வேர் கடலை சுண்டல் |
தேவையான பொருள்கள்
வேர் கடலை - 200 கிராம்.
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
சீரகம் - விருப்பப் பட்டால்.
தேங்காய் - விருப்பப் பட்டால்.
வர மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
சீரகம் - விருப்பப் பட்டால்.
தேங்காய் - விருப்பப் பட்டால்.
செய்வது எப்படி?
வேர் கடலையை, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து, ஊறிய வேர்கடலையை (தண்ணீருடன் ) உப்பு போட்டு, அடுப்பில் வைத்து வேக விடவும். வேர்கடலை நன்கு பதமாகும் வரை வேக வைக்கவும். வேர்கடலை வெந்ததும், தண்ணீரை வடித்து, ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வர மிளகாய் தாளித்து,பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு, தண்ணீர் வடித்த வேர் கடலையும் போட்டு, நன்கு கிளறி இறக்கவும்.
துருவிய தேங்காய் தூவி, பரிமாறவும்.
No comments:
Post a Comment