Sunday 11 October 2015

நீயும் நானும் ஜோடி

ஜாடிக்கேத்த மூடி போல...காலை நேரத்து ஹிந்து பேப்பரும் பில்டர் காபியும் போல...

உணவு வகைகளில் சில இணைபிரியா ஜோடிகள் உண்டு.

இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று சில சாப்பாட்டு ரசனைகள் உண்டு.

அப்படிப் பட்ட சில ஜோடி உணவுகளை பட்டியல் இட்டு பார்த்தேன்.

பசிக்காக  சாப்பிடுவோர் அல்லாமல், ருசிக்காக  சாப்பிடுவோர் மட்டும் மேலே படிக்கலாம்:
சுட்ட அப்பளம் 




வத்த குழம்பு -
(மணத்தக்காளி)வத்த குழம்பு 



                  மோர் குழம்பு பருப்பு உசிலி

          சுட்ட அப்பளம் 






பாயசம் அப்பளம் 


பாயசம்                                                                               அப்பளம் 


பொரித்த அப்பளத்தை பாயசத்தில் நொறுக்கி போட்டு....


பருப்பு பொடி சாதம் - காய்ச்சிய அப்பளம் 






கடுத்த மாவு தோசை - புளி மிளகாய் பச்சடி



பலாச்சுளை - தேன்

வறுத்த வேர்க்கடலை - வெல்லம்

அடை - அவியல் 




எதுவும் தொட்டுக் கொள்ளாமல் சாப்பிட்டால் கூட அடை நன்றாக இருக்கும். அவியல், வெண்ணெய்-வெல்லம், மிளகாய் பொடி-நல்லெண்ணெய், தேங்காய் சட்னி  இவை அனைத்துமே அடைக்கு super combination தான்.

மிளகு குழம்பு - பருப்பு துவையல்
 வெந்தய குழம்பு - சுட்ட அப்பளம் 
 கார குழம்பு - மசால் வடை, தக்காளி பச்சடி 
பருப்பு குழம்பு - தேங்காய், பருப்பு சேர்த்த பொறியல்
பருப்பு சாதம் - அரைத்து விட்ட சாம்பார்
தேங்காய் சாதம் - அரைத்து விட்ட கூட்டு
 எலுமிச்சை சாதம் - பொறித்த வடாம் 
ரசம் சாதம் - பொறித்த அப்பளம்
பருப்பு ரசம் - உருளை கிழங்கு வதக்கல்
சீரக ரசம் - தேங்காய் துவையல்
எலுமிச்சை ரசம் - 
(வாழைக்காய், உருளை கிழங்கு, கத்தரிக்காய் ) வதக்கல்
புளியோதரை - அவியல், பொறித்த வத்தல், வடகம்
 வெண் பொங்கல் - தேங்காய் சட்னி 
 வெண் பொங்கல் - கத்தரிக்காய் கொத்சு 
 மாவு உப்புமா - பருப்பு குழம்பு 
 நொய் உப்புமா - கததரிக்காய் புளி கொத்சு 
 பூரி - கிழங்கு 
 பூரி  - பாசந்தி 


சிலர்....

 பூரி - தேங்காய் சட்னி 
 சப்பாத்தி - குருமா 

சிலர்....

 சூடான சப்பாத்தி - சர்க்கரை+உருக்கிய நெய் 
தயிர் சாதம் - மாங்காய் ஊறுகாய்
 தயிர் சாதம் - மோர் மிளகாய் (தஞ்சாவூர் குட மிளகாயாக இருந்தால் இன்னும் உசிதம்)
பழைய சாதம் - மாவடு
 பழைய சாதம் - சின்ன வெங்காயம் 
இட்லி - மிளகாய் பொடி - நல்லெண்ணெய் 
 இட்லி - சர்க்கரை 
 இட்லி - தயிர் 
ஆப்பம்-தேங்கா பால்

சிலர்....

தயிர் சாதம் - மாம்பழம்

Main Dishக்கு ஏற்ற side dish செய்வதுதான் வழக்கம். ஆனால் சில side dish சுவைக்காகவே  main dish செய்யப் படும். 

சுட்ட கத்தரிக்காய் பச்சடி, டாங்கர்மா பச்சடி (உளுந்த மாவு பச்சடி), வாழைக்காய் பொடி (பொடிமாஸ் அல்ல), புளி மிளகாய் பச்சடி, மல்லி தொக்கு  இவையெல்லாம் மேலே சொன்ன listல் வரும். புளி குழம்பு, வத்தல் குழம்பு இவற்றுக்கு சுட்ட கத்தரிக்காய் பச்சடியும், டாங்கர்மா பச்சடியும் நன்றாக இருக்கும். மோர் சாதத்திற்கு மல்லி தொக்கு அருமையாக இருக்கும்.

குழம்பு சாதம், ரசம் சாதம், வத்த குழம்பு சாதம், புளி குழம்பு சாதம், கூட்டு சாதம், பருப்பு பொடி சாதம், கொத்தமல்லி பொடி சாதம், தேங்காய் பொடி சாதம், எள்ளு பொடி சாதம், கருவேப்பிலை பொடி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், கத்தரிக்காய் சாதம், புளியோதரை, துவையல் சாத வகைகள்   இவை அனைத்திற்கும் ஏற்ற உடனடி ஜோடி பொறித்த அப்பளம். பொறித்த அப்பள பூவும் ditto. உருளை கிழங்கு, வாழைக்காய் சிப்சும் இந்த ரகம்தான். 

இதேபோல் வதக்கல் வகை அனைத்தும் (வாழைக்காய், உருளை கிழங்கு, கத்தரிக்காய் ) அனைத்து சாதங்களுக்கும் தொட்டு சாப்பிட ஏற்றவை.

2 comments:

Unknown said...

inda madiri ore nallil aaasayai kilapinal enna seyya. sappitta pinnarum pasi edukkum.
aha enna poruththam, emakkul inda poruththam. Nandraha irum ayya samy.

நெல்லைத் தமிழன் said...

மாவு உப்புமா - பருப்பு குழம்பு - இது என்ன காம்பினேஷன்? நல்லாவே இருக்காது (அரிசிமா உப்புமா என்று புரிந்துகொண்டு).

அரிசி உப்புமா-தேங்காய்த் தொகையல்

இட்லி-சர்க்கரையா? இது உடம்பு சரியில்லாதவர்கள் சாப்பிடும் காம்பினேஷனாச்சே

தயிர்சாதம்-மாம்பழம் - இப்படிச் சாப்பிடும் புண்ணியவான்'களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடிக்காது (புண்ணியவான்'களை அல்ல, இந்த காம்பினேஷனை). சிலர், தயிர்சாதம்-மிக்சர் கூட சாப்பிடுவார்கள்.

உருளைக்கிழங்கு வதக்கல் எழுதினவங்க, சேம்பு ரோஸ்டை மறந்தது ஏனோ?

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...