Wednesday 25 April 2018

மன்னார் & கோ

நம்மள கடனாளி ஆக்கி பாக்கறதுல இவிங்களுக்கு என்ன ஒரு சந்தோசம்?
இன்னிக்கி ஆபிஸ்ல ரொம்ப பிஸியா இருந்த நேரம் பாத்து ஒரு போன் வருது. ஏதோ முக்கியமான கால் போல நெனச்சு, பேசினா......
எதிர்முனையில ஒரு பெண் குரல்.
எடுத்த எடுப்புல இப்பிடி கேக்குது:
"சார் ஒங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா?"
"வேல நேரத்துல இப்பிடி கடுப்ப கெளப்புராங்களே? என்ன செய்யலாம்னு யோசிச்சேன்"
நம்ம வேல கெட்டாலும் இவிங்கள கலாய்ச்சே தீரரதுன்னு முடிவு பண்ணினேன்.
"கடன்தானே குடுத்தா வாங்கிக்கிறேன்"
"சார் உங்களுக்கு எவ்வளவு லோன் வேணும்?"
"15 கோடி போதும்"
எதிர்முனையில் அதிர்ச்சி.
திரும்பவும் சொன்னேன்.
"15 கோடி கடன் வேணும்"
'சார் உங்க சம்பளம் எவ்வளவு?"
"50 லட்சம்"
மீண்டும் எதிர்முனையில் அதிர்ச்சி.
"சார்...."
"நெசமாவே 50 லட்சம் சம்பளம் வாங்குறேன். எவ்வளவு கடன் தருவீங்க? சீக்கிரம் சொல்லுங்க"
"எங்க வேல பாக்குறீங்க"
"மன்னார்&கோ"
அந்த பெண்ணுக்கு மன்னார்&கோ பத்தி தெரியல. பெரிய கடன் பார்ட்டி சிக்கிடிச்சின்னு மேனேஜரே லைன்ல வந்துட்டாரு.
மீண்டும் அதே கேள்விகள். அதே பதில்கள்.
"பத்து பேங்க்ல தனித்தனியா கடன் அரேன்ஜ் பண்ணி தர்றேன். எப்ப சார் உங்கள மீட் பண்ணலாம்?"
நான் கேட்டேன்.
"உங்களுக்கு மன்னார்&கோ தெரியுமா?"
"தெரியும் சார்"
"அந்த கம்பெனி எங்க இருக்கு?"-இது நான்.
"சாரி சார். எனக்கு சரியா தெரியல. இருந்தாலும் அட்ரஸ் குடுத்தா கரெக்டா வந்துருவேன்"
"சரி. அட்ரஸ் அனுப்புறேன். வாங்க. அதுக்கு முன்னால ஒரு தரம் மன்னார்&கோ பத்தி கூகுள் பண்ணிட்டு வாங்க."
"சரிங்க சார்"
லைன் கட்டானது.
கூகுள்ல பாத்திருப்பார்னு நினைக்கிறேன்.
இந்த மார்க்கெட்டிங் கால்களை தவிர்க்க ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கு.

Sunday 22 April 2018

மைசூரு மசால் தோசை


மைசூரு மசால் தோசை 
    
        மசால் தோசை. அல்லது மசாலா தோசை. கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியின் சிறப்பு உணவு. பொன்னிற தோசைக்குள்ளே உருளை கிழங்கு மசாலா வைத்து மடித்து தரும் அழகே அழகு. கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாக இருக்கும் மசாலாவின் அளவு. ஒரே ஒரு தோசை போதும். பசி அடங்கி விடும். கூடவே சட்னியும், சாம்பாரும் தருவார்கள். ஆனால் உருளை கிழங்கு மசால் இருக்கும் போது, சட்னிக்கும், சாம்பாருக்கும் மதிப்பேது?

   அதே தோசைக்குள்ளே, வறுத்து எடுத்த வர மிளகாய், கடலை பருப்பு, கரைத்த புளி, உப்பு, வதக்கிய வெங்காயம், பூண்டு (தேவை பட்டால்) இவற்றை சிறிது தண்ணீர் விட்டு, நைசாக அரைத்தால்,  மைசூரு மசால் தோசைக்கான வர மிளகாய் பேஸ்ட் ரெடி. தோசை ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும், மறு புறம் இந்த வர மிளகாய் பேஸ்ட் தடவி, உருளை மசாலா  வைத்தால் அது மைசூரு மசாலா தோசை ஆகி விடும்.

