Thursday, 16 January 2014

கோபூஜை

கோபூஜை 



ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்ட் நடத்தும் Goh SamrakshanaSala (Goshala, பசுக்கள் காப்பகம்), மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் இருக்கிறது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 15-01-2014 அன்று இங்கு கோபூஜை நடைபெற்றது. நல்ல கூட்டம். பக்தர்கள் அனைவரும் தனித் தனியாக பசுக்களுக்கு பூஜை செய்ய வாய்ப்பு கிடைத்தது. பசுக்களுக்கு பூ தூவி, குங்குமம் இட்டு, பழம், அகத்தி கீரை, சக்கரை பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர். சிறுவர்கள் அதிகம் வந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. கோபூஜை முடிந்ததும், கோஷாலாவை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் பசுக்களை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த கோஷாலாவில் பஞ்ச கவ்யம், வரட்டி ஆகியவை கிடைக்குமாம்.

பால் கறக்கும் எந்திரமாக கருதப் படும் பசுக்கள் படும் பாடு சொல்லி மாளாது. அதிகம் பால் கறக்க oxytocin ஊசிகள், கன்றுகளை கொன்று விடும் போக்கு, கறவை நின்றதும் அடிமாடாக்கும் அவலம் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 


காலையில் சூடான பில்டர் காபி, குழந்தைகளுக்கு பசும் பால். பெரியவர்களுக்கு பால் கோவா, பால் ஹல்வா, பனீர்....இத்தனைக்கும் பால் தரும் பசுக்களின் அவல நிலை நம்மில் பலருக்கு தெரியாது.

கோபூஜையில் தெரிந்த உணர்ச்சி பிரவாகம் மேலே சொன்னவற்றை தடுக்க உதவட்டும். நல்லதே நடக்கட்டும்.


பசு மாடு வளர்க்கும் பால்காரர்கள், வாடிக்கையாளர் வீடுகளுக்கு மாட்டு பொங்கல் அன்று மாலையில் பசுக்களை ஓட்டி செல்லும் வழக்கம் உண்டு. தியாகராயநகரில் ஒரு வீட்டில் நடந்த  கோபூஜை இதோ:




இனி, மீண்டும் மேற்கு மாம்பலம் கோபூஜை:










மாட்டுப் பொங்கல் அன்றும் அமாவாசை அன்றும் பசுக்களுக்கு ஏக உபசாரம்தான். ஆனால் அகத்திக்கீரையும்,பழங்களும், சக்கரை பொங்கலும் அளவுக்கு மீறி தருவதும் மாடுகளின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. இதையும் மனதில் வைத்துக் கொண்டால் மாடுகளுக்கும், நமக்கும் புண்ணியமாகப் போகும்.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...