Tuesday 28 May 2013

ஐயங்கார் கல்யாண தளிகை

பல வருடங்களுக்கு முன், திருவையாறில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். கூப்பிடும் தூரத்தில் காவிரி ஆறு. அப்போது தண்ணீர் கரை புரண்டு ஓடியது. மாந்தோப்பு பார்த்த வீடு. வீட்டின் முகப்பில் இரு புறமும் அகண்ட திண்ணைகள். மூன்று படி ஏறி உள்ளே சென்றால் ஹால். ஹாலுக்கு நடுவில் முற்றம். முற்றம் தாண்டியதும்,  ஹாலுக்கு இடது பக்கமாக கிச்சன். வலது புறம் ஒரு ரூம். இரண்டுக்கும் நடுவில் புழக்கடை கதவு. வெளியே சென்றால், வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் தரும் தோட்டம். வீட்டின் வாசலில் இருந்து தோட்டம் வரை சென்று வந்ததும் கால் வலித்தது. 

தகவல் தெரிவிக்காமல் நான் சென்ற போது நேரம் பகல் 12மணி. கொல்லைப்புற தோட்டத்திலிருந்து real garden fresh காய்கள் பறித்து வரப்பட்டன. simple cooking. அரை மணி நேரத்தில் சாப்பாடு இலையில். தலை வாழை இலையில் சாப்பாடு போடுவது விருந்தினருக்கு அளிக்கப்படும் மரியாதை. மாசற்ற இயற்கை சூழலில், காவிரி தண்ணீர் தந்த அற்புத சுவையோடு கூடிய அறுசுவை விருந்து.

தமிழகத்தில் பிராமிணர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாம் வளமான ஆற்றங்கரை ஓரங்கள் தான். பாலாரின் ஓரத்தில் காஞ்சிபுரம், காவிரி டெல்டாவில் தஞ்சை மற்றும் கும்பகோணம், தாமிரபரணி தாலாட்டும் திருநெல்வேலி. இயற்கையின் கொடை அவர்கள் வாழ்வை வளமாக்கியது. கலைகள் வளர்ந்தன. உலகின் புராதன சாப்பாட்டு நாகரிகங்களில் ஒன்று உருவானது. சுவையான, 'ரிச்'சான, ஆரோக்கியமான சாப்பாட்டு முறை அது. பிராமணர்களின் கல்யாண அல்லது பண்டிகை கால உணவு பற்றி பார்ப்போம். எதை சமைப்பது, எப்படி சமைப்பது, எந்த வரிசையில் பரிமாறுவது, எப்படி சாப்பிடுவது என்று வரையறுக்கப்பட்ட சாப்பாட்டு கலாச்சாரம் அது. இதோ உங்களுக்காக..........

பரிமாறும் முறை 








இலையை அலம்பி, அதன் நுனி சாப்பிடறவாளுக்கு இட பக்கம் வர்ற மாதிரி போடணும். இலையின் மேல்பக்கம், இலைக்கு வெளியே, இடது ஓரத்தில் தீர்த்தம் ஒரு டம்ளரில் வைக்கணும்.




ஒரு சொட்டு பால் இலைக்கு நடுவில விடணும்.


இடது நுனி ஓரமா ஒரு துண்டு வாழைப்பழமும், சக்கரையும் போடணும்.



இலைக்கு நடுவில கீழ் பகுதியில சாதத்தை சாதிக்கணும். உருக்கின நெய்யை, சாதத்து மேல விடணும்.










பருப்பு  போடணும்.  


இலையோட  மேல் பகுதியில


கூட்டு, 









கறியமுது,      





தித்திப்பு பச்சடி,



 தயிர் பச்சடி சாதிக்கணும்.   





சாதத்துல குழம்பு 
சேக்கணும்.



அப்புறம், வறுவல், தயிர் வடை, அப்பளம் போடணும்.