        தோசையை விண்டு வாயில் வைத்தால், 'சுள்' ளென்று காரம் தெரியும். மசாலா சேர்த்து சாப்பிட்டால் ...ஆஹா..அது ஒரு தனிச்சுவை. நல்ல தரமான உருளை கிழங்கு சுவையை கூட்டும். மசாலா ரொம்ப கெட்டியாக இருக்க கூடாது. அதே சமயம் தளர இருந்தாலும் ஆகாது. இரண்டுக்கும் இடைப்பட்ட பக்குவம் தான் சரி. உருளை கிழங்கு பெரிய துண்டாக இருக்க கூடாது. அதே நேரம் மாவு போல் குழைந்து விடவும் கூடாது.

         தோசை மாவில் சிறிது சர்க்கரை  சேர்த்து  அரைத்தால் , சுட்டெடுக்கும் போது தோசை  நல்ல பொன்னிறமாக வரும்.

         மெல்லிய தோசையாக சுட வேண்டும். அதான் மசால் தோசைக்கு சரி.

      தோசை ரொம்ப முறுகக் கூடாது. மசால் சேர்த்து சாப்பிடும் முன்னே உடைந்து விடும்.

    இப்படி நாம் பார்த்து பார்த்து பக்குவமாக செய்தாலும், தோசை சுடுவதில், உடுப்பிகாரர்களின் கைபக்குவமே தனி. அது நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

              சென்னையில் சரவண பவன், சந்கீதாக்களில் தோசை ரொம்பவே சுமார். மசால் தோசை கேட்கவே வேண்டாம். 

                 ஒரு நாள் பேச்சு வாக்கில் நண்பர் ஒருவர் சொன்னார்: 

"சென்னையிலேயே  ஆகச் சிறந்த மசால் தோசை கிடைக்கும் இடம் சொல்லவா?"

"ஆஹா....அற்புதம். இதை....இதைத் தானே எதிர்பார்த்தேன்? உடனே சொல்லும் ஐயா " என்றேன்.

      ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள  உட்லண்ட்ஸ்  (New Woodlands) ஹோட்டல்தான் நண்பர் சொன்ன இடம்.

                 சென்றேன். உண்மைதான். அருமையான சுவை. மசால் தோசை, மைசூர் மசால் தோசை இரண்டுமே கிடைக்கிறது. மைசூர் மசால் தோசை சுவைத்து பார்த்தேன். 

                  தோசையின் சுவை, வர மிளகாயின் காரம், மசாலாவின்  மணம்-மூன்றும் இணைந்து  கைதேர்ந்த இசை அமைப்பாளரின் tune போல, ஒருங்கிணைந்த சுவை நாக்கில் தெறிக்கிறது.

                தேங்காய் சட்னி, சின்ன வெங்காய சாம்பார் (ஒரு கப் சாம்பாருக்கு சரியாக ஒரு வெங்காயம் இருந்தது), கார சட்னி - இவ்வளவும் தோசை கூடவே வந்தன. ஆனாலும் தோசை காரமும், மசாலா சுவையும், சட்னி, சாம்பார் பக்கம் போக விடாமல் கையை கட்டி போட்டு விட்டன. 
                    
           எனக்கு தகவல் சொன்ன நண்பர்  நல்ல சாப்பாட்டு  ரசனை உள்ளவர்தான். 

'ஜில்'லுனு ஒரு காபி

'ஜில்'லுனு ஒரு காபி 
நான் ஒரு காபி பிரியன். பில்டர் காபி, Coffee cream பிஸ்கட், Cold Coffee-இப்படி எந்த வடிவில் coffee கிடைத்தாலும் ஒரு கை பார்த்து விடுவேன். 

Cold Coffee தயாரிப்பு முறை என்னவோ சிம்பிள் தான். ஒரு tablespoon instant காபி பொடி, தேவையான அளவு சர்க்கரை, அரை லிட்டர் பால்-இவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

பாலை நன்கு காய்ச்சி, ஆறியவுடன் freezerல் வைத்து குளிர வைக்கவும்.

Instant காபி பொடியை, சிறிதளவு சூடான தண்ணீரில் போட்டு நன்கு கலக்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். 

இந்த decoction, குளிர்ந்த பால் இரண்டையும் ஒன்று சேர்த்து  Blender அல்லது mixie jarல் போட்டு அடிக்கவும். நல்ல நுரை வரும் வரை அடிக்க வேண்டும்.

