தவல வடை |
சிறு வயதில் வெங்கல பானையில் தட்டிய தவல அடையை (thavala adai) சாப்பிட்ட நினைவு இன்னமும் பசுமையாக இருக்கிறது. அப்புறம் அந்த வழக்கம் மாறிவிட்டது. ரொம்ப நாளைக்கப்புறம் திருச்சி ஆண்டார் வீதி கடைசியில், ஆண்டார் வீதி-வாணபட்டரை தெரு நால் ரோடு சந்திப்பில் இருக்கும் ராமா கபேயில் வாரம் ஒருமுறை தவல வடை (thavala vadai) சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியிலிருந்து காலை சென்னை புறப்படும் பல்லவன் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் தவல வடை கிடைக்கும்.
சென்னையில் இந்த மாதிரி தேடுதல்களுக்கு எல்லாம் நேரமில்லை. மார்கழி சங்கீத சீசன் கேண்டீன் செல்லும்போது சில பழைய நினைவுகள் தலைதூக்கும்.
இந்த வருட சீசனில் தவல வடை தேடுதல் வேட்டை துவங்கினேன். அப்போதுதான் எனது நண்பர் திரு. முரளி (அகில இந்திய வானொலி நிலையம்) தினமும் தவல வடை கிடைக்கும் இடம் ஒன்று சொல்கிறேன் என்றார். அவர் குறிப்பிட்டது தியாகராய நகர் பேருந்து நிலைய திசையில் இருந்து மாம்பலம் நோக்கி மேட்லி சுரங்கப் பாதையில் இறங்கி, சுரங்கப் பாதை முடிந்ததும் இடது புறம் யு டர்ன் அடித்தால், வலது புறம் இருக்கும் ஒரு சிறிய இனிப்பு கடை - திருநெல்வேலி மிட்டாய் கடை.... ஈஸ்வரன் கோவில் தெரு. பல முறை நான் அந்த கடையை இதற்கு முன் பார்த்திருக்கிறேன். சிறிய கடை என்ற அலட்சியத்தில் கடந்து சென்று விடுவேன்.
இந்த முறை உள்ளே சென்றேன். நிறைய loyal customers. நின்று சாப்பிடக் கூட இடமில்லை. பார்சல் வாங்க வருபவர்கள் தான் ஜாஸ்தி. சட்னி, சாம்பார் கிடையாது. தேவையும் இல்லை. சுவை குறைந்த பண்டத்துக்கு தான் சட்னி, சாம்பார் துணை தேவை. ஒரு வடை ஏழு ரூபாய்தான். தவல வடை மதியம் 1.30 மணியிலிருந்து கிடைக்கும். 3 மணி வரை சூடாகவே கிடைக்கிறது. மாலை 6 அல்லது 6.30 மணி வரை சற்றே ஆறிய தவல வடை கிடைக்கும். Supply till stocks last.
தவல வடை-ஒரு பக்கம் சற்றே குழிவாக தெரியும். இது original தவல வடையின் அடையாளம் |
தவல வடை சுவை அருமையாக இருந்தது. நான் பல வருடங்களுக்கு முன் சாப்பிட்ட தவல வடையை அது நினைவூட்டியது. பொதுவாக பல வகை பருப்புகளை போட்டே தவல வடை செய்யப் படுவதால், " பருப்பு வடைக்கும் தவல வடைக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றுதானே! " என்று கேட்க தோன்றும். இதற்கு பதிலாக பருப்புகளோடு ஜவ்வரிசி சேர்த்து செய்தால்தான் அது தவல வடை என்றும் சிலர் நினைக்கிறார்கள்.
ஜவ்வரிசியின் கர கர சுவை விரும்புவோர் அதனை சேர்த்தும் செய்யலாம். ஆனால் Original தவல வடை ரெசிபியில் ஜவ்வரிசி கிடையாது. வெங்காயம் கூட கிடையாது. மிளகு கிடையாது. இப்படி சுவையூட்டிகள் எதுவும் இல்லாமலே அற்புத சுவை தருவது தவல வடையின் சிறப்பு. அதை செய்பவர்களின் கைவண்ணம். வெங்காயம் இல்லாததால் ஆறினால் கூட சுவை குறையாது. சூடாக சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
திருநெல்வேலி மிட்டாய் கடை நடத்தும், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட திரு. ராமகிருஷ்ணன் (044-2489 8350) அவர்களுடன் பேசினேன். "
" நீங்கள் எப்படி தவல வடை செய்கிறீர்கள்? சொல்ல முடியுமா ?" என்று கேட்டேன். சொன்னார். அவருக்கு என் நன்றி.
" நீங்கள் எப்படி தவல வடை செய்கிறீர்கள்? சொல்ல முடியுமா ?" என்று கேட்டேன். சொன்னார். அவருக்கு என் நன்றி.
முன்னர் மேற்கு மாம்பலம் ஞானாம்பிகாவில் எப்படி தவல வடை செய்கிறார்கள் என்று பார்த்தோம். அதற்கும் திருநேல்வேலி மிட்டாய் கடை தவல வடைக்கும் செய்முறையில் சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன. இதோ அந்த ரெசிபி.
தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு - 1/2 கிலோ
கடலை பருப்பு - 3/4 கிலோ
பாசி பருப்பு - 1/4 கிலோ
பச்சை அரிசி - 3/4 கிலோ
பச்சை மிளகாய் - உங்கள் கார தேவைக்கேற்ப
வர மிளகாய் - உங்கள் கார தேவைக்கேற்ப
தேங்காய் -2
இஞ்சி - சிறிது
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படி செய்வது தவல வடை?
அரிசி, பருப்பு வகைகளை (வர மிளகாயும் சேர்த்து ) ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் நீரை வடித்து விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இரண்டையும் சேர்க்கவும்.
ஜாங்கிரி தவி |
ஒரு ஜாங்கிரி தவியில் நிறைய எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அரைத்த மாவை வடை போல் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். (ஜாங்கிரி தவி என்பது ஜாங்கிரி, மற்ற இனிப்புகள் பொரிக்க பயன்படுத்தப் படும் தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரம்).
தவல வடை ரெடி.
தவல வடை |
1 comment:
yes it is true and right that one side of the vada will be slightly deepened. I had seen that when frying. A very correct observation. Keep it up.
Post a Comment