குழம்பு சாதம் சாப்ட்டப்றம், சாதம் போட்டு சாத்தமுது குத்தணும்.



  சாத்தமுது  சாதம் சாப்பிடற போதே, 

                                                           
                                                           

                                                          இலையோட மேல்                       
பக்கத்துல,                                                sweet, காரம்,
                                                                               


      ஊறுகாய், கலந்த சாதம் இதெல்லாம் சாதிக்கணும்.

ஊறுகாயை இலையோட இடது பக்க ஓரமா சாதிக்கணும்.
 

அப்புறம்,     திருக்கண்ணமுது.                                                 

 





திரும்ப சாதம் போட்டு, தயிர் அல்லது மோர் குத்தணும். மோர் சாதத்துக்கு தேவை பட்டா தொட்டுக்க குழம்பு குத்தலாம்.

திருகண்ணமுதில் அப்பளத்தை  நொறுக்கி போட்டு சாப்பிடுறவாளும்  உண்டு.                                                                                         




       சாதத்துல, சிறிசா பள்ளம் பறிச்சு அதுக்குள்ள குழம்பு, சாத்தமுது, மோர் விட்டு சிந்தாம சிதறாம சாப்பிடுற அழகே அழகு. குறிப்பா, சாத்தமுது இலைய விட்டு ஓடாம பர பரன்னு சாப்பிடுறத விட உசந்த தியானம் இந்த லோகத்துல என்ன இருக்கு?


சமைக்கிற முறை 


வெங்காயம், பூண்டு, முருங்கை காய் , சுரைக்காய்,  பீர்க்கங்காய், முள்ளங்கி, கசப்பு சுவையுள்ள  காய்கறிகள்  சேர்க்கக்கூடாது. தேங்காய், ஜீரகம்  அரைச்சு விட்ட கூட்டு தான் செய்யணும். கறியமுதுக்கு தேங்காய் போடணும். மோர் குழம்பு,  இல்லேண்ணா, பருப்பு குழம்பு தான் செய்யணும்.கலந்த சாதம்னாலே அது புளியோதரைதான். குளித்து சுத்த பத்தமா தான் தளிகை பண்ணனும். விறகு அடுப்பில  சமச்சா, தேவாமிர்தமா இருக்கும். 


சாப்பிடுற முறை 




கை கால் அலம்பிண்டு, இலை முன்னாடி உக்காந்து, பகவானை தியானிக்கணும். சாதம் போட்டு நெய் குத்தின உடன், சாதத்தை தரையில சிந்தாமல் சாப்பிடணும். மேலே குறிப்பிட்ட பரிமாறும் வரிசை கிரமமா சாப்பிடணும். கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் இவற்றை இலையின் வலது பக்க ஓரமா வைக்கணும். சாதத்தை நன்னா பிசைஞ்சு சாப்பிடணும்.சாதத்தை உருட்டக்கூடாது. குழம்பில உள்ள காயை இலையில ஒரு பக்கமா எடுத்து வச்சிண்டு, மோர் சாதத்துக்கு அந்த தான்களை (குழம்பில உள்ள காய்) தொட்டுக்கணும். இலையில் பரிமாறிய பதார்த்தங்கள் எதையும் வீணடிக்கக்கூடாது. சாப்ட்டப்றம், நம்மை விட பெரியவா எழுந்தப்றம் தான் எழுந்துக்கணும். சாப்ட்டு முடிச்சப்றம், இலையை மடிக்கக் கூடாது.

07-06-2013
A VISUAL COMMENT SENT BY SUNDARRAMG THRU' e-MAIL 




Sunday 19 May 2013

சாத்துமுது என்கிற ரசம்


சாலிகிராமத்திலிருந்து  அ. சுந்தரம் விரும்பி கேட்டதால் இந்த ரெசிப்பி வெளியிடப்படுகிறது.

