Friday, 17 January 2014

மயிலையில் நந்தி அலங்காரம்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நந்தி அலங்காரம்                       PHOTO:Sundarramg



மாட்டுப் பொங்கல் அன்று சிவ ஆலயங்களில் நந்திக்கு உணவு மாலைகளால் அலங்காரம் செய்கிறார்கள். இந்த தகவலை எனக்கு தந்து என்னை கபாலீஸ்வரர் கோயில் செல்ல தூண்டிய என் நண்பர் திரு. அனந்த பத்மநாபன் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வு நந்தி அலங்காரத்தை பார்த்தபிறகு மிக அதிகமானது.



அற்புதமான காட்சி. தேங்காய், லட்டு, அதிரசம், பாதுஷா, மைசூர்பாக், முறுக்கு, பேரிச்சை, ஜாங்கிரி, அத்திப் பழம், ஏலக்காய்.....இந்த லிஸ்ட் மிகப் பெரியது. இத்தனை இனிப்புகளையும் எப்படித்தான் மாலை ஆக்கினரோ  என்ற மலைப்பு இன்னமும் போகவில்லை. கீழே சக்கரை கட்டி பொம்மைகள், மனோகர கூம்பு உருண்டை ...இப்படி அந்த அலங்காரம் ரொம்ப பெரியது. நடுவில் ஒரு பெரிய லட்டு வைத்து அலங்காரத்தை முழுமை படுத்தி இருந்தார்கள்.

நமது ஆன்மீக நிகழ்வுகளில் நல்ல உணவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.



என்னுடன் வந்து படங்கள், வீடியோ எடுத்து தந்த நண்பர் Sundarramg அவர்களுக்கு எனது நன்றிகள். 



மயிலையில் நந்தி அலங்காரம் 
video: Sundarramg

                                                                                                                                                                         PHOTO: Sundarramg
                                                                                                                                                                      PHOTO: Sundarramg
                                                                                                                                                                          PHOTO: Sundarramg
                                                                                                                    PHOTO: Sundarramg
PHOTO: Sundarramg
PHOTO: Sundarramg




No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...