மஞ்சள் கொத்தும்...இஞ்சி கொத்தும்...சென்னை பிராட்வேயில் |
பொங்கலுக்கு செங்கரும்பு....மயிலையில் |
செழுமைக்கு அடையாளம்...புல் கொத்துகள்....சென்னை பிராட்வேயில் |
கிராமங்களில் மண் பானையில் பொங்கல் வைப்பார்கள். தெருக்களில் வெட்ட வெளியில் வரிசையாக பொங்கல் பானைகளில் பொங்கல் பொங்கும் அழகே தனி. நகரங்களில் வண்ணம் பூசிய designer பானைகள் கிடைக்கின்றன. எங்கள் வீட்டில் வெங்கல பானையில் பொங்கல் வைப்போம். வெங்கலம் கனமாக இருக்கும். அதிக நேரம் சூட்டினை தக்க வைக்கும்.
இனி சங்கராந்தி சர்க்கரை பொங்கல் பற்றி:
எப்படி செய்வது?
Designer பொங்கல் பானைகள் |
பொங்கல் பானைகள் - கெனால் பேங்க் ரோட்டில்.... |
சக்கரை பொங்கல் |
தேவையான பொருள்கள்
புது அரிசி - 2 டம்ளர்
வெல்லம் (பொடித்தது) - 2 டம்ளர்
பயத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
பால் - 1/2 லிட்டர்
நெய் - 250 கிராம்
ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை - தாராளமாக
ஜாதிக்காய், குங்குமபூ இரண்டும் கூட சேர்க்கலாம்.
எப்படி செய்வது?
புது அரிசியை நன்கு களைந்து கொள்ளவும். அரிசி களைந்த கழுநீரையும் சேகரித்து கொள்ளவும். தண்ணீருக்கு பதில் இந்த கழுநீரை வெங்கல பானையில் ஊற்றி கொதிக்க வைக்கவும். சிறிது சூடேறியதும் பாலையும் கொட்டி, வெங்கல பானையை கனமான பாத்திரத்தால் மூடி, தொடர்ந்து கொதிக்க விடவும். பால் கொதித்து பொங்கியதும் அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் போட்டு வேக விடவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு சூடு காட்டினால் வெல்லம் கரைந்து விடும். கரைந்த வெல்லத்தை வடிகட்டி பொங்கல் பானையில் சேர்க்கவும்.
நன்கு கிளறி, ஏலக்காய், நெய் சேர்த்து, நெய்யில் பொறித்த முந்திரி, உலர் திராட்சை போட்டு, மீண்டும் கிளறி இறக்கவும்.
வெந்ததும்...
வெல்லம் சேர்த்து.... |
வெல்லம் கரைந்ததும்.... |
ஏலக்காய் சேர்த்து...... |
நெய் சேர்த்து.... முந்திரி, உலர் திராட்சை நெய்யில் வறுத்து போட்டு.... |
சர்க்கரை பொங்கல் ரெடி |
No comments:
Post a Comment