தேவையான  பொருள்கள் 

புளி

தனியா 

லுமிச்சம் பழம் அளவு புளி, 50 கிராம் துவரம் பருப்பு. வற்றல் மிளகாய் மூன்று, தனியா இரண்டு  ஸ்பூன், மிளகு சீரகம் ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன், கட்டி பெருங்காயம் சிறிதளவு. தக்காளி ஒன்று. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது. தாளிக்க நெய். கடுகு சிறிதளவு.  உப்பு    தேவையான அளவு.
                                                                                         
                                                                                      எப்படி  செய்வது ?

மிளகு 

துவரம் பருப்பு 



   கொத்தமல்லியை தழை தனியாகவும் காம்பு தனியாகவும் ஆய்ந்து வைத்து கொள்ளவும். புளியை கரைத்து, அடுப்பில் ஏற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.

வற்றல் மிளகாய் 

          தனியா, மிளகாய், மிளகு, சீரகம் இவை அனைத்தையும் எண்ணெய் இல்லாமல்  சிறிதளவு சூடு காட்டி மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.



           பருப்பை குழைய வேக வைக்கவும்.கொத்தமல்லி காம்பு , தக்காளி, கொர கொரப்பா அரைத்த பொடி இவற்றை புளி கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். குழைய வேக வைத்த பருப்பை தண்ணீர் விட்டு நன்கு கரைத்து கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும்.



கட்டி பெருங்காயம் 


சீரகம் 

    நுரைத்து வந்தவுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை தழையை தூவி அடுப்பை அனைத்து விடவும். நுரைக்க துவங்கிய உடனே அடுப்பை அணைப்பது மிகவும் முக்கியம். கொதிக்க விட்டால் ரசம் கசந்து விடும்.
 


  லுப்ப சட்டியை சூடாக்கி , ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, சிறு கட்டி பெருங்காயத்தை பொரித்து, கடுகை வெடிக்க விட்டு தாளிக்கவும்.
         
சிறிது நேரம் தட்டை போட்டு மூடி வைக்கவும்.  அப்படி மூடி வைத்தால்  தான்

வாசனை மாறாமல் இருக்கும்.





க்காளி இல்லாமலும் செய்யலாம்.


கொத்தமல்லி 

கருவேப்பிலை 

நெய்

                                                                  



கடுகு 





வேக வைத்த துவரம் பருப்பு 

உப்பு 

                                                           
                                                                    



புளிக்கரைசல் 

+

பொடித்தது 


கொதிக்க விடவும் 

கொதி வந்ததும் ...............

பருப்பு கரைசலை ஊற்றி...........

அடுப்பை சிம்மில் வைக்கவும் 

நெய், கட்டி பெருங்காயம், கடுகு தாளிக்கவும் 

மல்லி, கருவேப்பிலை 
தூவவும்.

ரசம் ரெடி 



சத்திற்கு பிராமணாள்(ஐயங்கார்) பெயர் சாத்துமுது. பிராமணாள் போஜன பிரியாள்.  அவர்கள், நன்கு ரசித்து சாப்பிடக்கூடிய உணவு உலக கனவான்கள். நச் என சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் உணவு கலாசாரம் அவர்களுடையது. அதிலும் குறிப்பாக வளம் கொழித்த பழைய தஞ்சை டெல்டா பகுதி பிராமணர்களின் உணவு ராஜ போஜனத்திற்கு ஒப்பானது.

சத்திற்கு சுவை தருவதில் புளிக்கு முக்கிய பங்கு உண்டு. படத்தில் காட்டப்பட்டுள்ள புளி, சற்றே கருமை நிறம் உடையது. பழைய புளி. செட்டிநாட்டு பகுதியில் (சிங்கம்புணரி) விளைந்த organic புளி.
















































































































சுர ரசம்



பத்திய சமையல்
தேவையான பொருள்கள்
   
    சிறிய எலுமிச்சம் பழம் அளவு புளி, மிளகு, சீரகம் தலா  மூன்று ஸ்பூன். உப்பு பெருங்காயம் தேவையான அளவு. தாளிக்க எண்ணெய் , கடுகு சிறிதளவு. கருவேப்பிலை இலை சிறிது.

  புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். புளிக்கரைசலை அடுப்பில் வைத்து உப்பை போட்டு கொதிக்க விடவும்.  கொதிக்க ஆரம்பித்தவுடன்  அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.  புளி வாசனை மாறிய பிறகு, மிளகு சீரகம் இரண்டையும் கொற கொறப்பாக அரைத்து,  கொதிக்கும் புளி கரைசலில் சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கருவேப்பிலை போட்டு, நுரை வந்தவுடன் இறக்கி விடவும். கடுகு தாளித்து கொட்டவும்.

     சுரம் வந்தவர்கள், இந்த ரசத்தை குழைந்த சாதத்துடன் சாப்பிட்டால் கசந்த வாய்க்கு இதமாக இருக்கும். உடல் வலி குறையும்.

      ந்த ரசம் பார்க்க சிறிது கருப்பாக இருக்கும்.

  வாய்க்கு வக்கணையாக சாப்பிட மட்டும் தான் food recipe என்றில்லை. உடலுக்கு ஒரு நோவு வரும்போது தான் என்ன சாப்பிடுவது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கே தான் நமது பாரம்பரிய சமையல் முறைகள் கைகொடுக்கின்றன. அதிக சுரம் இருக்கும் போது புழுங்கல் அரிசி கஞ்சியும், சுரம் குறைய தொடங்கிய நிலையில் சுர ரசமும் சாப்பிட்டு பாருங்கள். இதன் பலனை நீங்களே உணர்வீர்கள்.















Sunday 12 May 2013

கொள்ளு துவையல்

சமையலறையிலிருந்து..... 

                                                          எப்படி செய்தேன் ?                      


                                                           படம்  : ஸ்ரீவித்யா  ராமன்        

                                                      கொள்ளு துவையல்  


தேவையான  பொருட்கள்                                   



 கொள்ளு-1/2 கப்
     கடலை பருப்பு-1/4 கப்
         உளுத்தம் பருப்பு-1/4 கப்
              வற்றல் மிளகாய்-8
                   நெல்லிக்காய் அளவு புளி
                          உப்பு- தேவையான அளவு
                               பெருங்காயம்- சிறிதளவு

செய்முறை 

    இலுப்ப  சட்டியில் எண்ணெய் விடாமல் கொள்ளை நன்கு வறுக்க வேண்டும். வறுத்த கொள்ளை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய், பெருங்காயம்  இவை நான்கையும்  சிறிது எண்ணெய்  விட்டு, சிவக்க வறுக்க வேண்டும். நன்கு வெந்த கொள்ளு, சிவக்க வறுத்த பருப்புகள்,   மிளகாய்  மற்றும்  பெருங்காயம்   இவற்றை       தேவையான அளவு உப்பு சேர்த்து , மிக்சியில்     சிறிது       கொற கொறப்பாக அரைக்க வேண்டும். சாதத்தில்  நல்லெண்ணெய் விட்டு துவையலை பிசைந்து சாப்பிடலாம்.  

பலன்கள்

கொழுப்பு கரையும்.
உடல் இளைக்கும்.
சாப்பாடு ருசிக்கும்.

