் சாதம் செய்ய ஏற்றது. படத்தில் உள்ள மாங்காய் சேலத்திலிருந்து வரவழைக்கப் பட்டது.

ழத்தை விட, மாங்காயில் விட்டமின் 'சி' சத்து அதிகம். 35 ஆப்பிள் அல்லது 9 எலுமிச்சை பழத்தில் உள்ள விட்டமின் 'சி' சத்து 300 கிராம் மாங்காயில் உள்ளது. 

மா ங்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து உள்ளது. விட்டமின் 'பி' மற்றும் நம் உடலின் வளர்சிதை மாற்றங்களை தடுக்கும் anti-oxidants அதிகம் கொண்டது மாங்காய்.

ம்  ஜீரண உறுப்புகளுக்கு மாங்காய் மிகவும் நல்லது.  நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இரும்பு சத்து குறைபாட்டினை குறைக்கும் தன்மை உள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுவாக்கி, நரம்பு தளர்ச்சி, அதிகமான இதய துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை சரி செய்யக் கூடியது. நினைவு திறனையும் அதிகரிக்கும். 

மாங்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், Cholesterol அளவை குறைக்கும்.


ஒரு நாளைக்கு, ஒரு மாங்காய்க்கு மேல் சாப்பிடக் கூடாது. அதே போல், மாங்காய் சாப்பிட்டவுடன் குளிர்ந்த தண்ணீர் பருகக் கூடாது.

மா ங்காய் துண்டுகளை உப்பில் தோய்த்து சாப்பிடுவது, sun strokeலிருந்து நம்மை காக்கும்.










Friday 7 June 2013

ஆண்கள் ஜாக்கிரதை(?)

பத்திரிகை மற்றும் செய்திதாள்களில் நாம் படிக்கும் சில விஷயங்கள் மட்டும், மிக தீவிரமான பாதிப்பை நம்முள் ஏற்படுத்தி விடுகின்றன. சில வாரங்களுக்கு முன், ஒரு பிரபல தமிழ் வார இதழில் நான் படித்த சிறுகதை அந்த ரகம். ஒரு பெண்ணின் கணவன் இறந்து விடுகிறான். இறுதி சடங்குகள் முடிந்த  அன்று இரவு அந்த பெண்ணால் தூங்கவே முடியவில்லை. கணவன் தன் மீது கொண்டிருந்த அன்பு, தன்னை வெளி வேலை எதையும் செய்ய விடாமல் அனைத்தையும் கணவனே பார்த்துக் கொண்டது என கடந்த காலத்தில் மூழ்குகிறாள். கணவன் இல்லாமல் இனி தன்னால் எப்படி குடும்பத்தை நடத்திச் செல்ல இயலும்? என்று மருகுகிறாள்.

தூங்காத அந்த நடு நிசியில் அவள் மகன் அருகே வருகிறான். "அப்பாவுக்காக ஏன் துயரப் படுகிறாய்?" என்கிறான். "அப்பா நமக்காக எதையும் பெரிதாக செய்து விடவில்லை. எல்லா வேலையும் தானே செய்கிறேன் என்ற பெயரில் அவர் உன்னை சுயமாக செயல் படவோ, சிந்திக்கவோ அனுமதிக்கவில்லை. இத்தனை நாள் அவருக்காக வாழ்ந்த நீ, இனி உனக்காக வாழ வேண்டும். அப்பாவின் இறப்பு உனக்கு தந்திருப்பது கிடைத்தற்கரிய சுதந்திரம்" என்றும் சொல்கிறான். தாயும் அவன் சொல்வது சரிதான் என உணர்கிறாள்.

இந்த கதையை படித்த போது, கதாசிரியரின் அணுகுமுறையை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒருவன் இறந்த அன்று இரவே இப்படி விவாதிப்பார்களா என நினைத்தேன்.

02-06-2013 தினகரன் வசந்தம் இணைப்பில், மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி, (கணவர் மறைவிற்கு பிறகுதான்) "......என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது" என்று சொல்லியிருக்கிறார். தன் கணவர் குறித்து இன்னும் பல விஷயங்களை சொல்லியிருக்கும் அவர், ".....அந்த கால கட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா ........குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்......" என்கிறார்.

