வாழைக்காய் ஃப்ரை |
வாழைக்காய் வதக்கல் வகைகளில் ஒன்று வாழைக்காய் ஃப்ரை.
வாழைக்காயை தோல் சீவி, வில்லை, வில்லையாக நறுக்கவும்.
நறுக்கிய வாழை வில்லைகளை மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேக வைக்கவும். வெந்தபின் தண்ணீரை நன்கு வடிக்கவும்.
ஒரு தட்டில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு மூன்றையும் தண்ணீர் விட்டு நன்கு குழைத்துக் கொள்ளவும். வேக வைத்த வாழை வில்லைகளில் இந்த குழைத்த பொடியை நன்கு தடவவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் இந்த வாழைக்காய் வில்லைகளை போட்டு மொறு மொறுவென்று வரும் வரை பெரட்டி எடுக்கவும். வில்லைகளை திருப்பி போட்டு இதேபோல் செய்யவும்.
No comments:
Post a Comment