கொள்ளு--சில குறிப்புகள் 

  ந்தியாவின்  தென்கிழக்கு பகுதிகளில்தான்  கொள்ளு முதலில்       பயிரிடப்பட்டது.  கொள்ளு ஒரு சிறந்த anti-oxidant. நம் உடலில் ஏற்படும்  வளர்  சிதை மாற்றங்களை  தடுக்கும். ர்க்கரை நோயை தடுக்கும். ஸ்த்மா , வெண்புள்ளிகள், சிறுநீரகப்பை  கற்கள் மற்றும்  இதய  நோய்களுக்கான  மருந்தாக  கொள்ளு  நமது  பாரம்பரிய  முறைகளில்  நம்பப்படுகிறது. குறைந்த மாவுசத்தும் அதிகம் புரொட்டின் சத்தும் கொண்டது.  கால்சியம் மற்றும் இரும்பு சத்தும் அதிகம். ஆற்றலை தரக்கூடிய உணவு. யர்லாந்தின் குதிரை உணவு  ஓட்ஸ். நம் நாட்டின்  குதிரை உணவு கொள்ளு. ஓட்ஸ் விரும்பிகள்  அதைவிட சுவையான  கொள்ளை  உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.







    

   
       

    


        

    



        

   

Saturday 11 May 2013

கீரை சொல்லித்தரும் சந்தை படுத்தும் உத்திகள்


      என் பள்ளிப்பருவ நாட்கள் திருச்சி தில்லைநகரில் கழிந்தன. அன்றும் இன்றும் திருச்சி நகரின் இதயம் தில்லைநகர். இன்று அடுக்குமாடி கட்டிடங்களால் உரு மாறிப்போயிருக்கும் வயலூர், சோமரசம்பேட்டை பகுதிகளிலிருந்து தன் வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் கீரைவகைகளையும் தலையில் சுமந்து வருவார் ஒரு பாட்டி. அந்த எளிமையான ருசி மீண்டும் எனக்கு கிடைக்கவேயில்லை. சிறுவாட்டு பண சேமிப்பிற்காக பல கிலோமீட்டர் தூரம் தலை சுமையோடு தள்ளாடி வந்த வியாபாரி அவர். வருமான ரீதியாக சமூகத்தின் கடை நிலையில் உள்ள குடும்பங்களை எடுத்துக்கொண்டால் பெண்கள் தான் அதிகம் உழைக்கிறார்கள்.  கீரை விற்கும் ஆயாக்களும் அத்தகைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். இவர்களை அடிக்கடி அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்கள்  நவீன வணிகர்கள்.

        சந்தை படுத்தும் உத்திகளை மேலாண்மை கல்லூரிகளில் தான் கற்க முடியும் என்று நினைத்திருந்தேன் நேற்று வரை. இன்று காலை அந்த நினைப்பு மாறியது. இடம்-தியாகராய நகர் நடேசன் பூங்கா வாசல். நேரம்-காலை 7.15 மணி. திடீரென ஒரு டூ வீலரில் வந்தார்கள் இருவர். வண்டியை குறுக்கே நிறுத்தி ஒரு பேனரை கட்டினார்கள். நானும் இன்னொருவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். அங்கிருந்த சிறு வியாபாரிகள் தான் அதிக ஆர்வமானார்கள். மள மள வென்று கீரை கட்டுகள் வண்டி மேல் அடுக்கப்பட்டன. அட...நல்ல கீரை இன்று முதல் நடேசன் பார்க்கில் விற்கப்படுகிறதாம். பாய்ந்து வந்தார் பக்கத்தில் கீரை விற்று கொண்டிருந்த ஆயா. " என் வியாபாரத்தை கெடுக்கிறியே ? அப்பால போ." ஆயிரம் ரூபாய் முதலீடு அதோ கதி தானா என்ற கவலை அவருக்கு.

   ஆயாவிற்கு பதில் சொல்லக்கூட நேரமில்லை நல்ல கீரை விற்றவருக்கு. ஆர்கானிக் கீரை என்று தெரிந்ததும் மொய்த்து விட்டார்கள். அரை மணியில் அத்தனை கட்டுக்களும் காலி.  நஞ்சில்லா உணவு பற்றி நல்ல விழிப்புணர்வு வந்து விட்டது இப்போது. சுக்கான் கீரை விற்றார்கள். புதிதாக இருக்கிறது. கால்சியம் சத்து அதிகமாம். செவ்வாய் சனியில் வாரம் இருமுறை காலையில் நல்ல கீரை நடேசன் பூங்காவில் கிடைக்கும். 