ஒரு தினசரியின் இணைப்பில் வந்ததாலோ என்னவோ மிகவும் பர பரப்பாகவில்லை இந்த மேட்டர். 

மாறி விட்ட இந்த உலகம், பழைய விஷயங்களை கூட புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறதா? இல்லை மனைவிக்கு நிஜமான சுதந்திரம் தராத ஆண்களின் செயல் தான், இறந்த மனிதர் மீது கூட  குற்றம் சொல்ல வைக்கிறதா? கணவர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் நல்லது. Otherwise, wives won't let their husbands rest (in graves) in peace.

Wednesday 5 June 2013

பில்டர் காபி


நான்  ஒரு காபி உபாசஹன். என் முன்னோரும் அப்படித்தான். பின்னே.....!தஞ்சை மண்ணில் பிறந்து விட்டு காபி வெறியனாக இல்லாவிட்டால் எப்படி? காலையில் விழிப்பதே காபி முகத்தில் தான். அப்புறம்... வீட்டிற்கு நண்பரோ உறவினரோ வந்தால் காபி உபசரிப்பு. கூடவே நமக்கும் ஒரு கப். வேலை பளு அதிகமா?குடி காபியை. வேலையே இல்லாமல் போர் அடிக்கிறதா? அதற்கும் காபியே மருந்து.  You just need an excuse to have a Cuppa!

கத்தில், பல நூறு வகை காபி தயாரிக்கப் பட்டாலும் நம்ம ஊரின் filter coffeeக்கு முன்னால் நிற்க கூட எந்த காபிக்கும் தைரியம் கிடையாது. பிராமணர்களின் வீடுகளில், காபி தயாரிப்பு என்பது தினசரி ஒரு தவம்  போல் செய்யப் படும். இதற்கென எழுதப் படாத விதிகள் உண்டு. இதை முழுக்க அறிய வேண்டும் என்றால், காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கி போக வேண்டும். போவோமா?
                                                                                                                   
பி  ரிக்கப் படாத தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர் அது. மதியம் மணி மூன்று இருக்கும். அந்த ஊரின் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே செல்கிறோம். பித்தளை  டப்பாவில் உள்ள பச்சை காபி கொட்டையை எடுத்து, விறகு அடுப்பின் மேல் உள்ள மண் வாணாயில் போட்டு வறுக்கிறாள் அந்த வீட்டின் தலைவி. இப்போது என்ன கேட்டாலும் பதில் கிடைக்காது. பதம் தப்பாமல் வறுக்க வேண்டுமே? காபி கொட்டை பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். ஆனால் கருகி விடக் கூடாது. கொட்டையிலிருந்து எண்ணெய் லேசாக கசிய தொடங்கும் நேரத்தில் தான் கவனம் தேவை. அதன் பின் எப்போது வறுப்பதை நிறுத்த வேண்டும் என்பது நம் ருசிக்கேற்ப அமையும். பின் வறுத்த கொட்டைகளை மூங்கில் முறத்தில் போட்டு சற்று காற்றாட ஆற விடுகிறார்.  காபி மணம் மூக்கை துளைக்கிறது. வறுத்த காபி கொட்டையின் வாசனையே நமக்கு புத்துணர்ச்சி தருகிறது. அடடா... காபி வாசனையில் மெய் மறந்ததால் அந்த பெண் எழுந்து சென்றதை கவனிக்கவில்லை. 
காபி பில்டர் கீழ் பகுதி   

நா ம் பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டின் கொல்லை புறத்தில் ஒரு மாட்டுக் கொட்டகை தெரிகிறது. உள்ளே இரண்டு காராம் பசுக்கள் வாயை அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. தினசரி பால் தேவைக்காக இந்த மாடுகள் வளர்க்கப் படுகின்றன. ஒரு மாட்டின் பால் வற்றி விட்டால் என்ன செய்வது?. அதற்காக தான் இரண்டு மாடுகள். இதோ அந்த  பெண் கையில் ஒரு லோட்டாவுடன் வருகிறாள். காபி கொட்டை ஆறுவதற்குள் பால் கறக்கப் படுகிறது. இளம் சூடான புத்தம் புதிய பால். பசும் பால் தான் காபிக்கு ஏற்றது. அதுவும் அப்போது கறக்கப் பட்ட பால் தான் வேண்டும்.
                                                                                                                 