கோடைக்கேற்ற Cold Coffee ரெடி. விரும்பினால் இதில் ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் போடலாம்.

அதிக குளுமை வேண்டுவோர், கொஞ்சம் ஐஸ் க்யூப் போடலாம். ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். அதிக குளிர்ச்சி இருந்தால் சுவை தெரியாது. நாக்கிலும், பல்லிலும் படும் போது  ஷாக் அடித்த ஃபீலிங்  வரக் கூடாது.

Filter Coffee decoction வைத்தும் Cold Coffee போடலாம்.

பெங்களூருவில் Cold Coffee சூப்பராக இருக்கும். சென்னை தியாகராய நகரில் India Coffee Houseன் Cold Coffee நன்றாக இருக்கும். 

சில நாட்களுக்கு முன், சென்னை ராதாகிருஷ்ணன் சாலை Woodlands Restaurantல் Cold Coffee சுவைத்தேன். அருமையாக இருந்தது. Instant Coffee பொடி போட்டிருந்தார்கள். வெண்ணிலா ஐஸ்கிரீம் topping. சரியான குளிர்ச்சி மற்றும் சுவை. ஒரு முறை குடித்து பார்க்கலாம்.

Sunday 8 April 2018

பச்சை வாரண பெருமாள் கோயில்-ஆல்பம்


பூந்தமல்லி - நசரத்பெட்டை அருகில் உள்ள, அகரமேல் கிராமத்தில் அமைந்துள்ள , பச்சை வாரண பெருமாள் கோயிலின் சிறப்புகளை விளக்குகிறார் ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார். 

பச்சை வாரண பெருமாள் கோயில்

பச்சை வாரண பெருமாள் கோயில் 


பச்சை வாரண பெருமாள் கோயில்
அகரமேல் 

அகரமேல் பச்சை வாரண பெருமாள்
கோயில் - கொடி மரம் 
அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில்-
பலி பீடம் 

ஸ்ரீராமானுஜர்-அகரமேல் 
பச்சை வாரண பெருமாள் கோயில்


பச்சை வாரண பெருமாள் கோயில்-
கல்வெட்டு
பச்சை வாரண பெருமாள் கோயில்
நடை திறப்பு நேரம் 



பச்சை வாரண பெருமாள் கோயில்-கல் சிற்பம் 

கல்லில் சிற்பம்-அகரமேல் 
பச்சை வாரண பெருமாள் கோயில்

நாகர்-அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில்

இராவணன் தர்பாரில் ஆஞ்சநேயர் அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில்

பச்சை வாரண பெருமாள் கோயில்-கல் சிற்பம் 


பச்சை வாரண பெருமாள் கோயில்-
கல் சிற்பம் - 
பரசுராமர் 

பச்சை வாரண பெருமாள் கோயில்-கல் சிற்பம் 
பச்சை வாரண பெருமாள் கோயில்-கல் சிற்பம் 


பச்சை வாரண பெருமாள் கோயில்-கல் சிற்பம் 


கல்லிலே வீடு கட்டவா?


இந்த கோயிலில், கற்களால் வீடு கட்டி வைத்தால், விரைவில் சொந்த வீடு அமையும் என்றொரு நம்பிக்கை. 
பச்சை வாரண பெருமாள் கோயில்
அகரமேல் 


அமைவிடம் : 
பூந்தமல்லியில் இருந்து 3 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது. பூந்தமல்லி to காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள நசரத்பேட்டை வழியாக செல்ல வேண்டும். மேப்பூர்  கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் அகரமேல் வழியாகவே செல்கின்றன.

அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில் 


Saturday 7 April 2018

அகரமேல் பச்சை வாரண பெருமாள்

பக்தி உலா by வித்யா   



அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில் 


   புதிது புதிதாக கட்டப்படும் கோயில்களை விட பழமையான கோயில்களே என்னை கவர்கின்றன. அந்த வகையில் சென்னைக்கு மிக அருகில் ஒரு அக்ரஹாரத்துக்கு நடுவில் அமையப் பெற்றுள்ள கோவிலை கண்டு தரிசிக்கும் அநுபவம் எனக்கு வாய்த்தது.


      பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் உள்ள அகரமேல் என்ற இடம்தான் இந்த கோயில் அமைய பெற்றுள்ள புண்ணிய பூமி.

