இட்லி |
இட்லி ஃப்ரை |
காலை டிபனுக்கு செய்த இட்லி மீதமானால், அவற்றை வீணடிக்காமல் மாலையில் இட்லி ஃப்ரை ஆக்கி விடலாம். இப்போதெல்லாம் இட்லி மீதம் இல்லையென்றால் கூட இதற்காகவே இட்லி தயாரித்து ஃப்ரை செய்கிறோம். மாலை நேர காபியுடன் சாப்பிட சிறந்தது இட்லி ஃப்ரை . இதை தயார் செய்ய அதிக நேரமும் பிடிக்காது. ஹோட்டல்களில் கிடைக்கும் Fried idli ஐ விட இது ஆரோக்கியமானது. பயணங்களின் போது, இட்லி pack செய்து எடுத்து செல்பவர்கள் அவற்றின் மீது எண்ணெய் மிளகாய் பொடி தடவி எடுத்து செல்வார்கள். எண்ணெய், மிளகாய்பொடி இரண்டும் ஊறி சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். இட்லி ஆறிவிட்டதே தெரியாது. அந்த இட்லியின் சூடான version தான் இந்த இட்லி ஃப்ரை.
No comments:
Post a Comment