காபி பில்டர் மேல் பகுதி      
       
பா  ல் உள்ளே செல்கிறது. இப்போது காபி கொட்டை ஆறி விட்டது. கையால் சுற்றி காபி அறைக்கும் மெஷினில் போட்டு அறைக்கிறாள். ரொம்ப நைஸ் ஆகவும் அறைக்கக் கூடாது. காபியில் கசப்பு கூடி விடும். அதிக கொர கொரப்பாகவும் அறைக்க்க் கூடாது. லேசான கொர கொரப்பு. அது தான் filter coffeeக்கு சரியான பக்குவம்.
காபி பொடி                    

இ   ப்போது காபி பில்டரின் மேல் பகுதியில் பொடி போடப் படுகிறது. நாம் உன்னிப்பாக கவனிக்கிறோம். பில்டரில் போட்ட காபி பொடியில் விரல்களால்  மெதுவாக அழுத்தம் கொடுக்கிறார். இல்லை என்றால் பொடியின் மேல் கொட்டும் வெந்நீர் கொட கொட வென்று கீழே இறங்கி  விடும். ரொம்ப அழுத்தி விட்டால் வெந்நீர் கீழே இறங்கவே இறங்காது. பழகிய விரல்களுக்கு பக்குவம் தெரியும். 40 கிராம் காபி பொடிக்கு 60 m.l. தண்ணீர் தேவைப் படும். இரண்டு கப் காபி (120 m.l. each) கிடைக்கும். ஒரு கப் காபிக்கு 30 m.l. டிகாக்க்ஷன், 90 m.l. பால் தேவைப் படும்.
                                                                                                                         
காபி பில்டர்          
பி   ல்டரில் ஊற்ற வெந்நீர் ரெடியாகிறது. அட சுடு தண்ணீர் தானே என்று அலட்சியம் வேண்டாம். 92 டிகிரி தான் காபிக்கான தண்ணீரின் சரியான கொதி நிலை. தண்ணி தான் கொதித்து விட்டதே என்று அவசரப் படக் கூடாது. அடுப்பை அணைத்து, தல புல வென்று கொதிக்கும் தண்ணீரின் சத்தம் சற்றே அடங்கியவுடன், தண்ணீரை காபி பில்டரின் மேல் பாகத்தில் மெதுவாக விட  வேண்டும்.

க   றந்த பாலை அடுப்பில் ஏற்றுகிறாள் அந்த பெண். பாலை காய்ச்சி,  டபரா டம்ளர்களை ரெடி செய்து முடிக்கிற போது அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கிறது. கொட்டக் கூழாக டிகாக்க்ஷன் இறங்கி இருக்கிறது.

இ   னி என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் விதிகள் உண்டு. டம்ளரில் முதலில் சக்கரையை போட வேண்டும். எவ்வளவு சக்கரை என்பது உங்கள் விருப்பம். ஆனால் ஒன்று. சக்கரை கம்மியாக இருப்பது தான் காபிக்கு நாம் செய்யும் மரியாதை. அப்போது தான் காபியின் அந்த ரம்மியமான மென் கசப்பை அனுபவிக்க முடியும். சக்கரையின் மீது டிகாக்க்ஷனை ஊற்ற வேண்டும். டிகாக்க்ஷன் அளவும் உங்கள் விருப்பம் தான். ஆனால், டிகாக்க்ஷன்  சற்று தூக்கலாக இருப்பது தான் நல்ல காபியின் இலக்கணம். இப்போது பால் சேர்க்க வேண்டும். நாம் விரும்பிய நிறம் வந்தவுடன் பால் சேர்ப்பதை நிறுத்தி விடலாம். 

இ   தோ வெள்ளி டபரா டம்ளரில் காபி திண்ணையில் இருக்கும் குடும்ப தலைவருக்கு கொடுக்கப் படுகிறது. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். வெள்ளி அல்லது பித்தளை  பாத்திரம் தான் காபிக்கு உகந்தது. அதிக நேரம் சூடு தாங்கும். சுவையில் கூட சிறிது வித்தியாசம் தெரியும். அவர் காபி குடிக்கும் அழகை சற்று ரசியுங்களேன். லேசா ஒன்றிரண்டு முறை ஆற்றி விட்டு, தோளில் போட்டிருக்கும் துண்டால் டம்ளரின்  கீழே பிடித்துக் கொள்கிறார். கை பொறுக்காத சூட்டை வாய் பொறுக்கிறது. அமிர்த திரவம் சொட்டு சொட்டாக உள்ளே செல்கிறது. சூட்டோடு சாப்பிடும் காபிக்கு தான் சுவை அதிகம். காபியை ஆற வைப்பது காபிக்கு நாம் செய்யும் அவமரியாதை.