     வாங்கியவர்களின் கேள்வியிலிருந்து ஒன்று புரிந்து கொள்ள முடிந்தது. கீரை என்பது எளிதாக கிடைக்க வேண்டிய பொருள். வாரம் இருநாள் காலையில் காத்திருந்து வாங்க வேண்டும்...லேட்டா போனா கிடைக்காது...இப்படி இருந்தால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைக்க மாட்டார்கள்.

           சில மாற்று யோசனைகள். ஆங்காங்கே கீரை விற்கும் பெண்கள் மூலமாகவே நல்ல கீரையையும் விற்கலாம். சுய உதவி குழு பெண்கள் கூட இதற்கு பொருத்தமானவர்கள் தான். மக்கள் கூடும் இடங்களில் ஒரு கலர் குடையின் கீழ் கடை பரப்பலாம். தள்ளு வண்டிக்காரர்கள் உதவியுடன் தெரு தெருவாக விற்கலாம்.

            ஆர்கானிக் உணவு பொருள் விற்பனையில் இன்று நவீன உத்திகளை  காண முடிகிறது. Face bookம் வலை தளங்களும் நன்கு பயன் படுத்த படுகின்றன. திருநின்றவூர் அருகில் விளைந்த கீரையை தியாகராய நகரில் பசுமை மாறாமல் கொடுக்கிறார்கள். e-mailம் smsம் உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கின்றன. பாவம் கீரை விற்கும் பாட்டிகள்!

பின்குறிப்பு: என் பள்ளிப்பருவ நாட்களில் நான் ருசித்த அந்த எளிமையான, உண்மையான கீரை ருசி மீண்டும் கிடைத்தது.

பின் பின் குறிப்பு: நல்ல கீரை  வாங்க தொடர்பு எண்கள்-9094758930  மற்றும் 9043426826.


Wednesday 8 May 2013

குதிரைவாலி தெரியுமா ?

  னது எழுத்துலகில் என் மனைவி சம உரிமை கேட்டதால் இந்த பக்கம் அவரால் நிரப்பப்பட்டுள்ளது. Over to Srividya Raman.  

 ன் கணவரின் ப்ளாக் பற்றி கமெண்ட் போஸ்ட்  செய்ய உட்கார்ந்தேன்  . மொத்தம் 58  page views வந்த நிலையில்  இதை எழுதுகிறேன்  sunday  evening   டிபன் செய்ய வேண்டாம் என்றுதான்   organic food mela  போகிறேன் என்று சொன்னவுடன் ஒ கே சொன்னேன். போய் விட்டு வந்ததில் இருந்து ஐயோ சாமி முடியல. ஒரே  புல்லரிப்புதான் போங்க.   கிராமத்து பாஷையிலே  சொன்னா   காணாததை கண்ட மாதிரி. நடுராத்திரி வரை புலம்பி தள்ளிவிட்டார்.  அப்படி இருந்துது இப்படி இருந்துது  என்று.  அடுத்த நாள்   அம்மாவிடம் கேட்டேன். வரகு சாமை தெரியுமா   என்று. ஓ குருவி சாப்பிடுமே அதானே  என்றார்.  கிராமத்தில் இருந்து வீட்டு  வேலை செய்ய வந்த  பெண்ணிடம் கேட்டேன் .  வரகு சாமை எல்லாம் கேள்வி பட்டிருக்கிறாரா என்று. பஞ்ச காலத்தில்  சாபபிடுவோம் என்றார். ஆகா கிராமத்தானுக்கே  பஞ்ச  காலத்தில்  சாப்பிடும் உணவு பட்டணத்தில் exhibition   போட்டு  விற்கிறார்களே என்றுதான் தோன்றியது.  ஒ.கே . சென்னை போன்ற சிட்டியில்  எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இன்றைய நிலை.  ஆனால் ஒன்றை யோசித்து பார்த்தால் அடிப்படையில் நம்மை பிடித்துள்ள வெள்ளை மோகம்தான் முழுவதும்  அரிசியில் கொண்டு விட்டுவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.   எளிய  மனிதனின்  உணவு சிறு தானியம் .      இன்று seed   bankல்     இருந்து   இளைஞர்கள் நோக்கி  வந்து கொண்டிருக்கிறது. 

