பல தான்ய குழம்பு |
வெள்ளை காராமணி |
சிவப்பு காராமணி |
சோயா |
பட்டாணி | தலா 2 ஸ்பூன்
கருப்பு கொண்டை கடலை |
வெள்ளை சன்னா |
ராஜ்மா பீன்ஸ் |
சாம்பார் பொடி - 2 spoon
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிதளவு.
கத்தரிக்காய் - 4
பச்சை மிளகாய்-2
கடலைகள் அனைத்தையும் 5 மணி நேரம் அல்லது முதல்நாள் இரவே ஊற வைத்து, தண்ணீரை வடித்து பின் வேறு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை கரைத்து, அடுப்பில் வைத்து, சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும். ஒரு கொதி வந்ததும் கத்தரிக்காயை நறுக்கி சேர்க்க வேண்டும். மிளகாயை கீறி சேர்க்கவும். கத்தரிக்காய் பாதி அளவு வெந்ததும், வேக வைத்த கடலைகள் அனைத்தையும் நீர் வடித்து, சேர்க்க வேண்டும். கொதித்து சுண்டியவுடன், கருவேப்பிலை சேர்த்து, தாளித்து கொட்டி இறக்கவும்.
பலதான்ய குழம்பு தயார்.
சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும். இரவு வரை கெடாது.
No comments:
Post a Comment