சி   லர் ஒரு டம்ளர் காபியோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலருக்கு ஒரு சொம்பு காபி குடித்தாலும் போதாது. மயக்கும் மோகினி போன்றது காபி.


காபி- சில குறிப்புகள் 

காபி தோட்டம்                                         

ஒ  ன்பதாம் நூற்றாண்டில், எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்த ஒருவனால், முதன் முதலில் சுவைக்கப்பட்ட- அராபியர்களால் முறையாக பயிரிடப் பட்ட-அராபியாவில் இருந்து இந்தியா வந்த-காபி, நம் கலாச்சார அடையாளம் ஆகி விட்டது.

கா   பி பற்றி பேசும் போது, நாம் மரியாதையுடன் குறிப்பிட வேண்டிய ஒருவர்-கும்பகோணம் பஞ்சாபகேச ஐயர். கும்பகோணம் டிகிரி காபியின் பிதாமகன். தண்ணீர் கலக்காத கெட்டி பசும் பாலில் போடப்படும் காபி தான் கும்பகோணம் டிகிரி காபி. பாலில் தண்ணீர் அதிகம் கலந்துள்ளதா என்று அறிய பயன் படுவது Lactometer. தெர்மா மீட்டர் போல இருக்கும் அதை பாலில் போட்டால் மிதக்கும். எந்த டிகிரியில் மிதக்கிறது என்பதை வைத்து தான் பாலின் தண்ணீர் கலப்பு அளக்கப்படும். இதிலிருந்து தான் கும்பகோணம் காபிக்கு டிகிரி அடைமொழி ஆக்கப்பட்டது.

மு   ன் காலத்தில்,  தஞ்சாவூர் பகுதியில் நிறைய குடும்பங்களில், வெள்ளி காபி பில்டர் வைத்திருந்ததாக என் மாமனார் சொல்லி இருக்கிறார்.  

ந   மக்கு தான் அது கும்பகோணம் டிகிரி காபி. கும்பகோணத்தில் அது வெறும் காபி தான். கும்பகோணத்தில் நாள் முழுக்க தெரு தெருவாக அலைந்து திரிந்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்போது கும்பகோணத்தில் டிகிரி காபி கிடைப்பதில்லை.  தமிழகத்தின் பிற பகுதிகளில் இப் பெயர் வணிக உத்தியாக பயன் படுத்தப் படுகிறது.

இ    ன்னொரு விஷயம்... கும்பகோணம் டிகிரி காபியில் ௨௦ சதவீதம் சிக்கரி கலக்க வேண்டும் என்று சிலர் எழுதுகிறார்கள். அது தவறு. காபி என்றாலே ப்யூர் காபிதான். சிக்கரி கலந்தால் அது காபியே அல்ல.
காபி பூ                                                                       
                                              
கா    பி கொட்டையில் அராபிகா ஒசத்தி. அடுத்து...ரோபஸ்டா. ஒரே காபி செடியில் சில கொட்டைகள் மட்டும் அரிதாக உருண்டையாக இருக்கும். அதான் pea-berry. மற்றவை தட்டையாக இருக்கும். அதை PLANTATION 'A' என்கிறார்கள். Pea-berry 40 சதவீதமும்  PLANTATION 'A'  60 சதவீதமும் கலந்து பொடி வாங்குங்கள். நிறமும், மணமும், சுவையும் பிரமாதமாக இருக்கும். காபி கெட்டியாக இருக்கும். சிக்கரி கலக்க தேவையில்லை.
                                                                                                                        