 ன்றைய  இளைஞர்கள் பீட்சா burger இடம்  இருந்து  விடுதலை  பெற்று  native food  எனப்படும்   சிறு தானியம்  பக்கம்  திரும்பியது  சந்தோஷம்தான்.  அடிப்படையில் ஒன்றை  புரிந்து  கொள்ளாமல் போனதன் விளைவுதான்  (waste)fast food மோகம். .     சிறு தானியம் எல்லாம் நம்ம  claimate க்கு தகுந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டது  . இதை புரிந்து கொள்ளாமல் எதை  எதையோ  தின்று முடித்துவிட்டு  இப்போது  குதிரைவாலிக்கு கொடிபிடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.   better late than never.  

  ப்ப எங்க வீட்டில் கொள்ளு துவையல்தான் . வரகு அரிசி பொங்கல்தான்.  சாமை தயிர் சாதம்தான். சாப்பிட நல்லாதான் இருக்கு (நல்லா வெட்டு வெட்டுன்னு  வெட்டியிருக்காங்க நம்ம ஆளுங்க)    நீங்களும் ஒருநாள் வர்றீங்களா ?

Sunday 5 May 2013

பறவை போல் உணர்ந்தேன்

அதிர்ச்சியில் ஆயா ?
அரைக்கீரை விற்கிறான் அம்பானி !

   பிரபல தமிழ் பத்திரிகையில் சில  வருடங்களுக்கு முன் படித்த ஹைக்கூ. சிறு வணிகத்தில் பெரும் கடைகளின் ஆதிக்கத்தை பொட்டில்  அறைந்தாற்போல் சொன்ன வரிகள் அவை. இன்று திரும்பவும் அந்த வரிகள் தந்த அதிர்ச்சியை உணர்ந்தேன், ஆனால் நல்ல விதமாக. இளைஞர்கள் கீரை விற்ற காட்சியை பற்றித்தான்  கூறுகிறேன். நல்ல சோறும், நல்ல கீரையும் இனைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழாவிற்கு சென்றிருந்தேன். திருவான்மியூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளியில் நடந்தது.

   இளைஞர்கள் (இருபாலரும்) தான் அதிகம் காணப்பட்டனர். நூறு ரூபாயில் திருப்தியான இரவு உணவு. சுக்கு வெள்ளம் கலந்த பானகம் ஒரு பேப்பர் கப்பில். அரைக்கீரை பொரியல்,திணை இனிப்பு பொங்கல்,திணை சாம்பார் சாதம்,வரகு கூட்டாஞ்சோறு அப்புறம், சாமை தயிர் சாதம். இவ்வளவுதான் மெனு. பாக்குத்தட்டில் பப்பே ஸ்டைலில் பரிமாறப்பட்டது.

   அரிசி இல்லாத உணவு.நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கிறது. கேழ்வரகு நமக்கு பரிச்சயம் தான். திணை,சாமை,வரகு? சில மாதங்களுக்கு முன் இது பற்றி பலரிடம் பேசினேன். பறவைக்கு போடும் தானியம் தானே என்ற பதிலே கிடைத்தது. கிராம பாரம்பரியத்திலிருந்து வந்த என் நண்பர் ஒருவருக்கு இவ்விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தன. ஆனால் நாங்களே விட்டொழித்து விட்ட உணவு பழக்கங்கள் பற்றி கேட்கிறீர்களே என்றார்.