     
அகரமேல் -
பச்சை வாரண பெருமாள் கோயில்-
யானை சிற்பம் 




எல்லைபோல் அமையப்பெற்ற ஆஞ்சநேயர் கோயில், இருசாரியும் வீடுகள், ஒரு முன்மண்டபம், உள்ளே நுழைந்தால் பலிபீடம், துவஜஸ்தம்பம், மணிகள் அசைந்தாடும் கொடிமரம், குட்டியாய் ஒரு யானை சிற்பம், தனியே தாயார் சந்நிதி. ஆஹா.... மிக மிக அற்புதமான இடம். ஒரு விரலை மடக்கி நம்மை அழைத்து அருள் செய்கிறார் பெருமாள்.

      
  
பச்சை வாரண பெருமாள் கோயில் - அகரமேல்


  பெருமாள் கோவில்களுள் இது அவதாரஸ்தலம். அதாவது வைஷ்ணவத்திற்கு தொண்டாற்றிய மகான்கள் பிறந்த பூமிகளுள் ஒன்று.

        ராமானுஜர் துறவறம் மேற்கொண்டபோது ஒவ்வொன்றாக துறந்து கொண்டே வந்தாராம்.  முதலியாண்டானை துறக்கும்போது சற்றே கலங்கினாராம். ராமானுஜருக்கு அந்த அளவு தொண்டு செய்த அணுக்க தொண்டர் முதலியாண்டான். அவரது அவதார ஸ்தலம் இந்த புண்ணிய பூமி.

       சூரியா, கவுதம் மேனன் தயவில் வாரணம், என்றால் யானை என்று நாமறிவோம். . வாரணத்திற்கும் இந்த தலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.

       இங்கு சொல்லப்படும் புராணக்கதை மகாபாரதத்துடன் தொடர்பு உடையது. தர்மர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதனை செய்யவிடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர்  பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சைவாரண பெருமாள் என்று பெயர்.  புருஷமங்கலம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முதலியாண்டானை வணங்கினால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம்.  முதலியாண்டான் ராமரின் அம்சமாக கருதப்படுகிறார். இங்குள்ள அமிர்தவல்லி தாயாரை வணங்கினால் வம்ச விருத்தி கிட்டும். ஆண்டாள் தாயார்  திருமண பாக்கியம் தருபவர். புஷ்கரணி தர்மபுஷ்கர்ணி. தல விருக்ஷம் பலா.

    
 கல் ஜன்னல்-பச்சை வாரண பெருமாள் கோயில்-அகரமேல் 


    கோயிலின் சிறப்பு, நிறைந்து இருக்கும் சிற்பத்தூண்கள். தசாவதாரமும் செதுக்கப்பட்டுள்ளன. அற்புதமான கல் ஜன்னல் ஒன்று ராமர் சந்நிதி செல்லும்வழியில் காணப்படுகிறது. யாரோ புண்ணியவான்கள் அதில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். அருமை தெரியாமல் உடைத்தவர்களை அறைந்தால் கூட தப்பில்லை.  மிக மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது இத்திருத்தலம்.

     
அகரமேல் பச்சை வாரண பெருமாள் கோயில் கல்வெட்டு 


    நாங்கள் சென்றபோது கூட்டம் அறவே இல்லை. எங்கள் ஒருவருக்காக தாயார் சந்நிதியை திறந்து தரிசனம் செய்வித்தனர். எண்பத்தியிரண்டு வயதான ஸ்ரீனிவாச பட்டர் கோயிலின் தல வரலாறை தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைத்தார். பக்தர்கள் வருகைக்காக அழகாக  அலங்காரம் செய்து கொண்டு அமர்ந்திருக்கிறார் உற்சவர்.

          காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

        அந்த பட்டாச்சாரியார் உருக்கமாக வேண்டி சொன்னது ஒன்றே ஒன்றுதான்.  "இப்படி ஒரு கோயில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். எல்லோரையும் வர சொல்லுங்கள்"  என்பது மட்டுமே. தட்டில் தட்சிணை போட்டபோதுகூட "இவ்வளவு எதற்கு?" என்கிறார் ஸ்ரீனிவாசபட்டர். என்ன சொல்ல?

        இப்படியும் சில கோயில்கள் நம்மிடையே இருக்கிறது.  கட்டாயம் இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று வாருங்கள். பூவிருந்தவல்லியை அடைய சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உண்டு. அங்கிருந்து மிக அருகில் இருக்கிறது இத்தலம்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...