Wednesday, 15 January 2014

கிழக்கு மாட வீதி பஜ்ஜி கடை

கிழக்கு மாட வீதி பஜ்ஜி கடை 
தெருவோர உணவகங்களுக்கு (street food, roadside eateries) என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. எளிமையான ஒன்றிரண்டு உணவுகள்...விலை மலிவு...சுவை அதிகம்...இவைதான் தெருவோர உணவகங்களின் தாரக மந்திரம். பெரும்பாலும் இந்த கடைகளின் தனிப் பட்ட சுவைக்காகவே கூட்டம் கூடுகிறது.

அஜினோ மோட்டோவையும், மசாலா என்ற பெயரில் ஒரு கிலோ மீட்டர தூரத்திற்கு கண் எரிய வைக்கும் கலர் கலரான பொடிகளையும் தூவி, engine oil போன்ற எண்ணையில் பொறித்த பரோட்டா, சால்னா விற்கும் ரோட்டோர கடைகளுக்கும், நான் சொல்லும் ரோட்டோர கடைகளுக்கும் வித்தியாசம் உண்டு. முதல் வகை கடைகள் தடை செய்யப் பட வேண்டியவை. இரண்டாம் வகை கடைகள் ஆதரிக்கப் பட வேண்டியவை. 

இந்த தெருவோர உணவகங்கள் பெரும்பாலும் தரமான, சுத்தமான உணவுகளை வழங்குகின்றன. நின்றபடி சாப்பிட்டு உடனே கிளம்பி விடலாம். 

திருச்சி N.S.B. ரோட்டில் ஒரு சந்தில் ஸ்ரீரங்கத்து ஐயங்கார் கடை இருந்தது. இரவு 9க்கு மேல்தான் கடை ஆரம்பிக்கும். இரவு 12 மணி தாண்டி கூட வியாபாரம் களை கட்டி இருக்கும். வெறும் வர மிளகாய் வறுத்து, உப்பு போட்டு கொர கொரப்பாக அறைத்த இட்லி மிளகாய் பொடி அந்த கடையின் usp. திருச்சியின் பிரபல ஹோட்டல் அதிபர்கள் கூட அங்கே வந்து சாப்பிடுவார்கள். 

அதுபோன்ற ஒரு கடை சென்னை மைலாப்பூர் கிழக்கு மாட வீதியில் பிரசித்தம். இது பஜ்ஜி கடை. வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, உருளை கிழங்கு பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, காலிஃப்ளவர் பகோடா ,ஆனியன் பஜ்ஜி, ப்ரெட் பஜ்ஜி ...அவ்வளவுதான் மெனு. ஒரு பஜ்ஜி ஏழு ரூபாய். நான் போனபோது நிற்க இடம் இல்லாத அளவு கூட்டம். சிறிது நேரம் காத்திருந்து சற்று கூட்டம் குறைந்ததும் போட்டோ எடுத்தேன். இல்லாவிட்டால் தலைகள்தான் தெரியும். பஜ்ஜி சுவை, தரம் இரண்டிலுமே superb. மத்தள நாராயணன் தெருவில் இருந்து வரும் பொழுது கபாலீஸ்வரர் சன்னதி தெரு தாண்டியதும் உடனே வலது புறம் பார்த்தால் இந்த மாலை நேர பஜ்ஜி கடை தெரியும். 

மைலாப்பூர் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடியேறியவர்கள் இந்த கடை பஜ்ஜிக்காகவே வந்து போகிறார்கள். நீங்களும்தான் போய் பாருங்களேன்.



No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...