  சிறு தானியங்களை அரிசி போல் சுவையாக சமைக்க முடியும் என்று உணர்த்தினார்கள். வெள்ளை சர்க்கரை இல்லாத இனிப்பு பொங்கல்.பிரியாணியை நினைவூட்டிய கூட்டாஞ்சோறு. நம் கிராம மக்களுக்கு intellectual property rightsக்கான பணத்தை அமைப்பாளர்கள் தர வேண்டும் என நினைத்தேன். சாம்பார் சாதம் கொஞ்சம் dryயாக இருந்ததாக சிலர் கூறியது காதில் விழுந்தது. தயிர் சாதத்தில் நன்கு கலப்படாத கட்டிகள் தட்டுப்பட்டது. ஆனாலும் சுவை அருமை. அளவான உப்பு, காரம். உடல் நலத்திற்கு உகந்தது.

  ஆயுர்வேத, சித்த மருத்துவர்களும் இன்று சிறு தானிய சமையலை பரிந்துரைக்கிறார்கள். சிறு தானியங்களில் மிகுந்திருக்கும் கால்சியம், இரும்பு மற்றும் நார்சத்துக்களும், குறைந்திருக்கும் கார்போஹைட்ரேட்டும் தான் இதற்கு காரணம். Gluten இல்லாத உணவாகையால், சிறுதானியங்கள் யாருக்கும் ஒவ்வாதவை அல்ல. கம்பு மட்டும் தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வேண்டாம் என்கிறார்கள். Thyroid சுரப்பி வேலை செய்யாதவர்களுக்கு மட்டும் சிறுதானியங்கள் வேண்டாம் என்கின்றனர்.

   சமைத்து எடுத்து வந்ததால் சூடு இல்லாதது சிறு குறைதான். ஒரே தட்டில் சாதங்கள் கலவையாகி இனிப்பும், காரமும் stereo effectல் சுவைத்தேன். அளவு சாப்பாடா  இல்லை திரும்ப கேட்கலாமா என்று தயக்கம். பலரும் குடித்த தம்ளரில் தண்ணீர் கொடுத்தார்கள். சிறு கீரை பொரியல் தவிர தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. சாமை வடை (ஆமை வடையை மறந்து விடுங்கள்) இருந்திருந்தால் சாம்பார் சாதத்திற்கு நல்ல துணையாக இருந்திருக்கும். தயிர் சாதம் தனி ஆவர்த்தனத்துக்கு உகந்தது அல்ல. சிறு தானிய சுவை இக்குறைகளை சிறுமை படுத்தி விட்டது.

   நல்ல கீரை நிறுவனத்திலிருந்து நல்ல கீரை விற்றார்கள். கட்டு பதினைந்து ரூபாய்.

  உணவு எப்படி தயாரித்தார்கள், ரெசிப்பி என்ன என்று அமைப்பாளர்கள் தெரிவித்தால் உங்களுடல் பகிர்ந்து கொள்வேன்.

    இளைஞர்கள் எப்போதும் புதுமை விரும்பிகள். உடையிலும் சரி உணவிலும் சரி அவர்கள் தான் நாகரிக தூதுவர்கள். பதினைந்து வருடங்களுக்கு முன் பீட்சா   இளைஞர்களை பற்றிக்கொண்டது. அவர்கள் இன்று நடுத்தர வயதை கடந்து விட்டதால்  அனைத்து வயதினரும் ஆதரிக்கும் உணவாக பீட்சா இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பாரம்பரிய உணவிற்கு திரும்பியிருக்கிறார்கள்.

    எளிதில் மாறி விடும் பேஷன் போல் அல்லாமல் இது மக்கள் இயக்கமாக வேண்டும். அது எப்படி சாத்தியம்? சிந்திப்போம்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...