Monday, 13 January 2014

நெல்லிக்காய் பச்சடி

நெல்லிக்காய் பச்சடி

தேவையான பொருள்கள்

நெல்லிக்காய் - 4
தேங்காய் கீறு - 2
பச்சை மிளகாய் - 1/2 மிளகாய் 
தயிர் - 3 கரண்டி.
உப்பு - தேவைக்கேற்ப.
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - சிறிது. 
கடுகு, பெருங்காயம்  - தாளிக்க 


துவாதசி அன்று நெல்லிக்காய் பச்சடி செய்வார்கள். துவாதசி முதல் நாள் ஏகாதசி நாள்  முழுதும் விரதம் இருப்பார்கள். ஏகாதசி  விரதம் இருக்கும் முறையிலும் வேறுபாடு உண்டு. சிலர் துளசி தீர்த்தம் மட்டும் பருகுவார்கள். வேறு எதுவும் உண்ண மாட்டார்கள். சிலர் அரிசி குருணை சாதம் சாப்பிடுவார்கள். வயதானவர்கள் பெரும்பாலும் இப்படி ஏதாவது குறைந்த பட்ச உணவு உண்பார்கள். வட இந்தியாவில் சாபுதானா (ஜவ்வரிசி) சாப்பிடுவது விரதம் இருப்பவர்களுக்கு  அனுமதிக்கப் பட்ட ஒன்று. 

இப்படி விரதம் இருந்த வயிற்றை குளுமை படுத்த நெல்லிக்காய் பச்சடி உதவும். விட்டமின் C சத்து நெல்லிக்காயில் அதிகம். மார்கழி மாதம் நெல்லிக்காய் சீசன் என்பதால் இங்கே குறிப்பிட்டிருக்கும் முறையில் fresh நெல்லிக்காய் பச்சடி செய்வார்கள். 

நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் நெல்லி முள்ளி போட்டு வைத்து கொள்வார்கள். நெல்லிக்காயை சுக்காக  காய வைத்தால் அது நெல்லி முள்ளி. ('Nelli Mulli'is the dried version of gooseberry which can be preserved for a longer period). தமிழ் வருட பிறப்பன்று நெல்லி முள்ளி பச்சடி செய்வார்கள்.


எப்படி செய்வது?

நெல்லிக்காயை தண்ணீரில் வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக்கவும். தேங்காய் கீறுகளையும் சிறு சிறு துண்டுகளாக்கவும். உளுத்தம் பருப்பை, வெந்தயம் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு  சிவக்க வறுக்கவும். இவற்றுடன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, மிக்சியில் நன்கு அறைக்கவும். தண்ணீர் விடாமல், ஒரு கரண்டி தயிர் விட்டு அறைக்கவும்.  அறைத்து முடித்ததும் மீதி இரண்டு கரண்டி தயிரையும்  சேர்த்து, நன்கு கலந்து , கடுகு, பெருங்காயம்  தாளித்து கொட்டவும். 

நெல்லிக்காய் பச்சடி ரெடி.


நெல்லிக்காய் பச்சடி ரெடி 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...