பச்சை காபி காய்             
செ   ன்னை அருகில் கும்பகோணம் டிகிரி காபி வேண்டுமென்றால், சிலாவட்டம் செல்லுங்கள். சென்னை-திருச்சி ஹைவேஸில், tollgate தாண்டி பத்து கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று காபி கடைகள். Only Coffee என்ற பெயரில். சென்னையிலிருந்து செல்லும் போது இடது புறம் ஒன்றும்  (கடை Kerala Style architecture ல் இருக்கும்), வலது புறம் இரண்டு கடைகளும் இருக்கும். அவற்றில் ஒன்று City Union Bank ATMஐ ஓட்டினாற் போல் இருக்கும். கும்பகோணம் அருகில் உள்ள தேரெழுந்தூரைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் 2009லிருந்து இக்கடைகளை நடத்தி வருகிறார். காபி அருமையாக இருக்கும். பித்தளை டபரா டம்ளரில் தரப் படுகிறது. இப்போது ஏகப்பட்ட Only Coffee (அதே பெயரில்) முளைத்து விட்டன. ''தலப்பா கட்டி கதையாகி விட்டது'' என்று சிரிக்கிறார் ஸ்ரீவத்சன். தொடர்புக்கு....9994441776.
காபி பழம்                                         

கா   பியில் Single Estate Coffee ஒரு Premium Variety. White Coffee என்பது acidity குறைக்கப் பட்ட value added variety. ஆப்பிரிக்க நாடுகளில் விளையும் காபி உலக தரம் வாய்ந்தது. எனக்கு Tanzanian Coffee அவ்வப்போது கிடைத்து விடுகிறது. நன்றி எனது ஆருயிர் நண்பன் பேராசிரியர், முனைவர் வெங்கடகிரிஷ்ணனுக்கு. காபி பிரியர்களுக்கு பிடித்த இன்னொரு விஷயம், Coffee Memorabilia சேகரிப்பது. ஹங்கேரியிலிருந்து, மேலே குறிப்பிட்ட நண்பர்   வாங்கி வந்த Coffee Mug இன்னமும் என்னிடம் பத்திரமாக உள்ளது. இத்தனைக்கும் அவர் காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்.
காபி பழத்திலிருந்து காபி கொட்டை ..........

Coffee can make or break relationships. "நன்னா காபி போடுறா" என்று சொல்லி முடிவான சம்பந்தங்களும் உண்டு. "காபியா இது ?" என்று கேட்டு சம்பந்தி சண்டையில் முடிந்த சம்பவங்களும் உண்டு. அதனால் தான் போலும் "A lot can happen over a cup of coffee" என்று விளம்பரப் படுத்துகிறது  Cafe Coffee Day நிறுவனம்.
                                         
காபி கொட்டை-பச்சை          

த   ஞ்சை மாவட்டத்தில் ஒரு காலத்தில் சிறிய சிறிய காபி கிளப்புகள் பிரசித்தம். டிகிரி காபி குடித்து விட்டு அரட்டை அடிக்கும் ஒரு கூட்டம் எப்போதும் அங்கே. சிறு வயதில் என் அப்பாவுடன் அடிக்கடி சென்றிருக்கிறேன். இன்று சென்னையில் புதிய நாமகரணத்துடன்  புத்துயிர் பெற்றிருக்கின்றன காபி கிளப்புகள். Madras Coffee House ஓர் உதாரணம். IT Corridor முழுக்க கிளைகள் உண்டு. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகரில் இயங்கி வந்த Coffee Houses மிகவும் புகழ் வாய்ந்தவை. இங்கிலாந்தின்  மிகச் சிறந்த கவிஞர்கள் இங்கு தான்  காபி  கச்சேரியையும் கவிதை கச்சேரியையும் நிகழ்த்தினார்கள்.

இ   ன்றும் உலகம் முழுக்க காபி ரசிகர்கள் இருக்கிறார்கள். வீட்டு தோட்டத்தில் மண் பானையில் காபி செடி வளர்க்கும் மனிதர்களை தரிசிக்க வேண்டும் என்றால் இங்கே க்ளிக் செய்யவும்  இந்த இடம் கூட உங்களுக்கானது தான்.

காபி ரசிகர்கள் பட்டியலில் பல பிரபலங்களும் உண்டு. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் காபி ரசனை அலாதியானது. சமீபத்தில் நான் மிகவும் சிலாகித்த TWEET ஒன்று.... பாடகி சின்மயியின் Comments on Coffee.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...